சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது.; நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க.. – மீரா மிதுன்

meera mithunகோலிவுட் ஹீரோஸ் & ஹீரோயின்ஸை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

சமீப காலமாக த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவரை வம்புக்கு இழுத்தார்.

மேலும் ரஜினி & விஜய்யை பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதனிடையில் அஜித்தை மட்டும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தற்போது சூர்யாவை வம்புக்கு இழுத்து அவரது ரசிகர்களை வெறுப்பேத்தி இருக்கிறார் மீரா மிதுன்.

சூர்யாவுக்கு ஆக்டிங் என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என கலாய்த்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் இறந்தபின் சூர்யா அழ வேண்டும்.. பலமுறை டேக் எடுத்தார். நடிப்பே வரலை அவருக்கு.

நான் ஒரே டேக்கில் ஓகே வாங்கி விடுவேன்.

(சூர்யாவுக்கு நடிப்பின் நாயகன் எனவும் இன்னொரு பெயர் உண்டு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.)

சூப்பர் மாடல் மீரா நடித்த படம் என்று தானா சேர்ந்த படத்திற்கு மீடியா புரோமோசன் மீடியா பண்ணினாங்க.. அதான் சூர்யா டென்ஷனாயிட்டார்.

தானா சேர்ந்த கூட்டம் பட இசை விழாவுக்கு கூட நான் இருந்தா கீர்த்தி சுரேஷ் வரமாட்டாங்க சொன்னாங்க. என்னைய வர விடல..

சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாபியாக்கள் எனவும் தெரிவித்துள்ளார் மீரா.

மீரா மிதுன் நடித்த காட்சிகளை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வெட்டி எடுத்து விட்டார்கள். அதான் இவ்வளவு ஆத்திரம் அம்மணிக்கு என்கிறார்கள் பலரும்.

Overall Rating : Not available

Latest Post