தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழில் நேரடியாக தயாராகும் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசின் வரி விலக்கு கிடைக்கும்.
இதில் சில நிபந்தனைகள் இருந்தாலும், இதுவொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
ஆனால், தமிழில் பெயர் வைப்பதால் தயாரிப்பாளர்கள் மட்டுமே பயன் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது-
இது தொடர்பாக வழக்கு ஒன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
கடந்த பத்தாண்டுகளில் 2000க்கும் அதிகமான படங்களுக்கு; வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படங்களுக்கு கட்டணத்தை 30 சதவீதம் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த விதிமுறைகளில் பாராபட்சம் காட்டக்கூடாது.
ஆனால் தமிழில் பெயர் வைப்பதால், தமிழ் வளர்ச்சிக்கோ, படம் பார்க்கும் ரசிகர்களுக்கோ பலன் இல்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது.