கபசுபரே… கேரளா ஆந்திரா டெல்லி போல ஆள வருக வாத்தி..; விஜய் ரசிகர்கள் போஸ்டர்

Madurai Vijay fans wall posters goes viral in internet tooநடிகர் விஜய் வருகிற ஜீன் 22ஆம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதால் மக்கள் அவதிப்படுவதால் தன் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என முன்பே கூறியிருந்தார்.

இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் அடங்குவதாக இல்லை. தங்கள் தளபதியை வாழ்த்தி விதவிதமாக போஸ்டர்கள் அச்சடித்துள்ளனர்.

அதில் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

‘வாங்கய்யா வாத்தியாரய்யா’ என குறிப்பிட்டு அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது..

கேரளா போன்ற நேர்மையான அரசாகவும்
ஆந்திரா போன்ற மக்களுக்கான அரசாகவும்
டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும்
தமிழ்நாடு அமைய வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா. ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோம் ஐயா

என ஒட்டியுள்ளனர்.

மற்றொரு போஸ்டரில்.. எங்களை காக்கும் கபசுரரே என்று அச்சடித்துள்ளனர்.

அதாவது.. கொரோனாவில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கபசுப நீரை குடிக்க அரசு சொல்லியுள்ளது. அதை குறிப்பிட்டு விஜய்யை வாழ்த்தியுள்ளனர்.

மதுரை ரசிகர்கள்தான் இத்தகைய போஸ்டர்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற போஸ்டர்கள் இதோ…

https://twitter.com/DrVijayGroup/status/1274238572028022784

Madurai Vijay fans wall posters goes viral in internet too

Overall Rating : Not available

Latest Post