நாய் குரைக்குதாமே.; த்ரிஷா & விஜய்கிட்ட சொல்லுங்க.. தீனாவுக்கு அடங்காத மீரா மிதுன்

நாய் குரைக்குதாமே.; த்ரிஷா & விஜய்கிட்ட சொல்லுங்க.. தீனாவுக்கு அடங்காத மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunவிஜய், சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்களை அண்மைக்காலமாக கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார் மீரா மிதுன்.

இதற்கு பாரதிராஜா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் கைதி பட நடிகர் தீனா தன்னுடைய ட்விட்டர் பதிவில்… ஏதோ ஒரு நாய் குறைக்குதாமே… அதாவது தெரு நாய் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த நடிகை மீரா மிதுன்… த்ரிஷா கிட்ட சொல்லுங்க… அவங்க தான் பீட்டாவுல மெம்பரா இருக்காங்க… இல்லனா விஜய் கிட்ட சொல்லுங்க.. அடுத்த ஆடியோ லான்ச்ல இதற்கு தீர்வு சொல்வார் என தேவையில்லாமல் பிரபல நடிகர்களை இழுத்துள்ளார் மீரா.

kpy dheena

சின்ன வயசுலேயே நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார்..; விபினை வியக்க வைத்த ‘மாநாடு’ மாலிக்

சின்ன வயசுலேயே நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார்..; விபினை வியக்க வைத்த ‘மாநாடு’ மாலிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu abdul khaliqசிம்பு குரலில் விபின் நடித்த “ஞேயங் காத்தல் செய்” என்ற ஆல்பம் பாடல் ஒன்று நண்பர்கள் தினத்தில் வெளியானது.

இப்பாடல் பார்வையாளர்களின் மனதை வருடி யூடியூப்பில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளைஞர்கள் இப்பாடலை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த `ஞேயங் காத்தல் செய்’ இசை ஆல்பத்தின் இயக்குநர் கார்த்திக் ரவிச்சந்திரன் ஆவார்.

இந்த பாடலை வெளியிடும் போது `மாநாடு’ பட `அப்துல் காலிக்’ கெட்டப்பில் இருந்தாராம் சிம்பு.

`ஞேயங் காத்தல் செய்’னா, நட்பைப் பேணிக் காக்கணும்’ என பொருள்படும்.

ஆத்திச்சூடியில ஞேயம்னா நட்புனு இருக்கு. இந்தத் தலைப்பு பத்தி சிம்பு கேட்கவே இல்லையாம்.

சின்ன வயசிலேயே நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார் சிம்பு” என்கிறார் இந்த ஆல்பத்தின் ஹீரோ விபின்.

கீழ்ப்பாக்கத்தில் தனது 6வது கிளையை தொடங்கிய அண்ணா நகர் சைக்கிள்ஸ்

கீழ்ப்பாக்கத்தில் தனது 6வது கிளையை தொடங்கிய அண்ணா நகர் சைக்கிள்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anna nagar cyclesAnna Nagar Cycles was initially started as an individual cycle showroom in Anna Nagar, Chennai . Owned by Mr. Sudhakar. It was inaugurated by Actor Sathish in 2019 . From then till now they have opened showrooms in various places like Vellore, Ranipet, Sholinghur and Chittoor being the latest . Now they have opened a new showroom at Kilpauk, Chennai. The Kilpauk showroom is the 6th showroom overall and the second in Chennai. They also have a cycling team called “Cycle On” and they go to rides along with their team members very frequently. They are planning to open multiple branches all over Tamil Nadu in the coming years.

சௌந்தரராஜா-வின் மண்ணுக்கும் மக்களுக்கும்.; 25000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டம்!

சௌந்தரராஜா-வின் மண்ணுக்கும் மக்களுக்கும்.; 25000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க திட்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor soundar rajanதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.

இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார்.

மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். சமீபத்தில் கொரோனா ஊரடங்குகளில் அவதிப்பட்டவர்களுக்கு உணவு கொடுத்து உதவினார்.

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் சவுந்தரராஜா, தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவையும் சேர்த்து கொண்டாடினார்.

இவ்விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஏரிக்கரைகள், மலை குன்றுகள், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில் நட்டு அதை பாதுகாக்கவும் வழி வகை செய்திருந்தார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றது.

சென்னையில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சௌந்தரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி சேர்மன் தேவ் ஆனந்த், நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி, நடிகர் பிளாக் பாண்டி, மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் உறவுகள், நண்பர்கள், மற்றும் சௌந்தரராஜாவின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.

இதன் பின் சௌந்தரராஜா பேசும்போது…

‘மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நண்பர்கள், உறவுகள் அனைவரும் தமிழகம் முழுவதும் பருவ மழைக்காலத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிப்பதை ஒரு சவாலாக எடுத்து இருக்கிறோம்.

முதல் நாளான இன்று மனைவி, குடும்பத்தினருடன் தொடங்கி இருக்கிறேன். எப்போதும் ஒரு இடத்தை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடுவேன். ஆனால், இந்த முறை நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோர் என்னுடன் சேர்ந்து பயணிப்பதாக கூறினார்கள்.

350 பேர் கொண்ட குழு இன்று செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

கொரோனா காலத்தில் இயற்கை ரொம்ப முக்கியம் என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை பேரழிவுகள் வந்தால் கூட, இயற்கையின் முக்கியத்துவத்தை தெரியாமல், பாதுகாக்காமல் விட்டு விடுகிறோம்.

மரங்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விடுகிறோம். விவசாயம், பசுமையில்தான் ஒரு புரட்சி நடக்க வேண்டும்.

அதன்மூலமாகதான் நாடு வல்லரசாக வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் பட்டினி என்று ஒருவரும் இருக்க கூடாது என்பதே மிகப்பெரிய வளர்ச்சி வல்லரசு என்று நான் நினைக்கிறேன். எல்லோரும் இயற்கையை நேசிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் அதை பின்பற்றுங்கள். இந்த மண்ணையும் மக்களையும் காப்போம்’ என்றார்.

உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccineஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதை தடுக்க உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இதுவரை 890,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14973 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எப்போ யார வச்சு என்ன மாதிரி படம் பண்ணனும் தெரிந்தவர் சுவாமிநாதன்.; சிம்பு இரங்கல்

எப்போ யார வச்சு என்ன மாதிரி படம் பண்ணனும் தெரிந்தவர் சுவாமிநாதன்.; சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu with producer ML swaminathanலட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தில் ஒருவர் சுவாமிநாதன்.

இவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

இவரின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்….

தயாரிப்பாளர் திரு. எல் எம். எம் சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி.

எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.

நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர்.

இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.

நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரென தெரியாது.

மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல்கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்தகாலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன்.

– சிலம்பரசன் TR

More Articles
Follows