மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

*’இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோரதங்கள்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு*

எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோரதங்கள்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை கொண்ட ‘மனோரதங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

இதில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கிறது.

இந்த ஆந்தாலஜி தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தியாவின் குடும்பங்கள் சகிதமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பொழுது போக்கு டிஜிட்டல் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ஜீ 5 – மலையாள திரையுலகின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘மனோரதங்கல்’ எனும் பாரம்பரிய தொடரை தொடங்குவதாக அறிவித்தது.

‘எம் டி யின் பிரம்மாண்டமான படைப்பு ‘ எனும் முத்திரையுடன் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று திரையிடப்படும்.

மடத் தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர் என்ற அசலான பெயரைக் கொண்டிருந்தாலும், எம் டி வாசுதேவன் நாயர் என புகழ்பெற்ற இலக்கிய மேதையின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இந்த படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘மனோரதங்கள்’ என்பது கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் பசுமையான பின்னணியில் மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும் ஒரு சினிமா பயணமாகும். இதில் இடம்பெறும் அனைத்து கதைகளும் எம் டி வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டது.

இந்தத் தொடர் மலையாள சினிமாவில் நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளை உச்சநிலையில் ஒன்றிணைக்கிறது.‌ ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது கதைகள் மூலம் இந்த தொடர் மனித நடத்தையின் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.‌ இரக்கம் மற்றும் மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அடிப்படை உணர்வு தூண்டுதல்கள் ஆகிய இரண்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

உன்னதம் – முதன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதன் மூலம் உலகளாவிய அனுபவங்கள், உணர்வுகளை துல்லியமாக பேசும் மனித நேயத்தின் செழுமையான மற்றும் நுட்பமான சித்தரிப்பை இந்த தொடர் வழங்குகிறது.

முதன் முறையாக நட்சத்திர நடிகர்களும், திறமையான இயக்குநர்களும் ஜீ 5 யில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய ஒன்பது அழுத்தமான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது.

இதில் ‘ஒல்லவும் தீரவும்’ ( சிற்றலைகள் மற்றும் நதிக்கரை) – பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ : ஒரு யாத்திரை குறிப்பு ( கடுக்கண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) – இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

ஷிலாலிகிதம் (கல்வெட்டுகள்) – இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன் -சாந்தி கிருஷ்ணா – ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

காட்சி ( பார்வை) -இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து – ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

வில்பனா ( தி சேல்) – இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது- ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக்- இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் ( சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் தருணம்) – இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ்- இந்திரன்ஸ்- நெடுமுடி வேணு- என் ஜி பணிக்கர் – சுரபி- லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும் ( மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) – இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக் – இஷித் யாமினி- நசீர் நடித்துள்ளனர்.

காதல் காட்டு ( கடல் காற்று) – ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித் – அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

இது தொடர்பாக ஜீ 5 இந்தியாவிற்கான தலைமை வணிக பிரிவு அதிகாரி மனீஷ் கல்ரா பேசுகையில், ” மனோரதங்கல் மூலம் இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையான தருணத்தை நாங்கள் காண்கிறோம். மலையாள சினிமாவின் ஆகச் சிறந்த திறமைசாலிகளை ஒன்றிணைத்திருப்பது… எம் டி வாசுதேவன் நாயரின் மரியாதை மற்றும் போற்றுதலுக்குரிய கொண்டாட்டமாகும். ஒரு இலக்கிய ஜாம்பவான்- சினிமாவில் தொலைநோக்கு பார்வையாளராக பயணித்த அவரது 90 ஆண்டு கால பாரம்பரியம் ஈடு இணையற்றது. மேலும் அவரது கதையை ஜீ 5 தளத்தில் இடம்பெறச் செய்திருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இந்த தொகுப்பானது எம் டி வாசுதேவன் நாயரின் புத்திசாலித்தனத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களை பெற்ற… மலையாள சினிமாவின் விதிவிலக்கான படைப்பாற்றலை காட்சிப்படுத்துகிறது. இந்த கதைகளின் ஊடாக வளர்ந்து வரும் ரசிகர்களின் ஆர்வத்தையும், உலகளாவிய கவனயீர்ப்பையும் உணர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘மனோரதங்கல்’ படைப்பை டப்பிங் செய்து பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடையச் செய்கிறோம். ” என்றார்.

பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் பேசுகையில்…

,” எம் டி வாசுதேவன் நாயரின் வாழ்நாள் அபிமானி என்ற முறையில் ‘மனோரதங்கல்’ வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த தொகுப்பானது சாதாரண கதைகளின் தொகுப்பாக இல்லை. இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இது உலகளாவிய அனுபவங்களையும், உணர்வு குவியலையும் குறிக்கிறது” என்றார்.

நடிகர் மோகன்லால் பேசுகையில்…

” மனோரதங்கல் எம் டி யின் கொண்டாட்டம் – வாசுதேவன் நாயரின் நம்ப முடியாத மரபு ..கதை சொல்லிகள் மற்றும் கலைஞர்களின் தலைமுறைகளை வடிவமைத்து ஊக்கப்படுத்திய ஒரு மரபு. பிரியதர்ஷின் இயக்கத்தில் ‘ஒல்லவும் தீரவும்’ படைப்பில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அனுபவம்.

மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் சாரத்தை.. கேரளாவின் அழகான மற்றும் கலாச்சார ரீதியாக வளமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதை. இந்தத் தொகுப்பு எங்கள் துறையில் தலை சிறந்த ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது.

மேலும் இந்த அழுத்தமான மற்றும் ஆழமாக பயணிக்கும் கதைகளை பார்வையாளர்கள் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எம் டி வாசுதேவன் நாயர் எனும் மேதைக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தயாரான இந்த படைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது.” என்றார்.

நடிகர் மம்முட்டி பேசுகையில்…

” மனோரதங்கல் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பாக்கியமும் கூட. இந்தத் தொகுப்பு எம்டி வாசுதேவ நாயர் எனும் மேதைக்கான காணிக்கை.

திறமையான இயக்குநரான ரஞ்சித் இயக்கத்தில் ‘கடுக்கண்ணவ: ஒரு யாத்திரை குறிப்பு’ படத்தில் வாசுதேவ நாயரின் பணி எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்தது. அதன் ஆழமான கதை மற்றும் உணர்வால் இதயங்களை தொடும் இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும் மலையாள திரையுலகின் புகழ்பெற்ற கதை சொல்லல் மற்றும் இயக்குநரின் திறமையை எடுத்துரைக்கிறது.

மனோரதங்கல் ஒரு தலைசிறந்த ஒப்பற்ற படைப்பு. மேலும் எம் டி யின் இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்திற்கும், அய்யாவின் மரபிற்கும்.. பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில்…

” மனோரதங்கல் படத்திற்காக ‘ஒல்லவும் தீரவும்’ படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும். எம் டி வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்டுகள் தலைசிறந்த படைப்புகள். ஒவ்வொன்றும் மனித இயல்பின் நுட்பமான உணர்வுகளை ஆராயும் கலை படைப்பு. அவரது பார்வையை திரையில் கொண்டு வருவது என்பது சவால் மிக்க பொறுப்பு மற்றும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத் தொகுப்பானது திரைத்துறையில் உள்ள பெரிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியாகும்.

ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான குரலை உருவாக்கி ஆழமான மனித மற்றும் உலகளாவிய தொடர்புள்ள கதைகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர் எம்டியின் நீடித்த புத்திசாலித்தனத்திற்கு சான்றாக நிற்கும் மனோரதங்கல் படைப்பின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார் .

எம் டி வாசுதேவன் நாயர் எனும் இலக்கிய மேதையை உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரும் ஜீ 5 ஒரிஜினல் படைப்பான ‘மனோரதங்கல்’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று திரையிடப்படுகிறது.

Malayalam Anthology Manoradhangal A tribute to MT Vasudevan Nair

——–

என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது மனைவி திவ்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாழை’.

ஓடிடி தளத்திற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்தது.. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கலையரசன் நாயகனாக நாயகிகளாக திவ்ய துரைசாமி மற்றும் நிகிலா விமல் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தென்கிழக்கு என்ற பாடலை பாடகி தீ பாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியீட்டை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது நாயகி திவ்யா துரைசாமி பேசியதாவது..

பத்திரிக்கையாளர்கள் உங்களுடன் நான் அமர்ந்து இந்த மேடையை பார்த்திருக்கிறேன். அதுபோல இந்த மேடையில் இருந்தும் உங்களை நான் பார்த்து இருக்கிறேன்.. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

ஆனால் இந்த முறை நான் ஒரு நடிகையாக இங்கே நிற்கிறேன்.. கொஞ்சம் நடுக்கம் இருக்கிறது..

வாழை படத்திற்காக என்னை மாறி செல்வராஜை தொடர்பு கொண்ட போது ‘வாழை’ என்னுடைய லட்சியப் படம்..கனவு படம் என்றார். அதற்கு நீங்கள் தயார் என்றால் நீங்கள் நடிக்கலாம் என்றார்.. அதன்படியே நான் என்னை முழுவதுமாக இந்தப் படத்திற்காக சரண்டர் செய்து விட்டேன்.. படமும் சிறப்பாக வந்திருக்கிறது.” என்று பேசினார் திவ்யா.

இந்த படத்திற்காக வாழை இலை கலரில் அழகான பச்சை கலர் உடை அணிந்து வந்திருந்தார் திவ்யா

பின்னர் மாரி செல்வராஜ் பேசியதாவது…

என்னை பாதித்த சம்பவங்களை தான் நான் படமாக்கிக் கொண்டு இருக்கிறேன்.. என்னுடைய முதல் படைப்பாக வாழை என்ற இந்த படத்தை இயக்கத் தயாராக இருந்தேன்.. ரூ. 50 லட்சத்தில் இந்த படத்தை முடித்து விடலாம் என காத்திருந்தேன்.

ஆனால் அதற்குள் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்னர் கர்ணன் & மாமன்னன் என்ற அடுத்த அடுத்த படங்களை இயக்கி விட்டேன்.

மாமன்னன் படத்தை இயக்கும்போதே ‘வாழை’ படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணம் அதிகமாகவே இருந்தது.. எனவே உடனே தொடங்கி விட்டேன்.

இதன் பின்னர் துருவ் நடிக்கும் பைசன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன்.. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சிறுவன் இப்போது பெரிய பையனாகி விட்டான்.. அவன் என் உறவினர் தான்..

அவன் என்னை பார்த்து ஏதோ ஒன்று கேட்பது போலவே இருந்தது.. நீங்கள் அடுத்தடுத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. எங்கள் படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்பது போலவே கேள்வி இருந்தது?

இதில் இடம்பெற்ற ‘பாதகத்தி’ பாடல் என்னை தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது.

நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறிதான் நடிகர்களிடம் வேலை வாங்கினேன்.

நிகிலா விமலுக்கு சிரமமான காட்சிகள் இல்லை.. ஆனால் கலையரசன் 100 கிலோ வெயிட்டை தலையில் சுமந்திருந்தார். திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார். நிறைய முறை ரீடெக் வேறு எடுத்தேன்.. அவ்வளவு பாரத்தை சுமந்தால் கழுத்து வலி அதிகமாகவே இருக்கும்.. ஆனாலும் எனக்காக கடுமையாக உழைத்தார்கள்.. பார்க்கவே பாவமாக இருக்கும்.

என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது.

நானும் என் மனைவியும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டோம்.. என்னுடைய காதல் நாடக காதல்.. என்னைப் பற்றியும் சினிமா பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருப்பவர் திவ்யா.. எனவே என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டேன்.. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’.

என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம் தான் இந்த வாழை.. இந்தப் படத்தை பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது.. அடுத்தடுத்த மீட்டிங்கில் சந்திக்கும்போது பேசலாம்..” என்றார்.

Public will understand me from Vaazhai says Mari Selvaraj

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

*பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!*

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.

வருகிற ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சில தினங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தியும் சில தினங்களுக்கு முன் ரத்த தானம் செய்து தன் ரசிகர்கள் அழைத்து பாராட்டி கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Suriya appreciated his fans and donated blood

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் !!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

தனித்துவமான படைப்புகள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடும் படங்களை வழங்கியதன் மூலம், மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தனது 101 வது படைப்பாக இந்த புதிய படத்தினை பெரும் பொருட்செலவில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படைப்பாக உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படம் மூலம் நாயகனாக ஒரு புதிய அவதாரத்தை எடுக்கிறார். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கம்ர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்குகிறார்.

இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்

Thenandal films 101 movie titled Mr House Keeping

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

தீபாவளி முதல் ‘அமரன்’ – அக்டோபர் 31, 2024

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் சி.எச். சாய்.

புரொடக்‌ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.

தன்னலமற்ற நமது இந்திய இராணுவ வீரர்களின் வீரத்தைக் கண்டு வியக்கவும், தியாகத்தைப் போற்றவும் தயாராகுங்கள்.

ஜெய் ஹிந்த்!

Amaran movie will be released on 31st Oct 2024

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!*

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

Vishnu Vishal fans celebration at TN and Pondy by Blood donation

More Articles
Follows