அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn college studentsதமிழக கல்லூரிகளில் அரியர் தேர்வுகளும் கட்டணம் செலுத்தி இருந்தாலோ அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு மாணவர்களிடையே பலத்த வரவேற்பு உருவானது. பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.

பல அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லையாம்.

அதாவது முந்தைய செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் பாஸ் மார்க் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும்.

நாய்களுக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு ஓணம் கொண்டாடிய கீர்த்தி

நாய்களுக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு ஓணம் கொண்டாடிய கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி கேரளாவில் திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கேரளாவை பூர்விகமாக கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஓணம் கொண்டாடி தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.

இவர் தன வீட்டில் 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கும் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிவித்து தன் குடும்பத்தாருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியதாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

keerthy suresh onam pics

யூடியுப் சேனலுக்கு ஆதார் அவசியம் செய்ய என மோடி-எடப்பாடிக்கு வனிதா வேண்டுகோள்..

யூடியுப் சேனலுக்கு ஆதார் அவசியம் செய்ய என மோடி-எடப்பாடிக்கு வனிதா வேண்டுகோள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumarபிக்பாஸ் 3 நிகழ்ச்சி, ரியால்ட்டி ஷோக்கள்… யூடியுப் சேனல் என பிசியாகவே வலம் வருகிறார் நடிகை வனிதா.

சில மாதங்களுக்கு முன் பீட்டர் பாலை 3வது திருமணம் செய்து கொண்டு அந்த விவகாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வனிதா என்ற தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

யாரோ சில மர்ம நபர்கள் வனிதா பெயரில் போலி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தகவலை ரசிகர்கள் வனிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் யூடியூப் நிர்வாகத்திற்கு போலி சேனல் குறித்து புகார் அளித்துள்ளார்.

“இது போன்ற மோசடி சேனல்காரர்கள் மீது யூடியூப் நிர்வாகம் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் சேனல் ஆரம்பிக்க அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களின் பின்புலம், விவரங்கள் பற்றி சரிபார்ப்பதே இல்லை. யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களிடம் கட்டாயம் ஆதார் எண்ணை சமர்பிக்க சொல்ல வேண்டும்”, என தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகாருடன் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரையும் வனிதா டேக் செய்துள்ளார்.

@vanithavijayku1 For your information, somebody start Duplicate youtube channel same like yours Chennal name (V V) and using your videos….

Ty …fraudulent channels must be taken up by @YouTubeIndia very seriously..they allow anyone to start or operate a channel…background and description is never checked..#Aadhaar must be asked with kyc completed.. @narendramodi @PMOIndia @CMOTamilNadu #cybersecurity #cybercrime

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்கில் ரைசா வில்சனின் ‘தி சேஸ்’

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்கில் ரைசா வில்சனின் ‘தி சேஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

the chase first lookஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது ‘தி சேஸ்’

கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் ‘தி சேஸ்’ உருவாகியுள்ளது.

இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார்.

இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தி சேஸ்’ பணிகளை முடித்துவிட்டு, ‘சூர்ப்பனகை’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

‘தி சேஸ்’ கதைகளத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ஒரே இரவில் நடக்கும் கதையும் கூட.

படம் பார்ப்பவர்களை ஆச்சரியமூட்டும் வகையில் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் கார்த்திக் ராஜு. நல்ல காமெடி, சண்டைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என பார்வையாளர்களை இந்தப் படம் கட்டிப் போட்டுவிடும் என்று உறுதியாக நம்பலாம்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர் ..!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர் ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MGR JM Basheerதமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர்.

இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent MGR) என்கிற தலைப்பில் கிட்டத்தட்ட 25 பாகங்களை கொண்ட வீடியோக்களாக உருவாக்கி, யூடியூப்பில்(Net Boss Channel) பதிவேற்றியுள்ளார் பஷீர்.. இந்த வீடியோக்களை ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மற்ற சோஷியல் மீடியாக்களிலும் பார்க்க முடியும்..

பத்திரிகையாளர் மணவை பொன்.மாணிக்கம் எழுதிய ‘எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்’ மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட ‘புகழ்மன செம்மல் எம்.ஜி.ஆர்’ ஆகிய இரண்டு புத்தகங்களில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர் குறித்த அருமையான, சுவாரஸ்யமான நிகழ்வுகளை படித்து நெகிழ்ந்துபோன பஷீர், அவற்றை காலத்தால் அழிக்க முடியாத வீடியோ பதிவுகளாக மாற்றும் முயற்சியில் உடனே இறங்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வீடியோக்கள் உருவாக்கும் பணியை துவங்கிய இவர், இதற்காக சுமார் 5 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.. இத்தனைக்கும் காரணம் எம்.ஜி.ஆர் என்கிற மாமனிதர் மீது கொண்ட தீராத காதல் என்கிறார் ஜெ. எம். பஷீர்..

இதுகுறித்து அவர் கூறும்போது, “என் தந்தை S.M,ஜமால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட அளவுகடந்த பற்று காரணமாக, அவரது படங்களில் உடையலங்கார நிபுணராக பணியாற்றினார்.. எனக்கு எம்.ஜி.ஆரை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவிலையே தவிர, அப்பா மூலமாக அரைப்பற்றி கேட்டபடியே ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனாகத்தான் வளர்ந்தேன். அவரை பார்த்துதான் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்துக்கொண்டேன்..

இந்த புத்தகங்களை படித்த போது தெரிந்து கொண்ட விஷயங்கள் மற்றும் எம் ஜி ஆர் அவர்களை பற்றி ஏற்கனவே நான் அறிந்து கொண்ட விஷயங்கள் இவற்றை ஏன் ஒரு வரலாற்று ஆவணமாக, அடுத்து வரும் இளைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக, வீடியோக்களாக உருவாக்க கூடாது என, என் மனதில் தோன்றியது..

இதோ கடந்த 60 நாட்கள் இடைவிடாத உழைப்பில் அந்த பணியை திருப்திகரமாக செய்து முடித்துவிட்டேன்.. இதுவரை இந்த வீடியோக்களை சுமார் 10 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளார்கள்..

வெளிநாடுகளில் வாழும் எம் ஜி ஆரின் ரசிகர்கள் இலங்கை, சிங்கப்பூர் , மலேசியா, ஜப்பான் , துபாய் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து போன் செய்து என்னை பாராட்டியதோடு அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லி அத்தனையும் பேச சொன்னார்கள்.

இந்த கொரோனா காலத்தில் மனச்சோர்வு அடைந்துள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை அளிப்பவையாக இந்த வீடியோக்கள் இருக்கும்” என கூறியுள்ளார் ஜெ. எம். பஷீர்.

52 ஆண்டுகள்… 70MM ஸ்கீரின்.. 1004 சீட்.. ஊரடங்கால் வருமானமின்றி அகஸ்தியா தியேட்டர் நிரந்தரமாக மூடல்

52 ஆண்டுகள்… 70MM ஸ்கீரின்.. 1004 சீட்.. ஊரடங்கால் வருமானமின்றி அகஸ்தியா தியேட்டர் நிரந்தரமாக மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agasthiya theatreமெட்ரோ ரெயில் பணியால் முடங்கிய சென்னை அகஸ்தியா திரையரங்கை, ஊரடங்கு தொடர்வதால் நிரந்தரமாக மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 70 எம் எம் திரையில் 1004 இருக்கைகளுடன் மூன்று தலைமுறை முன்னனி நாயகர்களின் ஏராளமான வெற்றிப்படங்களை திரையிட்ட 53 ஆண்டுகள் பழமையான அகஸ்தியாவின் மலரும் நினைவுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

1967ல் பாமா விஜயத்துடன் வட சென்னையின் தண்டையார் பேட்டையில் தொடங்கப்பட்டது அகஸ்தியா திரையரங்கம். 1973ல் வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக 300 நாட்கள் ஓடி சாதனைப்படைத்தது..!

தொடர்ந்து காவல்காரன், மீனவ நண்பன் என எம்.ஜி.ஆர் படங்கள் இங்கு சக்கை போடு போட்டது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிவந்த மண், சொர்க்கம் படங்களும் திரையிடப்பட்டதாக கூறும் திரையரங்க நிர்வாகத்தினர் இந்த திரையரங்கில் அப்போது குறைந்த பட்ச கட்டணம் 1 ரூபாய் 10 காசு மட்டுமே என்கின்றனர்.

அப்போது தொலைக்காட்சி இல்லை என்பதாலும் வெகு சில திரையரங்குகளிலே படம் ரிலீஸ் செய்யப்படும் என்பதாலும், தினமும் மக்கள் திருவிழாக்கூட்டமாக கூடியதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து அடுத்த காட்சி பார்த்து சென்றதாக திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினியின் அறிமுகப்படமான, அபூர்வ ராகங்கள், பைரவி, படிக்காதவன், கமல்ஹாசனின் விக்ரம் , அபூர்வ சகோதரர்கள், குருதி புனல், தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை 70 எம்.எம் திரையில் காண்பித்து பலதரப்பு ரசிகர்களையும் குதூகலப்படுத்தியது இந்த திரையரங்கம்..!

விஜய்யின் குஷி, கில்லி, அஜீத்தின் தீனா, சூர்யாவின் காக்க காக்க கார்த்தியின் கைதி வரை இந்த திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியவை. வட சென்னையில் பெரிய கார்பார்க்கிங் வசதியுடன் முன் பக்கம் பூங்காவுடன் கூடிய ஒரே திரையரங்கு அகஸ்தியா மட்டுமே..!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என மூன்று தலைமுறை முன்னனி நடிகர்களும் தங்கள் படங்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வந்து பாக்ஸ் இருக்கையில் அமர்ந்து பார்த்து சென்றது எல்லாம் ஒரு காலம் என்கின்றனர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மெட்ரோ ரெயில் பணி தொடங்கிய பின்னர் இந்த திரையரங்கிற்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு சிறிய பாலம் அமைக்கப்பட்டு கார்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்தே ரசிகர்களின் வருகையும் வெகுவாக குறைந்து நட்டத்தில் இயங்க தொடங்கியுள்ளது.

1004 இருக்கைகள் கொண்ட இங்கு ஆரம்பகாலம் தொட்டே இவர்களுக்கு எம்.ஜி.ஆர் படங்கள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அவரது படத்தை திரையிட்டால் எங்கிருந்தாலும் மக்கள் கூட்டம் இங்கு வந்துவிடும் என்கிறார்கள்.

முழு ஊரடங்கிற்கு முன்பாக ரகசிய போலீஸ் 115 படத்தோடு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அகஸ்தியா திரையரங்கத்தை, தொடர்ந்து இயக்க இயலாமல் நிரந்தரமாக மூடுவது என்று நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்கள் கழித்து திரையரங்குகள் இயக்க அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் முதலில் ஏசி வசதி இல்லாத விசாலமான, திரையரங்குகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் சென்னையில் குளிர்சாதன வசதியே இல்லாமல் இயங்கி வந்த ஒரே விசாலமான திரையரங்கான அகஸ்தியா மூடப்படுவது குறிப்பிடதக்கது.

இந்த பகுதியில் நாளுக்கு நாள் இடத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் வருமானமில்லா சொத்தாக மாறிபோனதால் இந்த திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகின்றது என்பதே உண்மை..!

More Articles
Follows