விஜயகாந்துக்கு முதன்முதலில் மன்றம் அமைத்த நடிகர் முன்னாள் MLA ஆர். சுந்தர்ராஜன் மரணம்

vijayakanth friend mla sundar rajanவிஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தேமுதிக பொருளாளராகவும் இவர் இருந்துள்ளவர்.

கேப்டன் விஜயகாந்துடன் சிறு வயது முதலே நண்பராக இருந்தவர்.

மதுரையில் நடிகர் விஜயகாந்த் நற்பணி மன்றம் முதன்முதலில் அமைத்தவர் இவர் தான்.

விஜயகாந்துடன் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தேமுதிக சார்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.

2011 ம் ஆண்டு தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைந்து 30 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு முறை சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களில் ஆர் சுந்தர்ராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post