அரபு மொழியில் தயாராகும் படத்தில் மஞ்சு வாரியர் – பிரபுதேவா

அரபு மொழியில் தயாராகும் படத்தில் மஞ்சு வாரியர் – பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சுவாரியர். இவர் நடிகர் தீலிப்பின் முன்னாள் மனைவி ஆவார்.

இவர் தமிழில் தனுஷ் உடன் ‘அசுரன்’ படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது இந்தியாவில் உள்ள பல மொழிகளில் உருவாகும் ‘ஆயிஷா’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

கூடுதலாக இந்த படம் அரபு மொழியிலும் உருவாகுகிறது. எனவே இந்தப்படம் இந்திய அரபு நாடுகளின் கூட்டு தயாரிப்பாக உருவாகி வருகிறது.

அமீர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்க ஆசிப் இதன் கதையை எழுதுகிறார். ஒளிப்பதிவை விஷ்னு சர்மா கவனிக்க எடிட்டிங்கை அப்பு கவனிக்கிறார். ஜெயச்சந்திரன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடன இயக்குனராக பிரபுதேவாவும் இணைந்துள்ளார். மஞ்சுவாரியருடன் பிரபுதேவா இணைவது இதுதான் முதல்முறையாகும்.

இந்த நடன ஒத்திகையின் போது எடுத்த போட்டோக்களை பகிர்ந்து தனது ‘கனவு நனவான தருணம்..’ என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் மஞ்சுவாரியர்.

Manju Warrier and Prabhu Deva teams up first time for Indo Arab movie

இரவின் நிழலுக்கு 3 ஆஸ்கர் வின்னர்களை கொண்டு வந்த பார்த்திபன்

இரவின் நிழலுக்கு 3 ஆஸ்கர் வின்னர்களை கொண்டு வந்த பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் நடிப்பு.. மறுபக்கம் இயக்கம் என பிஸியாக இருப்பவர் பார்த்திபன்.

இவர் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய ‘ஒத்த செருப்பு’ பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதனையடுத்து மீண்டும் வித்தியாசமான முயற்சியாக சிங்கிள் ஷாட்டில் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் பார்த்திபன்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தற்போது ஒலி கோர்ப்புக்கு கிரைக் மான் என்பவரும் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக கட்டா லங்கோ லியான் என்பவரும் ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஏஆர். ரகுமானை போல இவர்களும் இருவரும் ஆஸ்கர் விருதை வென்றவர்கள் தான். ஆக மூன்று ஆஸ்கர் வின்னர்கள் ‘இரவின் நிழல்’ படத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Parthiban brings 3 Oscar winners in Iravin Nizhal

Parthiban with Oscar winners AR Rahman Craig Mann Cottalango Leon

STR Birthday Treat : தன் பிறந்தநாளில் சிம்பு வெளியிட்ட வீடியோ வைரல்

STR Birthday Treat : தன் பிறந்தநாளில் சிம்பு வெளியிட்ட வீடியோ வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநாடு’ படத்தின் மகா வெற்றிக்கு பிறகு சிம்புவுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இத்துடன் சிம்பு கைவசம் ‘பத்து தல’, ‘கொரோனா குமாரு’ உள்ளிட்ட படங்கள் உள்ளது.

இவருக்கு வீட்டில் பெண் தேடும் படலம் நடந்து வருகிறது. எனவே விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அதனை முன்னிட்டு 12 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்.

அந்த வீடியோவில்… “தன் உடல் எடையை குறைத்தது எப்படி என விவரித்துள்ளார்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு 107 கிலோ வரை எடையில் இருந்தார் சிம்பு.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் டான்ஸ், நீச்சல், குத்துச் சண்டை, உடற்பயிற்சி ஜாக்கிங், யோகா என அனைத்தையும் தீவிரமாக விடாமல் செய்து உடல் எடையை 38 கிலோ குறைத்துள்ளார்.

இந்த பயிற்சியில் முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காட்சியாக இடம் பெற்றுள்ளது.

சிம்பு வெளியிட்ட இந்த பர்த்டே ஸ்பெஷல் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Actor SilambarasanTR has revealed his fitness journey

சிலம்பரசனை நடிக்க வைத்தது அந்த குடும்பம்தான்.. – டி.ஆர். ஓபன் டாக்

சிலம்பரசனை நடிக்க வைத்தது அந்த குடும்பம்தான்.. – டி.ஆர். ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்ரி என்டெர்ப்ரைசைஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.

ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.

உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் A.M.A.மாலிக் பிரபலங்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில்…

இசையமைப்பாளர் L.V.முத்து பேசியதாவது…

இந்த வாய்ப்பு தந்த கிஷன் அவர்களுக்கு நன்றி. எங்கள் இசையில் பாடிய டி ஆர் அவர்களுக்கு நன்றி. இயக்குநர் விஜய் அட்டகாசமான வகையில் புது விதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம்.

இசையமைப்பாளர் L.V. கணேஷ் பேசியதாவது…

எங்களுக்கு வாய்ப்பு தந்த கிஷன் அவர்களுக்கு நன்றி. எங்கள் பாடலை டி ஆர் சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அவரை அணுகியபோது அவரே இந்த பாடலையும் எழுதினார். அவர் திரை வாழ்வில் வெளிப்படத்திற்கு பாடல் எழுதுவது இதுவே முதல் முறை. அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இயக்குநர் விஜய் மிக அட்டகாசமாக படத்தை எடுத்துள்ளார். படத்தை எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் நன்றி.

நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார் பேசியதாவது…

இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளார்கள், படத்தின் நாயகன் C.S.கிஷன் அற்புதமாக நடித்துள்ளார். இயக்குநர் விஜய் தமிழ் தமிழ்செல்வன் கதையும், திரையில் காட்சியை கொண்டு வருவதிலும் மிகப்பெரும் திறமைசாலி என நிரூபித்துள்ளார். எல்லோரும் நன்றாக வேலை பார்த்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளேன் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு அழகான படம் தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பாருங்கள் நன்றி.

இயக்குநர் விஜய் தமிழ்செல்வன் பேசியதாவது…

நான் மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான் யாரிடம் ஸ்கிரிப்ட் எடுத்து அலையவில்லை, இந்த நிறுவனத்திடம் மட்டும் தான் கதை சொன்னேன். கொரோனா உச்ச கட்டமாக சீனாவில் இருந்த காலத்தில் இந்தபடத்தை ஆரம்பித்தோம்.

இங்கு வராது என்று நினைத்தோம், கொரோனா வந்ததால் படம் லேட்டாகிவிட்டது. கிஷன் சார் மிகச் சிறந்த திறமைசாலி அவருக்கு கேமரா பயமே இல்லை. மிக அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் இருந்தது.

எல்லோருக்கும் டி ஆர் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம் ஆனால் அவரே எழுதி பாடி விட்டார். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் இது. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. இசையில் L.V.முத்து கணேஷ் இரவு பகலாக உழைத்துள்ளார்கள். பாலா கிருஷ்ணா மனோஜ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தை நன்றாக எடுத்துள்ளோம் தியேட்டரில் வந்து பாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் H முரளி பேசியதாவது…

இது என் குடும்ப விழா மாதிரியானது. தயாரிப்பாளர் ஜெயின் அவர்களை பல வருடங்களாக தெரியும். கிஷனை நாயகனாக்க பலதடவை முயற்சிகள் நடந்தது அது நடக்காமலே இருந்தது.

ஆனால் இந்தப்படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து விட்டார்கள் கிஷன் பெரிய ஹீரோவாக வருவார், எல்லோருக்கும் வாழ்த்துகள்

எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

‘அஷ்டகர்மா’ விஜய் அவர்கள் நல்ல கதை செய்து அதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளார். காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே அவர்கள் மனம் சொல்வதை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள்.

கிஷன் செல்வாக்கு மிகுந்தவர், அவர் வந்து கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அவர் தன் லட்சியம் ஒன்றை நோக்கி ஆசைப்பட்டு பயணித்துள்ளார். கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்.

சினிமா ஏழை பணக்காரன் யாரையும் பார்க்காது. பஸ் கண்டக்டரை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அந்த வகையில் உண்மையாக உழைக்கும் கிஷன் மிகப்பெரிய நடிகராக வர வாழ்த்துக்கள் நன்றி.

சித்ரா லக்‌ஷ்மண் பேசியதாவது….

இது தமிழ் சினிமாவின் பல தயாரிப்பாளர்களுக்கு குடும்பவிழா ஏனெனில் பல படங்களுக்கு அவர்கள் உதவி செய்துள்ளார்கள். அவர்கள் வீட்டுப்பிள்ளை கிஷன் சொகுசாக வாழ்ந்த பிள்ளை, ஆனால் கடுமையாக இப்படத்திற்கு உழைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

அவர் உழைப்பு கண்டிப்பாக வெற்றி பெறும், டி ஆர் அவர்களையே உதாரணமாக சொல்லலாம், அவர் திரையுலகிற்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது இன்றும் அவர் பெயர் சொன்னால் கைதட்டலால் அரங்கம் அதிர்கிறது. அதே போல் கிஷன் அவர்களும் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் அம்மா டி சிவா பேசியதாவது..

இன்று ஜெயின் ராஜ் ஜெயின் கனவு நனவாகியுள்ளது. 33 வருடங்கள் முன் அம்மா கிரியேஷன்ஸ் உருவாக பணம் தந்து உதவியவர்கள் ஜெயின் ராஜ் ஜெயின் தான் அதை மறக்க முடியாது. அவர்கள் சினிமாவில் எண்ணற்ற தயாரிப்பளர்களுக்கு உதவி செய்துள்ளார்கள். அந்த குடும்பத்தில் கிஷன் நன்றாக வரவேண்டும்.

அந்த குடும்பம் செய்த உதவிகள் இந்தப்படத்தை வெற்றி பெறச் செய்யும். இந்தப்படம் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி.

தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின்

எங்கள் குடும்ப விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். டி ஆர் அவர்களை வைத்து ஒரு படம் எடுத்துள்ளேன், இப்போது எங்கள் குடும்ப படத்தில் பாடி தந்துள்ளார், அவருக்கு நன்றி. இங்கு வந்திருக்கும் அனைவரிடமும் 40 வருடமாக பழகி வருகிறோம். எஸ் ஜே சூர்யா சாருக்கு கொரோனா பாஸிடிவ் இருந்தது, வருவாரா என நினைத்தேன், நெகடிவ் வந்துவிட்டது கண்டிப்பாக வந்துவிடுவேன் என சொல்லி வந்திருக்கிறார் அவருக்கு நன்றி. அஷ்டகர்மா படம் நன்றாக வந்துள்ளது. கிஷன் எங்கள் குடும்ப பெயரை காப்பாற்றி மிகப்பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும், அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

பல்லாண்டுகளாக சினிமா வாழ காரணம் ஜெயின் குடும்பம் தான். ஒரு தயாரிப்பாளர் பணம் கொண்டு வந்தால் தான் படமே நடக்கும், அப்படிபட்ட தயாரிப்பாளர்களே பைனான்ஸியர் இடம் தான் நிற்பார்கள், அவர்கள் தான் பல தயாரிப்பாளரை தாங்கிப்பிடித்தார்கள். தமிழர்கள் பேசுவதை விட சுத்தமாக தமிழ் பேசுவார்கள், எங்கள் சொந்தத்திலிருந்து வரும் கிஷனை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம்.

சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் 10 லட்சம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு தந்தார். இந்த குடும்பம் ஜெயிக்க வேண்டும் தமிழ் சினிமாவை வாழவைக்கும் குடும்பம் அதிலிருந்து வரும் கிஷன் ஜெயிப்பார்.

கிஷனிடம் ஹீரோவுக்கு உண்டான அத்தனை அம்சமும் நன்றாக இருக்கிறது. விஜய் தமிழ்செல்வன் பெயரில் அதிர்ஷ்டம் இருக்கிறது. அவர் நன்றாக படத்தை இயக்கியுள்ளார். கிஷன் நல்ல ஹீரோவாக வருவார் அதில் நம் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பார்.

இயக்குநர் கல்யாண் பேசியதாவது…

நமது பதம் சாரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த குடும்பம் நிறைய சமூக சேவையும் செய்துள்ளது. நிறைய படங்கள் ஜெயிக்க இவர்கள் தான் காரணம் என் படம் உட்பட, அந்த குடும்பத்தில் இருந்து வந்துள்ள கிஷன் ஜெயிக்க வேண்டும் இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

நடிகர், தயாரிப்பாளர் கிஷன் பேசியதாவது….

கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது, எனக்கு இது முதல் மேடை. இது எனது சிறு வயது கனவு. அப்பா படம் எடுக்கும்போது அர்ஜீன் சார் என்னை படத்தில் நடிக்கிறியா எனக் கேட்டார், நான் தலையாட்டினேன் அவரால் தான் அன்று மனதில் நான் நடிகனாக வேண்டும் என பதிந்து விட்டது.

அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் டான்ஸ் நடிப்பு கற்றுக்கொண்டேன். அப்பாவிடம் நடிக்க வேண்டும் என்றேன் ஆனால் இப்போ வேண்டாம் என்றார். அப்புறம் கல்யாணம் ஆகி பிஸினஸில் போய் விட்டேன். மீண்டும் நடிக்க வேண்டும் என சொன்ன போது குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை, அவர்களை கன்வின்ஸ் செய்தேன். விஜய்யிடம் அஷ்டகர்மா கதை கேட்டேன், எனக்கு பிடித்தது. அவரும் புதுசு நானும் புதுசு இது செட்டாகுமா என தயக்கம் இருந்தது பைலட் பிலிம் எடுத்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அப்பா அநாவசிய செலவு செய்யாதே, தேவைகான செலவு செய் அப்போ தான் ஜெயிக்க முடியும் என்றார், அது என் மனதில் இருந்தது. ஒரு நல்ல டீம் கிடைத்தது நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நன்றாக நடித்திருக்கிறார்கள்.

அப்பாவோட ஆசிர்வாதம் எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன். படத்தில் ஒரு பாடல் தான், டி ஆர் அவரே எழுதி பாடி விட்டார் அதறகு நன்றி. இந்த வயதிலும் உற்சாகமாக இருக்கிறார். இந்தப்படம் பிப்ரவரி 11ல் வெளியாகிறது. தியேட்டரில் போய் பாருங்கள், உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இயக்குநர் டி ஆர் ராஜேந்தர் பேசியதாவது…

நான் ஏன் இந்தப்படத்திற்கு வந்தேன், நான் ஏன் திரையுலகிற்கு வந்தேன் எல்லாவற்றிற்கும் காரணம் உள்ளது. கிஷனுக்கும், மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்ஸுக்கு வாழ்த்துக்கள்.

ஒலி நாடா வெளியீட்டு விழாவிற்கு செல்வதில்லை என முடிவெடுத்து இருந்தேன். என்னை பாட வைத்தீர்கள் என்னை எழுத வைத்தீர்கள் எழுதினேன்.

என் வாழ்வில் வசந்தத்தை தந்தவர் ஜெயின், அந்த குடும்பத்திற்காக தான் நான் பணியாற்றினேன். நம் முதலாளி வீட்டு பங்சன் போகலாம் என தான் வந்தேன். இங்கு வந்தவர்கள் அனைவரும் என்னை விட சிறப்பாக பேசிவிட்டார்கள்.

ஒரு வசந்த கீதம் படத்தில் சிலம்பரசனை நடிக்க வைத்தது இந்த குடும்பம் தான். அவர்கள் குடும்பத்து பையன் கிஷன் பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு – மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ்
கதை-எழுத்து-இயக்கம் – விஜய் தமிழ்செல்வன்
ஒளிப்பதிவு – R. b. குரு தேவ்
கலை – கிஷோர்
இசை – L. v. முத்து கணேஷ்
பட தொகுப்பு – மணி குமரன்
நிர்வாக தயாரிப்பு – பினு ராம்
சவுண்ட் மிக்ஸர் – A.M ரஹமத்துல்லா
தயாரிப்பு மேற்பார்வை – A. m. a மாலிக்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

TR open talk at Ashta Karma movie press meet

உண்மையில் இது நடக்குதே.. இதை சொல்லனும்னு தோனிச்சி.. – விஷ்ணு விஷால்

உண்மையில் இது நடக்குதே.. இதை சொல்லனும்னு தோனிச்சி.. – விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

பரபரப்பான கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

இயக்குனர் மனு ஆனந்த் பேசியதாவது…

2006 ல் விஷ்ணு விஷாலை சந்திக்க முயற்சி செய்தேன். தயாரிப்பாளர் ஷ்ரவந்தி மூலம் தான் அவரை சந்தித்தேன். விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது, விஷ்ணு சார் அவரே இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தார்.

என் மீதும் என் திரைக்கதை மீதும் அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. தயாரிப்பாளராக அவர் என்னிடம் சொன்னது, மனு நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இந்தப் படம் வெற்றி பெறுவதை பொறுத்து தான் நான் அடுத்த படங்கள் தயாரிக்க முடியுமா என்பது முடிவாகும் என்றார்.

கௌதம் வாசுதேவன் மேனன் என் குரு, அவருடன் 8 வருடம் வேலை செய்திருக்கிறேன், இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்திலிருந்து மஞ்சிமா மோகன் அவர்களை தெரியும், சின்ன வயதிலிருந்தே நடிப்பதால் அவருக்கு கேமரா பயமே இருக்காது, மிகச் சிறந்த நடிகை. டயலாக் பெருசா இருக்கு, என்னால் பேச முடியாது என சண்டை போடுவார்.

ஆனால் ஒரே டேக்கில் முடித்து விடுவார். ரைசா வில்சனை இப்படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு முதலில் இல்லை, எனக்கு அவரை தெரியாது, எனக்கு பிக்பாஸ் பார்க்கும் பழக்கம் இல்லை, அவரை முதலில் வேண்டாம் என்றேன், ஆனால் அவரை மீட் பண்ணி பத்து நிமிடத்தில் அவர் என் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவர் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார்.

இன்னொரு ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் அவருக்கு இரட்டை குணம் இருப்பது போன்ற பாத்திரம் ஆனால் திறமையாக செய்துள்ளார். இவர்களை தவிர மாலா பார்வதி மேடம், அமான் சார், ராம்ஜி எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள். அபிசேக் இந்தப் படத்திற்கு பிறகு நன்றாக வருவார் என நம்புகிறேன்.

பிரசாந்த் ரங்கசாமி அவரது ரியல் லைஃப் பாத்திரம் போன்றே நடித்திருக்கிறார். இயக்குநர் கௌரவ் எனக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுத்து தந்த ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டுக்கு நன்றி. சில்வா மாஸ்டர் எனக்கு பத்து வருட பழக்கம், தயங்கி தான் அவரிடம் கேட்டேன் என் மீதான பாசத்தில் தான் இந்தப் படம் செய்தார். அஷ்வத் இசையில் மிகப்பெரிய பலமாக இருந்ததற்கு நன்றி. எடிட்டர் ஜீ கே பிரசன்னா இப்படத்திற்கு அட்டகாசமாக எடிட்டிங் செய்துள்ளார். அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன்.

எங்களுடைய படத்தை நம்பி வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அவர்களுக்கும், செண்பகமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. என் குழுவிற்கு மிகவும் நன்றி. இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

ரைசா வில்சன் பேசியதாவது..

நான் மனுவை எப்படி மீட் பண்ணேன் என்பது முதற்கொண்டு அவரே எல்லாம் சொல்லி விட்டார். அவர் சொன்ன கதாபாத்திரம் சவாலாக இருந்தது, இதை மிஸ் பண்ண கூடாது என முடிவு செய்தேன். இப்படத்தில் ஒவ்வொருத்தரும் உயிரை தந்து வேலை செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் எனக்கு துப்பாக்கி தந்தார்கள், எனக்கு துப்பாக்கி என்றாலே பயம், ஆனால் சில்வா மாஸ்டர் தான் என்னை இயல்பாக்கி நடிக்க வைத்தார். இது ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

டிசைனர் பூர்த்தி பேசியதாவது..

மஞ்சிமாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் இயக்குநர் நிறைய இன்புட் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக காஸ்ட்யூம் செய்தோம். படம் அட்டகாசமாக வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது…

இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பெரும் பெரும் கடின உழைப்புடன் பணி புரிந்துள்ளனர், ஒரு மிகப்பெரிய படமாக வந்துள்ளது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. தியேட்டரில் பாருங்கள் நன்றி.

எடிட்டர் ஜீ கே பிரசன்னா பேசியதாவது…

இந்த படம் என் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்திற்கு வாய்ப்பு தந்த விஷ்ணு விஷாலுக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. இந்தப் படம் அனைவருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் அஷ்வத்

இந்த படத்தில் ஐந்து பாடல் இருக்கிறது அதில் இன்று ஒரு பாடல் வெளியாக உள்ளது. இதில் நிறைய பேர் பாடியுள்ளார்கள், வேலை பார்த்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி. ஐந்து பாடல் எடிட்டில் தப்பித்து வந்துவிட்டது, விஷ்ணு விஷால் படங்களில் நிறைய பெரிய இசையமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள், ஆனால் அவர்களை தாண்டி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.

இயக்குனர் மனு வாய்ப்பு தேடிய காலத்தில் அவர் வைத்திருந்த மற்ற ஸ்கிரிப்டுக்கும் என்னை தான் இசையமைப்பாளராக வைத்திருந்தார் அவருக்கு நன்றி. படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகை மஞ்சிமா மோகன் பேசியாதாவது

எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் மேலாளர் தங்கதுரை பேசியதாவது…

விஷ்ணு விஷாலை நீர்ப்பறவை படத்திலிருந்து தெரியும் அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்டபோது இதை தயாரிக்க முடியுமா? என தோன்றியது ஆனால் எல்லோருக்கும் கதை பிடித்திருந்தது. படம் நன்றாக வந்துள்ளது, அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் தந்தை பேசியதாவது…

என் மகன் ஒரு நல்ல மனிதனாக ஸ்டாராக வந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம், அடுத்து அவரை பற்றி நன்றாக எழுதிய பத்திரிக்கைகாரர்கள் காரணம். அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப் படம் பார்த்தேன் மிகச்சிறந்த படம் எல்லோரும் பாருங்கள் நன்றி.

நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…

எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி.

மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது.

ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன். இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர் தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார்.

மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

உதய் அண்ணா, செண்பகமூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது, இப்போது இந்தப் படத்திற்காக சொல்லவில்லை, குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள், இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா அவர்களுக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி, என்றும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். எப்போதும் போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

Vishnu Vishal speech at FIR press meet

சிலம்பரசன் பிறந்தநாள்..; இது சிவகார்த்திகேயன் திரை நாள்

சிலம்பரசன் பிறந்தநாள்..; இது சிவகார்த்திகேயன் திரை நாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் சிவகார்த்திகேயன்

அவர் சினிமாவிற்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.

இதற்காக நன்றி தெரிவித்துள்ளார். அதில்..,

‛‛இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்… நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம். இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், ஏனைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனால, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி – தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே. என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்”

என்றார் சிவகார்த்திகேயன்.

இன்று தான் நடிகர் சிலம்பரசன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today marks STR and Sivakarthikeyan’s special day

More Articles
Follows