எல்ஐசி பங்குகள் விற்பனை.. தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள்.. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன்..; பட்ஜெட் 2021-22 ஒரு பார்வை

Budget 2021 - 20222021-22 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ..:

ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் 2021-22-ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு விடும்.

எல்ஐசி காப்பீடு நிறுவன பங்குகளை விற்பனை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2020-25-ஆம் ஆண்டுவரை ரூ.111 லட்சம் கோடி தேவைப்படுகிறது.

இந்த நிதியை உருவாக்குவதற்காக ரூ.20,000 கோடியில் மேம்பாட்டு நிதிக் கழகம் (டிஎப்ஐ) உருவாக்கப்படும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரி 10% இருந்து 15 % வீதமாக அதிகரிப்பு.

75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு.

நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம்.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இ-நாம் திட்டத்தின் கீழ் இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைப்பு.

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு. இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் என தகவல்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிப்பு.

அதன்படி பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 கூடுதல் வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என கூறப்பட்டது. ஆனால் இந்த புதிய வரியால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.

இத்துடன் சில பொருட்கள் மீதும் வேளாண் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆல்கஹால் 100%, தங்கம் மற்று வெள்ளி 2.5% , பாமாயில் 17.5% , சூரியகாந்தி எண்ணெய் 35%, ஆப்பிள் மற்றும் பட்டாணி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை – கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கப்படும் என்றும் தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

Most important things you need to know about budget 2021-2022

Overall Rating : Not available

Latest Post