கெளதமி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்; போலீசார் வழக்கு பதிவு

கெளதமி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்; போலீசார் வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiசில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுடன் ஒரே வீட்டில் திருமண செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர் நடிகை கௌதமி.

பின்னர் தன் மகளின் வாழ்க்கைக்காக கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலையில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டு பணிப்பெண்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரை விசாரணை செய்ததில் அந்த நபர் கொட்டிவாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த 24 வயதான பாண்டியன் என தெரியவந்தது.

பாண்டியன்(24) மீது 380, 511 என்ற இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.

காதம்பரி பிக்சர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பாண்டியன் வேலை பார்த்து வருவதாகவும், அவர் மது போதையில் கௌதமி வீட்டுக்குள் நுழைந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Man who illegally entered actress Gautami’s house arrested

மீண்டும் இணையும் சூர்யா – கௌதம் மேனன்..; உறுதி செய்த பி.சி. ஸ்ரீராம்

மீண்டும் இணையும் சூர்யா – கௌதம் மேனன்..; உறுதி செய்த பி.சி. ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் சினிமா கேரியரில் நிறைய ஹிட் படங்களை சொன்னாலும் முக்கியமாக காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

சூர்யா – கவுதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா? என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் இணையவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்தாலும் அவையனைத்தும் வதந்தியாகவே முடிந்து போனது.

ஆனால் தற்போது சூர்யா – கவுதம் மேனன் கூட்டணி இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் சூர்யா இணைந்திருக்கிறார். இந்த தகவலை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உறுதிசெய்துள்ளார்.

சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா எனர்ஜியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சூர்யா கை வசம் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என படங்கள் உள்ளன.

Suriya and Gautham Menon joins for a new web series

‘அண்ணாத்த’ அப்டேட்.. : ரஜினிகாந்த் எப்போது சூட்டிங்கில் பங்கேற்பார்.?

‘அண்ணாத்த’ அப்டேட்.. : ரஜினிகாந்த் எப்போது சூட்டிங்கில் பங்கேற்பார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaattheசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்து வருகிறார்.

இதன் முதற்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிக்கட்சி அறிவிப்பு & மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.

இதனால் சினிமாவில் நடிப்பாரா? அல்லது அதையும் ஒத்தி வைப்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி எல்.ரூபனிடம் ‘அண்ணாத்த’ பட அப்டேட் கேட்டுள்ளார் ஒரு ரசிகர்.

அதற்கு பதிலளிக்கையில்… “விரைவில் அப்டேட் வரும். நானும் காத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

Editor Ruben about Rajinikanth’s Annaatthe update

கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor thavasiசிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருவதாக அவரது உறவினரே தெரிவித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தவசியை நடிகர் சௌந்தர ராஜா நேரில் சந்தித்துள்ளார்.

தன் சார்பாக ரூ 10000/- பணத்தையும் விஜய்சேதுபதி வழங்கிய 1 லட்சத்தை உதவியாக வழங்கியுள்ளார்.

Makkal Selvan sends help for actor Thavasi’s cancer treatment

கொல வெறி நாளில் ‘ரௌடி பேபி’ பாடல் தென்னிந்தியளவில் சாதனை..; தனுஷ் செம ஹாப்பி

கொல வெறி நாளில் ‘ரௌடி பேபி’ பாடல் தென்னிந்தியளவில் சாதனை..; தனுஷ் செம ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rowdy baby recordரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி படம் 3.

இந்த படத்தில் தனுஷ் அண்ட் சிவகார்திகேயன் இணைந்து நடித்திருத்தனர். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘கொல வெறி’ பாடல் வெளியாகி இன்றோது 9 ஆண்டுகள் ஆகிறது.

இந்த பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி யு டியூபில் வெளியானது.

இதே தேதியில் தான் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடலும் வெளியானது.

அந்த பாடல் தற்போது வரை 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.( 100 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.)

இந்த பாடலுக்கு யுவன் இசையமைத்திருந்தார். நடனத்தை பிரபுதேவா அமைத்திருத்தார்.

ஒரே நாளில் தனுஷின் 2 பாடல்கள் பெரும் சாதனை படைத்திருப்பது குறித்து தனுஷ் தன் ட்விட்டரில்…

‘கொலவெறிடி’ பாடல் வெளியான 9வது ஆண்டு தினத்தில் ‘ரௌடி பேபி’ பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.

தென்னிந்திய அளவில் முதல் முறையாக 1 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளதற்கு நாங்கள் கௌரவமாக நினைக்கிறோம். எங்கள் மொத்த குழுவும் எங்கள் இதயத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

Massive – Rowdy baby hits 1 billion views on youtube

கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கியிருந்த படம் மூக்குத்தி அம்மன்.

தீபாவளி வெளியீடாக இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் போலி சாமியார்கள், மத அரசியல் உள்ளிட்டவைகளை காட்டியிருந்தனர்.

இந்து மற்றும் கிறிஸ்துவ மத போலி சாமியார்கள் எப்படியெல்லாம் அப்பாவி பொது மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருந்தனர்.

இப்படத்தின் ரிலீசின் முன்பே சில காட்சிகளை வெளியானது.

அதில் கிறிஸ்துவ போலி மத போதகராக மனோ பாலா நடித்திருந்தார்.

மதப்பிரசங்க மேடையில் காட் இஸ் காலிங் எனச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவார். அப்போது அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா, ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான் என்ற வசனத்தை பேசுவார்.

ஆனால் படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை.

அதாவது கிறிஸ்துவ மதத்தை கிண்டலடிக்கும் சில நிமிட காட்சிகளை நீக்கிவிட்டனர்.

ஆனால் படம் முழுவதும் காட்டப்பட்டுள்ள இந்து மதத்தை கிண்டலடிக்கும் காட்சிகளை மட்டுமே படமாக காட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆர்ஜே. பாலாஜிக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Mookuthi Amman controversial scenes deleted

More Articles
Follows