குவார்ட்டர்-ஸ்கூட்டர் கிடையாது; கமலின் புதிய கட்சி கொள்கைகள்…

குவார்ட்டர்-ஸ்கூட்டர் கிடையாது; கமலின் புதிய கட்சி கொள்கைகள்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Makkal Neethi Maiam Kamal new party policy updatesஉலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் புதிதாக தொடங்கியுள்ள கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது தன் கட்சியின் கொள்கை குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

கட்சியின் கொள்கை என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சிறப்பான ஆட்சியைக் கொடுத்து கொண்டிருக்கும் தலைவர்களின் கொள்கைகள் தான் எனது கொள்கைகள்.

தரமான கல்வி, ஜாதி-மதம் இல்லாத ஆட்சி, ஊழல் இல்லாத நிர்வாகம், கல்வியை அரசே ஏற்று நடத்துதல், இலவசங்களை எதிர்பார்க்கும் நிலையை மாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி பிறருக்கு உதவுபவர்களாக மாற்றுவது, காவிரி நதிநீர் பிரச்னைக்குத் தீர்வு, அண்டை மாநிலங்களுடன் சுமுக உடன்பாடு, ஒருவரே முதல்வர் பதவியில் நீடிக்கும் முறை இல்லாதது போன்றவை எங்களது கட்சியின் முக்கிய கொள்கைகள்.

இலவசங்கள் கிடையாது; வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

குவார்ட்டர் ஸ்கூட்டர் ஆகியவை நிச்சயம் கிடையாது. வேலை வாய்ப்புகள் மூலம் பல பேருக்கு ஸகூட்டர் வாங்கித் தரும் நிலைமை உருவாக்கப்படும்.

இவ்வளவு தானா எனக் கேட்பவர்களுக்கு பக்கம் பக்கமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அவை விரைவில் வெளியிடப்படும்” என்றார் கமல்ஹாசன்.

Makkal Neethi Maiam Kamal new party policy updates

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசனின் புதிய கட்சி

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசனின் புதிய கட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan new political party titled Makkal Needhi Maiamமுன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

அதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களைச் சந்தித்து பேசினார்.

பிறகு கலாமின் நினைவு இடத்தில் அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.

அங்கிருந்து பயணத்தை தொடர்ந்த அவருக்கு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பொதுமக்களிடையே சிறிது நேரம் பேசினார்.

அதன் பின்னர் மதுரையில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கமல்க்கு வந்தார்.

அவரது இயக்கத்தின் மாவட்டச் செயலர்கள் வரிசையாக நின்று வரவேற்க கட்சிக் கொடியை ஏற்றினார்.

கட்சி கொடியில் சிவப்பு, வெள்ளை கைகள் இணைந்திருக்க கருப்பு நிறத்தின் நடுவே ஒரு வெள்ளை நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.

பின்னர் தனது கட்சியின் பெயரை ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Kamalhassan new political party titled Makkal Needhi Maiam

நல்ல நேரம் பார்த்து கட்சியை அறிவிக்கும் பகுத்தறிவாளர் கமல்.?

நல்ல நேரம் பார்த்து கட்சியை அறிவிக்கும் பகுத்தறிவாளர் கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasanதன் அரசியல் கட்சி அறிவிப்பை இன்று காலை கமல் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று மாலை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில்தான் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார்.

அதற்கு காரணம் இன்று வளர்பிறை என்பதாலும் துக்லா பட்சம் (பரணி) என்பதாலும் அப்போதுதான் அறிவிக்கிறாராம்.

ஆன்மிக நம்பிக்கையில்லாத பகுத்தறிவாளர் கமல் இப்படி செய்யலாமா? என விவரமறிந்தவர்கள் கேட்கின்றனர்.

6 அத்தியாயம் படம் பார்த்த பிரபலங்களின் விமர்சனம்

6 அத்தியாயம் படம் பார்த்த பிரபலங்களின் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 athiyayamஇயக்குனர் பாரதிராஜா

தெளிவான சிந்தனை, சரியான திட்டமிடல் , புதிய வகை கதை சொல்லல், என தமிழ்சினிமாவை புது தளத்திற்கு அழைத்து செல்லும் இந்த 6 அத்தியாயம்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

ரொம்பவே வித்தியாசமான முயற்சி , 6 கதைகளின் முடிவும் ஆச்சரியபடுத்துகின்றன, நிச்சயம் வெற்றி பெறும். 6 இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் அறிவழகன்

இந்த படத்தில் கையாளப்பட்ட திரைக்கதை யுக்தி பார்வையாளர்களின் துடிப்பை இறுதிவரை பரபரப்பாகவே வைத்திருக்கும். அதுவே இதன் வெற்றி!

இயக்குனர் ரவிகுமார்

இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திறமையான 6 இயக்குனர்கள் மற்றும் நிறைய இளம் டெக்னிசியன்களை அறிமுகவாவதே இதன் சிறப்பு.

இயக்குனர் தாமிரா

ஒரே படத்தில் பலவித வண்ணங்கள் பலவித சுவைகள் உங்களை சுவாரசப்படுத்தும்.

இயக்குனர் மீராகதிரவன்

ஆறு இயக்குனர்களின் பார்வையில் ஆறுவிதமான பேய்கள் பற்றிய அலசல் தமிழ்சினிமா கண்டிராத புதிய முயற்சி.

தயாரிப்பாளர் / இயக்குனர் சுரேஷ்காமாட்சி

தமிழ்சினிமா எப்போதுமே புதுவகை முயற்சிகளுக்கு கை கொடுக்கும் , அதன்படி இந்த 6அத்தியாயம் தமிழ்சினிமாவின் புது அத்தியாயமாக வெற்றி பெறும்.

இயக்குனர் கே.எஸ் .தங்கசாமி

ஒரு திரைப்படம் 6 திரைகதைகள் & 6 களங்கள் , 6 இயக்குனர்கள், இந்த திரைப்படம் மூலமாக நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகம் ஆகிறார்கள் தயாரிப்பாளர் உட்பட, அனைவரும் திரைத்துறையில் சாதிக்க 6 அத்தியாயம் பாலமாக அமையும். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்…

நடிகை அதுல்யாரவி

ரொம்ப வித்தியாசமான முயற்சி, 6 விதமான கதைகள், யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் என இறுதிவரை பரபரப்பாக கொண்டுசென்றுள்ளனர் , நிச்சயம் வெற்றிபெறும்.

நடிகர் ராமதாஸ்

ஆறு புள்ளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அழகிய கோலம் இந்த 6 அத்தியாயம்.

நடிகர் வின்செண்ட் அசோகன்

சிரிப்பு , ஆச்சரியம் , காதல் , பயம் , அமானுஷ்யம் , மிரட்சி என அனைத்துமே ஒரே படத்தில் , எதிர்ப்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு வியப்பில் ஆழ்த்தியது இந்த 6 அத்தியாயம்.

மனுஷ்யபுத்திரன்

குறும்படங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பதே இது போன்ற படங்களும் அதன் கருத்தாக்கமுமே.

மின்னம்பலம்

மிகக் குறைவான செலவில் (ஓரிரு லட்சங்கள்) ஒவ்வொரு படமும் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியும்போது ஆச்சர்யமாக உள்ளது. இவ்வளவு சிக்கனமாக எடுக்கப்பட்ட படமும் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முடியும், பார்வையாளர்களின் ஆவலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்னும்போது கோடிகள் கொட்டப்பட்டு உருவாகி விரைவில் திரையரங்குகளிலிருந்து விடைபெற்றுச் செல்லும் படங்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றன. பார்வையாளர்களைக் கவர அளவு முக்கியமில்லை என்பதை ‘6 அத்தியாயம்’ உணர்த்துகிறது.

அம்புலி ஹரிஸ்நாரயானன்

6 அத்தியாயம் படத்தின் ப்ரிவியூ ஷோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது… எதிர்பார்ப்புக்கு குறைவில்லாமல் ஆறு கதைகளும்… ஃப்ரெஷ்ஷாக இருந்தது… ஆறும் ஹாரர்தான்.. ஆனால், ஆறும் வேறு வேறு வகை ஹாரர்… அதுதான் இந்த படத்தின் பலம்.. மேலும், ஆறு கதைகளின் க்ளைமேக்சை முடிவாய் கோர்த்து ஒன்றாக சொன்ன முயற்சி நல்ல யுத்தி.

கூடுதல் போனசாய்… End Credits-ல் வரும் நண்பர் சாம் மற்றும் ம.கா.பா ஆனந்தின் பாடலான ‘குண்டுமல்லி ஒண்ணு வச்சிவிடவா’ பாடல் நல்லதொரு ஃபினிஷிங் டச்சாய் அனிமேஷன் அட்டகாசம்.

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த தகவல்கள்

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and karthik subbarajதனுஷ் நடிப்பில் வடசென்னை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.

மேலும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாரி 2’.

இப்படப்பிடிப்பினை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது.

இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கிறது.

இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.

அறம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷை இயக்கும் கோபி

அறம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷை இயக்கும் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gv Prakash and gopi nainarநயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து கோபி இயக்கிய படம் ‘அறம்’.

இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று படக்குழு கூறியிருந்தது.

ஆனால் தற்போது நயன்தாரா பிசியாக உள்ளதால் இப்படம் சற்று தள்ளிப்போயுள்ளது.

இதனால் இடைப்பட்ட காலத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை கோபி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows