முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ நாயகி.?

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ நாயகி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madonna Sebastian roped in for Thalapathy 65லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சினைக்கு பிறகு ரிலீசாகும் என தெரிகிறது.

இதனையடுத்து உருவாகவுள்ள தளபதி 65 படத்தின் தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன.

விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மடோனா செபாஸ்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் மடோனா.

தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, வானம் கொட்டட்டும், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Madonna Sebastian roped in for Thalapathy 65

அசத்தும் ‘அசுரன்’ தனுஷ்.; சீனாவுக்கு கொண்டு போகும் தாணு

அசத்தும் ‘அசுரன்’ தனுஷ்.; சீனாவுக்கு கொண்டு போகும் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushs Asuran movie China language dubbing updates பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் தனுஷ் நடித்த படம் அசுரன்.

தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் மஞ்சு வாரியர், அபிராமி, கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தனுஷ் நடித்த படங்களிலேயே ரூ. 100 கோடி வசூலித்த முதல் படம் இதான்.

தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். அண்மையில் இப்பட போஸ்டர் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து சிவராஜ் குமார் தயாரிப்பில் கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் அசுரன் சீனா மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Dhanushs Asuran movie China language dubbing updates

பிரஸ்காரன் கிழிப்பான்.. குஷ்பூவின் திமிர் பேச்சு.; ஆடியோ ரூபத்தில் ஆப்பு.! (Audio)

பிரஸ்காரன் கிழிப்பான்.. குஷ்பூவின் திமிர் பேச்சு.; ஆடியோ ரூபத்தில் ஆப்பு.! (Audio)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Khushboo scolding Media Her voice Audio leakedஹீரோ.. ஹீரோயின்கள்… இவர்கள் பிரபலமாக ஒரே காரணம் மீடியா தான்.

இவர்களில் ஒரு சிலர் புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டால் மீடியாவை மதிப்பது இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்பூவும் தற்போது தன்னை இணைத்து கொண்டுள்ளார் எனலாம்.

அவர் தன் திரையுலக சம்பந்தபட்ட ஒரு குரூப்பில் ஆடியோ வெளியிட அதுவே தற்போது அவருக்கு ஆபத்து (ஆப்பு) ஆக அமைந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ளதால் சில தளர்வுகள் மற்றும் விதிமுறைகளுடன் டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துபவர்களுக்கு குஷ்பு ஒரு ஆடியோ அனுப்பி உள்ளார். அதில் தேவை இல்லாமல் பத்திரிகையாளர்களை ஒருமையில் அவன் இவன் என விமர்சித்துள்ளார்.

இந்த ஆடியோ லீக்கான நிலையில் ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபத்திற்கும் ஆளாகியிருக்கிறார் நடிகை குஷ்பு.

மேலும் குஷ்பூ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வந்துள்ளன.

Actress Khushboo scolding Media Audio leaked

 

BREAKING கொரோனா அடி அசுர அடி..; ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..– ரஜினி

BREAKING கொரோனா அடி அசுர அடி..; ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு..– ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini statement about Corona awareness and preventionஉலகையே அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி வருகிறது.

கிட்டதட்ட 6 மாதங்களாக உலக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த கொரோனா விழிப்புணர்வு பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு.. என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும்… ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து பாதுகாப்பதே அடிப்படை கடம…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு

Rajini statement about Corona awareness and prevention

அந்த அறிக்கை…

rajini statment corona virus

கொரோனா விஷயத்தில் மெத்தனம் கூடாது..; வேலம்மாள் கல்வி வளாகத்தில் சூரி பேச்சு

கொரோனா விஷயத்தில் மெத்தனம் கூடாது..; வேலம்மாள் கல்வி வளாகத்தில் சூரி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sooris Corona awareness speech at Velammal Campus“வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்” மற்றும் “மாற்றம் பவுண்டேஷன்” மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் மனிதாபிமான செயலை அவர் பாராட்டினார்.

நடிகர் சூரி பேசுகையில்,

“எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள். எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்.

இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது.

கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான்.

‘தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்’ என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.

சமீப காலமாக பல உதவிகளை செய்து வரும் “வேலம்மாள் கல்விக் குழுமம்” என்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை மிகவும் மதிக்கிறேன்.

மேலும், “மாற்றம் பவுண்டேஷன்” திரு. சுஜித், திரு. உதய்சங்கர் அவர்களும் அவர்களால் ஆன பல உதவி திட்டங்களை செய்து வருகின்றனர்.

இன்று இவர்களோடு சேர்ந்து உங்கள் அனைவருக்கும் உதவ நான் அன்போடு கேட்டுக் கொண்டேன். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமன்றி உங்கள் தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள்.

அதன் மூலமாக இன்று உங்களுக்கு இந்த உதவியை செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.

நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள்.

உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

Sooris Corona awareness speech at Velammal Campus

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காத வேல் முருகன்

கொரோனா விழிப்புணர்வுக்காக சம்பளமே வாங்காத வேல் முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Velmurugans Corona awareness short filmசுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பாடகர் வேல்முருகன்.

இதைத்தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் தனது குரல் பங்களிப்பையும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தர்மபிரபு ஆகிய படங்களில் நடித்தும் தனது திரைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தில் இவர் பாடிய ‘கத்தரி பூவழகி…’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களிலும் நாட்டுப்புற மேடைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துவரும் வேல்முருகன் கொரோனா நோய் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.

கொரோனா நோய்க்காக பல்வேறு தனிப்பாடல்கள் வெளியிடப்பட்டாலும் வேல்முருகன் நடித்து வெளியாகியிருக்கும்

‘பச்சை மண்டலம்’ என்ற இந்த குறும்படம் மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் யாரும் சொல்லாத ஒரு முக்கியமான கருத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமான மனிதர்களை நாம் ஒதுக்கி வைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பதையும், அவர்களை மனிதாபிமானத்தோடு எப்படி நடத்த வேண்டும் என்பதையும் உணர்த்தும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள்ளது.

எனவே இந்த குறும்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும் பாராட்டுகளும் குவிகின்றன.

இன்றைய சூழ்நிலையில் சமூகத்திற்கு மிக மிக அவசியமான விழிப்புணர்வு கருத்தோடு வெளியாகியுள்ள இந்த குறும்படத்துக்கு கொரோனா நோயை வெல்ல போராடும் அரசு அதிகாரிகளும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் கூட பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கொரோனா என்ற நோயினை மட்டுமே எதிர்க்க வேண்டும். தவிர்த்து, நோயாளியை எதிர்க்க கூடாது என்ற கருத்தை உணர்வு பூர்மமாக விளக்கும் ‘பச்சை மண்டலம்’ குறும்படத்தை ஷில்டன் தேவராஜ் இயக்கியுள்ளார்.

குறும்படத்தை கைஷோ கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.நாக சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்துள்ளார். கண்மணி ராஜா திரைக்கதை வசனத்தை எழுத, தஜ்மீல் ஷெரீப் இசையமைத்துள்ளார்.

இந்த குறும்படத்தில் பாடகர் வேல் முருகனுடன் சிற்றரசு, ரம்யா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Singer Velmurugans Corona awareness short film

More Articles
Follows