புதுச்சேரி ஏனாம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மாயம்.; 3 நாட்களுக்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்பு..!

Yanam MLA (1)புதுச்சேரி மாநில ஏனாம் தொகுதியில் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் துர்க்கா பிரசாத் பெம்மாடி.

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் நடுவே உள்ள ஏனாம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதியாகும்

ஏப்ரல் 1ஆம் நாளில் இருந்து இந்த வேட்பாளரை (பிரசாத் பெம்மாடி) காணவில்லை எனக் கூறி அவர் மனைவி சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கடத்தப்பட்டாரா? அவரை யாரேனும் அடித்துத் துன்புறுத்தினார்களா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Missing independent MLA candidate found in Yanam

Overall Rating : Not available

Latest Post