தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடித்திருந்த படம் ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’.
இவை இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. கொரோனா ஊரடங்கால் த்ரிஷ்யம் 2 படம் ஓடிடியில் ரிலீசானது. இதிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
‘லூசிபர்’ வெற்றியைத் தொடர்ந்து விரைவில் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ப்ரோ டாடி’ படத்தில் நடிப்பார் மோகன்லால் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் த்ரிஷ்யம் கூட்டணி இணையவுள்ளது.
இவர்களின் புதிய படத்துக்கு ’12த் மேன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
முழு த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார்.
அனுஸ்ரீ, அதிதி ரவி, பிரியங்கா நாயர், ஷிவதா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
விரைவில் ’12த் மேன்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Mohan Lal and Jeethu Joseph joins for 12th man