சினிமாவின் அடையாளம் ரஜினிக்கு வழி.. – சூர்யா.; குடும்ப உறவுகளை ‘மெய்யழகன்’ பேசுவான் – கார்த்தி

சினிமாவின் அடையாளம் ரஜினிக்கு வழி.. – சூர்யா.; குடும்ப உறவுகளை ‘மெய்யழகன்’ பேசுவான் – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவின் அடையாளம் ரஜினிக்கு வழி.. – சூர்யா.; குடும்ப உறவுகளை ‘மெய்யழகன்’ பேசுவான் – கார்த்தி

மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார்..

”சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன் நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் தான் செலவு ஆனது. சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம்பட்டி பகுதியில் தான் எனக்கு பெண் தந்தார்கள்.

சூர்யா, கார்த்தி சினிமாவிற்கு வரக்கூடாது என ஒளித்து வைத்து இருந்தேன். ஆனால் கடவுள் அவர்களை சினிமாவிற்கு வர வைத்துவிட்டார். தமிழர்கள் போட்ட பிச்சை தான் இவ்வளவும், எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும் வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இயக்குனர் பிரேம்குமார் பேசுகையில்..

“மெய்யழகனை முதலில் சிறுகதையாக தான் பண்ணினோம். பின்னர் படமாக பண்ண சொல்லியவர் விஜய் சேதுபதி தான். இந்தக் கதையை யாரும் பண்ண முன்வருவார்கள் நான் நம்பவில்லை. ஆனால் கார்த்தி சார் படித்து விட்டு ஒகே சொல்லியது மிகவும் மகிழ்ச்சி.

அரவிந்த்சாமி சார் படம் பண்ணலாம் என்று சொல்லிய பின்புதான் படத்திற்கு முழு உருவம் கிடைத்தது. நீங்க கேட்கும் இசையை நாங்கள் பெரிய ஸ்டுடியோவில் பண்ணவில்லை. கொட்டும் மழையில் ஒரு வீட்டின் ஓரத்தில் தான், இந்த இசையை நாங்கள் உருவாக்கினோம். இது குடும்ப உறவுகள் பற்றிய படம். நான் கொஞ்சம் சோம்பேறி, இனி எழுதுவதை வேகப்படுத்த வேண்டும். அன்பு பற்றி படம் எடுத்துள்ளேன். 96 படத்திலும் அன்பு தான் சொல்லியிருந்தேன். 96 படத்தை விட இதில் அதிகம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்…

“கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும். பொற்காலம் என்றால் லீவில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான்.

ஊரில் இருக்கும் 10 நாளும் அருமையாக இருக்கும். 8 பேருக்கு விறகு வைத்து சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். குடும்பத்தினர் உறவு தான் மெய்யழகன் படம். 96 படத்தில் காதலிப்பவர்களை பிரேம்குமார் கதற விட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். பிரேம் குமாரின் வசனங்கள் அருமையாக உள்ளது.

மெல்லிய உணர்வுகள் தரும் படம் பண்ண நான் ஏங்கிய காலம் உள்ளது. குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து இந்த படம் பேசும்.

போன் இருந்தால் போதும் யார் கூடவும் பேச வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஆனால் அப்படி கிடையாது. அப்படி இருக்கக் கூடாது பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும்.

காதலே காதலே என்ற ரிங்டோன் எல்லா பக்கமும் ஒலித்து கொண்டு இருக்கிறது. சிங்கத்திடம் கொடுத்தால் படம் நன்றாக வரும் என்பதால், படத்தை அண்ணாவிடம் கொடுத்து விட்டேன்.

ஜல்லிக்கட்டு படப்பிடிப்பு எனக்கு புதுமையாக இருந்தது. உடம்பில் கருப்பசாமி வந்துவிட்டார் என்ற வசனம் எல்லாம் உடம்பு சிலிரிக்க வைக்கிறது. ஒரே வாரத்தில் இந்த கதையை எழுத்தியுள்ளார் இயக்குநர். லோகேஷ் கனகராஜ் நைட் எப்படி என்னை வெச்சு செய்தாரோ, அதே மாதிரி தான் பிரேம்குமாரும் இரவு முழுவதும் துங்க விடாமல் படம் எடுத்தார்” எனத் தெரிவித்தார்.

நடிகர் சூர்யா பேசுகையில்…

“நேற்று இரவு இந்த படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் படம் என்னிடம் வந்தது.

தொப்புள் கொடி உறவு, எங்களுடைய வேர், எங்களின் அடையாளம் கோவை தான். நடிக்க வந்து 27 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு கோவையில் விழா எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி. இரத்த சொந்தங்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டி பிடித்த படம் இது.

அரவிந்த் சுவாமி, கார்த்தி இருவருக்கும் உள்ள பழக்கம் மிகவும் பொறாமைபடும் அளவிற்கு உள்ளது. என் மகன் ஜோதிகா பெயரைத் தான், பெயருக்கு பின்னால் எழுதுவான். அப்படி இசையமைப்பாளர் கோவிந்த் தன்னுடைய அம்மா பெயரை பின்னால் வைத்துள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் படம் தான் மெய்யழகன். 96 படம் மீது பெரிய மரியாதை எனக்கு உள்ளது. படத்தை படமாக மட்டும் பாருங்கள். வசூல் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்க இல்லாமல் நான் எதும் செய்ய முடியாது. உங்களுக்கு தலை வணங்குகிறேன். கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது எனக்கு தெரியும். 2.5 வருடமாக ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது கங்குவா தான்.

அக்டோபர் 10 ம் தேதி ‘வேட்டையன்’ படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். நான் பிறக்கும் போது நடிக்க வந்தவர் ரஜினிகாந்த்… அவர் மூத்தவர், சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவது தான் சரி.

‘கங்குவா’ ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். கங்குவா படம் வரும்போது நின்று பேசும்” எனத் தெரிவித்தார்..

Meiyazhagan event Kanguva postponed due to Vettaiyan release

தி. நகரில் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ..: அமைச்சர் சுப்ரமணியன் & ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்து

தி. நகரில் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ..: அமைச்சர் சுப்ரமணியன் & ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி. நகரில் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ..: அமைச்சர் சுப்ரமணியன் & ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்து

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் இரண்டாவது கிளையை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார்

சென்னையின் முன்னணி சைவ கான்டினென்டல் பார்பிக்யூவான கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ, தி. நகரில் அதன் இரண்டாவது கிளையை இன்று (செப்டம்பர் 1) பிரம்மாண்டமாக திறந்துள்ளது.

சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ரெஸ்ட்டாரண்டைத் திறந்து வைத்தார்.

இவருடன் ஏ. ராமதாஸ் ராவ் (சென்னை ஹோட்டல் சங்கத்தின் கௌரவத் தலைவர்), ஏ.எம். விக்ரம ராஜா (தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் தலைவர்), டாக்டர்.எழிலன் எம்.எல்.ஏ, ஏ.எம்.வி பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., கருணாநிதி எம்.எல்.ஏ., வெங்கடேஷ் பட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

மேலும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மனதார தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டில் இதன் முதல் கிளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டதில் இருந்து பார்பிக்யூ பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்து வருகிறது.

செயற்கை உணவூட்டிகளோ நிறமூட்டிகளோ எதுவும் இல்லாமல் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ பயன்படுத்துகிறது.

இதன் தரம், அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்கள் சேவை போன்றவையே கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவின் வெற்றி ரகசியம். இதன் முதல் கிளையை போலவே மேம்படுத்தப்பட்ட டைனிங் அனுபவத்தை தி.நகர் கிரீன்ஹவுஸ் பார்பிக்யூ வாடிக்கையாளர்களுக்குத் தர இருக்கிறது.

இந்த புதிய கிளையில் உள்ள பஃபேயில் சூப், ஸ்டார்டர், சாலட், கபாப், இனிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் கிடைக்கும். இதன் மெனு வாரந்தோறும் மாறும்.

கிரீன்ஹவுஸ் பார்பிக்யூவை அபிஷேக் என் முரளி, அக்‌ஷயா முரளி, சாய் காஷ்யப் மற்றும் மறைந்த டாக்டர்-செஃப் சௌந்தரராஜன் ஆகியோர் இந்த உணவகத்தின் மெனு, அதன் சுவை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ஆகவே, வாடிக்கையாளர்களுக்கு இதன் இரண்டாவது கிளை திறப்பு என்பது கொண்டாட்டம் ஆகும்.

Green house Barbecue 2nd Branch at T Nagar Chennai

——–

அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங்.: வீராங்கனைகள் & உதயநிதி பங்களிப்பு

அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங்.: வீராங்கனைகள் & உதயநிதி பங்களிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங்.: வீராங்கனைகள் & உதயநிதி பங்களிப்பு

*அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு* (தெற்கு மண்டலம்*)

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் முன்னெடுப்பில் அஸ்மிதா கேலோ இந்திய மகளிர் லீக் சைக்கிளிங் நிகழ்வு (தெற்கு மண்டலம்) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2024 ஆகிய தேதிகளில் திருப்போரூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குனர் ஸ்வேதா விஸ்வநாத், *சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்* , SDAT இன் முன்னாள் பொது மேலாளர் ரெஜின , திருப்போரூர் காவல் ஆய்வாளர் சரவணன் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளை பரிசுகள் வழங்கி கௌருவித்தனர்…

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர் M சுதாகர், செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் மூன்று வெவ்வேறு போட்டிப் பிரிவுகள் உள்ளன:

1. மகளிர் எலைட் 36 kms
2. இளம்பெண்கள் ஜூனியர் (18 வயதுக்குட்பட்டோர்) 30 kms
3. துணை ஜூனியர் & இளம்பெண்கள் (16 வயதுக்குட்பட்டோர்) 18 kms

இந்த பிராந்திய போட்டியில் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திறமையான பெண் சைக்கிள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு வயது மற்றும் திறன் பிரிவுகளில் உள்ள பெண் சைக்கிள் வீராங்கனைகளின்
திறமைகளையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் தளமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு போட்டி ரீதியிலான சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பையும் ஊக்குவித்து, பங்கேற்பாளர்களிடையே விளையாட்டு உணர்வையும் நட்புணர்வையும் வளர்க்கும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.

*தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டிற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

பல்வேறு முன்முயற்சிகள் மூலமாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) “Sports development authority of Tamilnadu “ ஆதரவுடனும், தமிழக அரசு சைக்கிளிங் விளையாட்டை குறிப்பிடத்தக்க அளவில் ஊக்குவித்துள்ளது.

இந்த முயற்சிகள் சைக்கிளிங் மூலம் விளையாட்டுத் திறமையை வளர்ப்பதிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதிலும் தமிழக அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன..

Sports development authority of Tamilnadu Cycling Girls energy

—————

மனோரதங்கள் : கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே நடித்த ஆந்தாலஜி

மனோரதங்கள் : கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே நடித்த ஆந்தாலஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோரதங்கள் : கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலகமே நடித்த ஆந்தாலஜி

ZEE5 இல் “மனோரதங்கள்” எனும் அற்புதமான காவியத்தை நீங்கள் தவறவிட்டுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள்!

சமீபத்தில் ZEE5 இல் வெளியான ‘மனோரதங்கள்’ எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது.

இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது!

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம்.

ZEE5 இல் இப்போதே ‘மனோரதங்கள்’ பாருங்கள் !

1. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெருமெ எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்த படைப்பு உருவாகியுள்ளது.

இந்த ஆந்தாலஜி திரைப்படம், வாசுதேவன் நாயரின் சின்னச் சின்னப் படைப்புகளின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து, அவரது இலக்கிய மரபு வரையறுத்துள்ள மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் ஆழங்களை பற்றி, பார்வையாளர்களுக்கு ஒரு பார்வையை வழங்குகிறது.

2. சினிமா மேஸ்ட்ரோக்கள் மற்றும் முன்னோடிகளான பிரியதர்ஷன், ரஞ்சித், ஷ்யாமபிரசாத், மகேஷ் நாராயணன், ஜெயராஜன் நாயர், அஸ்வதி நாயர் மற்றும் ரதீஷ் அம்பாட் போன்ற ஆளுமை மிக்க இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த அற்புதமான படைப்பு உருவாகியுள்ளது.

ஒவ்வொரு இயக்குநரும் தங்களின் தனித்துவமான காட்சித் திறனையும் கதை பாணியையும் இந்த படைப்பில் கொண்டு வந்திருப்பதால், இந்த கூட்டு முயற்சி, பலதரப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதி செய்துள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் மலையாளப் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பெரும் உரையாடல்களையும் தூண்டியுள்ளது.

3. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மூதாதையர் வீடுகள், பசுமையான வயல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் கல்பாதைகள் வழியாக கேமரா லாவகமாக பயணிக்கும்போது, ‘மனோரதங்கள்’ படத்தின் காட்சிக் கோர்வைகள் பார்வையாளர்களை எம்.டி.யின் அன்பான அரவணைப்பில், அவரின் உலகத்திற்குள் மூழ்கடிக்கிறது. இந்த ஆந்தாலஜியின் ஒளிப்பதிவு மற்றும் உருவாக்கம், ஒவ்வொரு ஃப்ரேமிலும் நீங்கள் WOW என்று சொல்லத் தூண்டும்!

4.மலையாள சினிமாவின் மிகச்சிறந்த திறமைகள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்திற்காக ஒருங்கிணைந்துள்ளனர்.

பழம்பெரும் ஆளுமைகளான மம்மூட்டி, மோகன்லால், பன்முக நடிகரான பஹத் பாசில் மற்றும் அழகி பார்வதி திருவோத்து உள்ளிட்ட மலையாள சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பங்கேற்பில், இந்த அற்புதமான கதைகள் உயிர்பெற்றுள்ளது.

இந்த நட்சத்திரங்கள் நாயரின் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளை சிரமமின்றி வெளிப்படுத்தி, பார்வையாளர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

5 மனித உறவுகளின் நுணுக்கங்களை பேசும் ஒரு ஆழ்ந்த உணர்ச்சிமிகு பயணம் தான் ‘மனோரதங்கள்’. பார்வையாளர்களை அவர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளும் கதைகளுக்குள் இழுத்து செல்லும் இந்த ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் ஒரே மாதிரி உணர்வுகளான காதல், இழப்பு மற்றும் சுய-கண்டுபிடிப்பு எனும் கருப்பொருள்களில் ஆழமான கதைகளை கண்முன் விருந்தாக படைக்கிறது. மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராய்வதற்கான ஒரு சினிமா டூர் இது.

“மனோரதங்கள்” , இப்போது ZEE5 இல் கிடைக்கிறது, இலக்கிய மேதை M.T-வாசுதேவன் நாயரின் விவேகமுள்ள ஒவ்வொரு ஆர்வலர்களும் மற்றும் திரை ரசிகர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.!

Manorathangal Malayalam Anthology Tribute to MT Vasudevan

COOLIE ரஜினியுடன் சத்யராஜ் – ஸ்ருதி நாகர்ஜூனா – உபேந்திரா – சௌபின் – அமீர்கான்..?

COOLIE ரஜினியுடன் சத்யராஜ் – ஸ்ருதி நாகர்ஜூனா – உபேந்திரா – சௌபின் – அமீர்கான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

COOLIE ரஜினியுடன் சத்யராஜ் – ஸ்ருதி நாகர்ஜூனா – உபேந்திரா – சௌபின் – அமீர்கான்..?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப மல்டி ஸ்டார் ஃபேன் இந்தியா நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழில் பிரபலமான சத்யராஜ் & ஸ்ருதிஹாசன் இருவரும் ரஜினியுடன் இணைந்துள்ளனர்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் மூலமாக தமிழ்நாட்டில் பிரபலமான மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் அவர்கள் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அப்டேட் நேற்று வெளியானது..

கன்னடத்திலிருந்து உபேந்திரா இணைந்துள்ளார்.

தெலுங்கிலிருந்து நாகார்ஜூனாவை அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ்.. இன்று நாகர்ஜுனாவின் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பான போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தி உள்ளனர்.. சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைவார் என்கின்றனர்… அவர் அமீர்கான் எனத் தகவல்கள் வந்துள்ளன..

இந்த படத்தில் அனிருத் (இசை,) பிலோமின் (படத்தொகுப்பு) கிரிஷ் கங்காதரன் (ஒளிப்பதிவு), அன்பறிவு (ஸ்டண்ட்) ஆகியோரும் லோகேஷ் உடன் இணைந்துள்ளனர்..

லோகேஷ் உதவியாளர் சந்துரு ரைட்டராகவும் இணை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்..

கூலி ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் தற்போது நடந்து வருகிறது. இது சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் காம்பினேஷனில் நடக்கிறது..

மேலும் தினமும் மாலை 6 மணி அளவில் ‘கூலி’ படத்தில் நடிக்கும் கலைஞர்களை அறிவித்து வருகிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis Coolie movie character news updates

Once Upon A TIme In Madras ஈடுபாட்டுடன் என்னை பயணிக்க வைத்தது.. – அபிராமி

Once Upon A TIme In Madras ஈடுபாட்டுடன் என்னை பயணிக்க வைத்தது.. – அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Once Upon A TIme In Madras ஈடுபாட்டுடன் என்னை பயணிக்க வைத்தது.. – அபிராமி

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).

இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் பிஜிஎஸ்,

இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது, இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருந்தது, அது போக படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒப்புகொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குனர் பிரசாத் சார் என்னிடம் சொன்ன கதையை அப்படியே அற்புதமக எடுத்துவிட்டார், படம் அருமையாக வந்துள்ளது.

பரத் சாருக்கு மிகவும் நன்றி, எங்களது கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அனைவரும் கதையை கேட்டதும் சரி என சொன்னது எங்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை தந்தது. ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி. அனைவரும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். அதற்கு பெரிய நன்றி. கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இணை தயாரிப்பாளர் ஹாரூன் பேசியதாவது,

இந்தப் படத்தில் நான் இணைய காரணம் அருண் சார் தான், இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது, இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னார், அதை விட இயக்குநர் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் பெரிய உதவியாக இருந்தார். படம் நிச்சயமாக உங்களை சிந்திக்க வைக்கும். கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் கண்ணன் பேசியதாவது..

இந்தப் படம் எனக்கு கிடைக்க காரணம் ஹாரூன் சார் தான், அதிகமாக தயாரிப்பாளரை பாடு படுத்தியுள்ளேன், நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர். படம் நன்றாக வந்துள்ளது. பரத் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், பட்டியல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதே போல, இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய படமாக இருக்கும். நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காக தான், படம் சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை மிருதலா சுரேஷ் பேசியதாவது..

எனக்கு இதுதான் முதல் படம், எனக்கு இந்தப் படம் கிடைத்தது வரம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித்தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள், நன்றி.

நடிகை சினிசிவராஜ் பேசியதாவது..

எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத் சாருக்கு மிகவும் நன்றி, எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார், பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர் , இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. அதற்கு ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, உங்கள் ஆதரவை இந்த படத்திற்கு கொடுங்கள்.

இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் பேசியதாவது..

தயாரிப்பாளர் ஆனந்த் அண்ணனுக்கு மிகவும் நன்றி, என்னை அவர்தான் தேர்வு செய்தார். இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை, இந்தப் படத்தில் 3 பாடல்கள் இசையமைத்துள்ளேன், அதற்கு ஜெகன் அண்ணா தான் வரிகள் எழுதினார் அவருக்கு மிகவும் நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது, மொத்த குழுவிற்கும் நன்றி.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியதாவது…

இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசியதாவது..

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி, படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இயக்குநருக்கு வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஷான் பேசியதாவது…

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர். பரத் சார் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி. இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், எனக்கு அது ஒரு பாக்கியம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும், நன்றி.

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசியதாவது…

இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது, இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது.

நடுநிலை என்பது இரண்டு பேருக்கு நடுவில் நிற்பது அல்ல.. நியாயத்தின் பக்கம் நிற்பது தான் நடுநிலை..

அருண் சாருக்கு நன்றி இந்தப் படம் உருவாக முக்கிய காரணம், அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது. படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது.

சின்ன படங்களை மீடியாக்கள் மக்களிடம் கொண்டும் சேர்க்கும் என்பார்கள். என்னை பொருத்தவரை சின்ன படங்கள் அல்ல.. நல்ல படங்களை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.., அதே போல் இந்தப் படத்தையும் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் நன்றி.

இயக்குநர் பிரசாத் முருகன் பேசியதாவது..

முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள். பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகை அபிராமி பேசியதாவது..

எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள், இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன், எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார் , இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும் நன்றி.

நடிகர் பரத் பேசியதாவது..,
எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர், என்ன பேசுவது என்று தெரியவில்லை, இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன், கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது.

அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் , நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது, படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள், கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கிடைக்காது, படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள் நன்றி.

இப்பபடத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.

காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.

படத்தின் லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார்
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்

விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Barath Abirami Anjali Pavithra in Once upon a time in Madras

More Articles
Follows