ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை..; முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வேண்டுகோள்

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை..; முதல்வர் ஸ்டாலினுக்கு கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் ஜூன் 14 முதல் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியில்லை.

இவை தவிர மற்ற 27 மாவட்டங்களில் நாளை ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது…

“குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம்.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதல்வர் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று கமல் பதிவிட்டுள்ளார்.

MNM Leader Kamalhassan advice to TN CM Stalin

நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

நியாயமா இருங்க ரஜினி.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.; அன்று அடிப்பட்டு சொன்னீங்களே.. இன்று ‘அண்ணாத்த’ தடுக்குதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 கொரோனா 2வது அலையில் உயிர் சேதம் அதிகமாகி வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் உயிர்கள் இழப்பை பார்க்கிறோம்.

இந்த நிலையில் ஊரடங்கில் கிட்டத்தட்ட 40-45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது நாளை ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

நிதானமாக இருக்கும் மக்களே நிறைய இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

இதில் போதையில் இருக்கும் குடிகாரர்கள் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள்..? இதனால் கொரோனா தொற்று பரவல் அதிகமாகுமே தவிர சற்றும் குறையாது.

டாஸ்மாக் திறப்பு அறிவிப்பை மது பிரியர்கள் வரவேற்றாலும் பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர்.

கடந்தாண்டு அதிமுக அரசு டாஸ்மாக்கை திறந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது அப்போதைய எதிர்க்கட்சி திமுக.

திமுக கட்சியினர் ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு 10-05-2020 காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் டாஸ்மாக் கடை திறப்புக்கு அன்றைய அதிமுக அரசை கண்டித்து இருந்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்பதை வன்மையாக கண்டித்திருந்தார்.

“இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்”

இவ்வாறு பதிவிட்டு இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இவையில்லாமல் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் சந்திப்பில் கூட “சிகரெட் புகைப்பது மற்றும் மது அருந்துவதை நிறுத்துங்கள்.. நான் அடிப்பட்டு அனுபவப்பட்டு சொல்றேன். மதுவால் வாழ்க்கையை தொலைக்காதீர்கள்” என பேசியிருந்தார் ரஜினி.

கடந்தாண்டு டாஸ்மாக் திறப்புக்கு அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி இந்தாண்டு திமுக அரசை கண்டிக்கவில்லை.

மனதில் பட்டதை அதிரடியாக சொல்லும் சூப்பர்ஸ்டார் இன்னும் மௌனம் காப்பது ஏன்..?

திமுக சார்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

ஒருவேளை அவரது மௌனத்திற்கு காரணம் இதுதானா?

உங்கள் ரசிகர்களுக்கு நீங்க தான் சார் ரோல் மாடல்.. நியாயமா இருங்க ரஜினி சார்..!

Why Rajini is silent in TASMAC opening issue during lockdown

வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

வீட்டு உபயோக பொருட்கள் கடை மதியம் வரை.. டாஸ்மாக் கடை மாலை வரை.; வடிவேலு பாணியில் ஸ்டாலினை கிண்டலடித்த குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மே மாதத்தில் திறக்கப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்தது.

இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெலிவித்தனர்

திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் ஒரு படி மேலே சென்று ஆங்காங்கே கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய உத்தரவில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

ஆனால் மக்களின் வாழ்வை கெடுக்கும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதியளித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில்..

#tasmac is far more important than everything else. Wow!! What a thought!! உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??pls answer us மாண்புமிகு முதல் அமைச்சர் thiru @mkstalin அவர்கள்..

என வடிவேலு டயலாக்கில் ஸ்டாலினை கிண்டலடித்துள்ளார் குஷ்பூ.

முக ஸ்டாலின் என்ன பதில் சொல்வாரோ..?

Khushboo slams TN CM Stalin for opening Tasmac shops in lockdown

‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

‘வலிமை’ அப்டேட்.: படப்பிடிப்புக்கு வராத நடிகர்கள்.; வலியுடன் ரீ சூட் செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் அஜித்துடன், ஹூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில் வெகு நாட்களாக வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

இதனிடையில் வலிமை குறித்து பட இயக்குனர் வினோத் & அஜித் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா இருவரும் தங்கள் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது…

ஊரடங்குக்கு முன்னர் சீனியர் நடிகர்களை வைத்து காட்சிகள் எடுத்தோம். ஊரடங்குக்கு பின்னர் சூட்டிங் தொடங்கிய போது கொரோனா பயத்தால் அந்த சீனியர் நடிகர்கள் வரவில்லை.

எனவே புதிய நடிகர்களை வைத்து மீண்டும் அதே காட்சிகளை எடுத்தோம்.

வெளிநாட்டில் ‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்படவுள்ளது.

ஊரடங்கு முடிந்தபின் வெளிநாட்டுக்கு சென்று அந்த சண்டைக் காட்சியை எடுக்கவுள்ளனர்.

ஒருவேளை வெளிநாடு பயணம் ஊரடங்கால் தாமதமானால் மாற்று ஏற்பாடும் தயாராக உள்ளதாம்.

சண்டைக் காட்சிகள் தவிர சிறுசிறு பேட்ச் ஒர்க் உள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைப் பொறுத்தவரை, இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் முடிந்து விட்டது.

பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Ajith movie Valimai Final shoot schedule updates

நடிகர் வெற்றியின் ‘மெமரீஸ்’ படத்திற்காக பாண்டிராஜ்-இமான்-ரகுமான் கூட்டணி

நடிகர் வெற்றியின் ‘மெமரீஸ்’ படத்திற்காக பாண்டிராஜ்-இமான்-ரகுமான் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷிஜூதமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் எட்டுத் தோட்டாக்கள், ஜீவி போன்ற வெற்றி படங்களைக் கொடுத்த ஹீரோ வெற்றியின் அடுத்த படமான ‘மெமரீஸ்’ படத்தின் டீசர் இயக்குனர் பாண்டிராஜ் இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

டீசர் வெளியான சில மணிநேரங்களிலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் காதல் படமாக இருக்கும்.

மேலும் இப்படம் முற்றிலும் புதிய முயற்சி. இப்படத்தில் நடிகர் வெற்றியின் சிறந்த நடிப்பை காணலாம் என அப்படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் கூறியுள்ளார்.

இப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் கொரோனா ஊரடங்கு முடிவில் அறிவிக்கப்படும்.

Vettris Memories teaser launched by Pandiraj Inman Rahman

Cast and Crew :

தயாரிப்பு- ஷிஜுதாமீன்ஸ்

கதாநாயகன்- வெற்றி

இயக்குனர்- ஷாம் பிரவீன்

ஒளிப்பதிவு- ஆர்மோ & கிரன்

படத்தொகுப்பு- சேன் லோகேஷ்

இசை- கவாஸ்கர் அவினாஷ்

வசனம்- அஜயன் பாலா

திரைக்கதை- ஷாம் பிரவீன் மற்றும் விபின் கிருஷ்ணன்

கலை – தென்னரசு

சண்டை பயிற்சி- அஷ்ரஃப் குருக்கள்

தயாரிப்பு மேலாண்மை- எஸ்.நாகராஜன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு- முகேஷ் ஷர்மா

மக்கள் தொடர்பு – ப்ரியா

JUST IN டாஸ்மாக் கடைகள் திறப்பு..; தமிழ்நாட்டில் ஜுன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு

JUST IN டாஸ்மாக் கடைகள் திறப்பு..; தமிழ்நாட்டில் ஜுன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (5)கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்து உத்தரவிட்டார்.

அந்த விவரம் வருமாறு…

சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள்

11 மாவட்டங்களில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ.பதிவுடன் அனுமதிக்கப்படும்

எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதி.

எலக்ட்ரீசியின், பிளம்பர், தச்சர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்கள், இ.பதிவுடன் செயல்பட அனுமதி

ஓட்டுநர் தவிர டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோவில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 25% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

*27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்*

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்.

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி

அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதி

பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி.

உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் காலை 9 மணி வரை நடைபயிற்சி அனுமதி

செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் இயங்கலாம்

வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி.

மண்பாண்டம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு அனுமதி

27 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் தவிர, இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மோட்டார் சைக்கிளில் செல்ல விரும்பினால், இ.பதிவு பெறுவது கட்டாயம்

ஐ.டி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20% பணியாளர்கள், அல்லது 10 நபர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி

வீட்டுவசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்

வணிக நிறுவனங்கள் & கடைகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

கடைகளில் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயம்

கடைகளுக்கு வருவோர், பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

அனுமதிக்கப்பட்ட கடைகள் ஏசி வசதி இன்றி செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

ஒரே நேரத்தில் கடைகளில், அதிகப்படியான வாடிக்கையாளர்களை அனுமதிக்க கூடாது.

*27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறப்பு*

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்புக்கு அனுமதி

டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி.

பொதுமக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் மாஸ்க் அணிவது கட்டாயம்

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்

பொதுஇடங்கள், வீடுகளின் அருகாமையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்

பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

வெளியில் சென்று திரும்புவோர், கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கைகழுவுவது அவசியம்.

TN extends lock down until June 21st

More Articles
Follows