கேரள பேரழிவை மையப்படுத்தி தயாராகும் *மஹா அவதார் ஐயப்பன்*

Maha Avatar Ayyappan movie story based on Kerala Floodசினிமாவில் காதல், ஆக்சன், பேய் படங்களுக்கு எப்படியொரு சீசன் இருக்கிறதோ அதுபோல் சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கும் ஒரு சீசன் இருக்கிறது.

ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் பக்தர்களுக்காகவே ஏராளமான சாமி படங்கள் ரிலீசான காலம் உண்டு.

சுவாமி ஐய்யப்பன், மணிகண்டன், எங்கள் சாமி ஐய்யப்பன், பதினெட்டாம் படி உள்ளிட்ட பெயர்களில் பல ஐயப்பன் படங்கள் வந்துள்ளன.

ரஜினி, கமல், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் அதுபோன்ற படங்களில் நடித்தார்கள். ஆனால் தற்போது அது போன்ற படங்கள் வருவதில்லை.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு மஹா அவதார் ஐயப்பன் என்றொரு படம் தயாராகிறது.

செல்வபாரதி என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர் பழம்பெரும் நடிகர் பாண்டி ஆர்.செல்வராஜின் மகன். இ.ராசா என்பவர் தயாரிக்கிறார்

அண்மையில் கேரளாவில் நடைபெற்ற வெள்ள சேதங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கவுள்ளனர்.

புதுமுகங்கள் செல்வின், இளங்கோ, சமி ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

கே.தினகர் வசனம் எழுத ந.குமார்லால் நேரு என்பவர் இசையமைக்கிறார்

“இந்தக்கால இளைஞர்களுக்கு ஐய்யப்பனின் மகிமையை கொண்டு செல்லும் முயற்சியே இந்தப்படம்.” என்கிறார் பட இயக்குனர் எஸ்.செல்வபாரதி.

Maha Avatar Ayyappan movie story based on Kerala Flood

Overall Rating : Not available

Related News

Latest Post