தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணராக மாறிய கிட்ஸ்.. தியேட்டரில் கடவுள் கட்-அவுட்.; மக்களிடையே மாற்றம் தந்த ‘மாயோன்’

தனுஷ்-அனிருத் இணைந்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ பட பாடலுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவான படம் ‘திருச்சிற்றம்பலம்’.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
இதில் தனுஷுடன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தாய்க்கிழவி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் பாடலை எழுதி பாடி உள்ளார்.
இந்த நிலையில் இந்த பாடலின் வரிகளுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
அதில்…
“வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் #கிழவி #தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு #திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள அந்த பாடலில் வரும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கி விட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நன்றி
சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
26.06.2022 / பிற்பகல் 1.40மணி.
வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் #கிழவி #தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு #திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி, பாடி 1/2 @dhanushkraja @SunTV @sunpictures pic.twitter.com/y8xdaZrNbe
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) June 26, 2022
Milk vendors association against to Thiruchitrambalam song

கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இணையும் லாரன்ஸ் & எல்வின்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிக்கு முத்து படையப்பா உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ். ரவிக்குமார்.
கமல்ஹாசனுக்கு தெனாலி பஞ்சதந்திரம் தசாவதாரம், அஜித்துக்கு வில்லன் வரலாறு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார்.
மேலும் சரத்குமாருக்கு நாட்டாமை, சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.
ஆனால் சமீபகாலமாக படங்களை இயக்காமல் மற்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் கூகுள் கூட்டப்பா, மாயோன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் படங்களை இயக்க ரெடியாகிவிட்டார் கேஎஸ் ரவிக்குமார்.
இவரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் லாரன்ஸின் தம்பி எல்வின் இணைந்து நடிக்கின்றனர்.
ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (ஜூன் 25) துவங்கியது.
இப்பட பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
கூடுதல் தகவல் :
சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா மற்றும் ருத்ரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லாரன்ஸ்.
இதில் ருத்ரன் படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீசாக உள்ளது.
டிரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படம் அவர்களின் 13வது படமாகும்.
Lawrence & Elvin to join KS Ravikumar’s next film

டிவி கலைஞர்கள் & டப்பிங் கலைஞர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் கலைஞர்கள் தங்களது உடல் நலன் குறித்து அவ்வளவாக கவலைப்படுவதில்லை.
இதை கருத்தில் கொண்டு, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மூத்த நடிகரும் டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றுக்கு இன்று ஏற்பாடு செய்தார்.
இன்று காலை 10 மணிக்கு சங்க வளாகத்தில் தொடங்கிய இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.
பிரபல உடல்நல நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஆதிஜோதிபாபு மூலமாக பஞ்சபூத மருத்துவமுறையினால் மருந்தில்லா மருத்துவமுறையை அறிமுகப்படுத்தி இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமுகாம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த மருத்துவமுறையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில், தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினரோடு பங்குகொண்டு பயன் பெற்று வருகின்றனர்.
சிறப்பு முகாமில் கலந்துகொண்ட உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த முன்னெடுப்புக்காக நடிகர் ராதாரவியையும், எளிய முறையில் சிறந்த சிகிச்சை அளித்ததற்காக டாக்டர் ஆதிஜோதிபாபுவையும் பாராட்டியதோடு அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தனர்.
Specialized Medical Camp for TV Artists & Dubbing Artists

150 பாடகர்கள் அறிமுகம்.. பலரது வாழ்வில் ‘அணையா விளக்காக’ மாறிய இமானின் இசை பயணம்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசை தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கலை வடிவம். நமக்கு நெருக்கமான மொழியும், இசையும் சேரும் போது எத்தகைய நெஞ்சையும் கரைய செய்து விடும்.
தமிழர்களின் நெஞ்சங்களை தான் இசை மூலம் நிறைய செய்தவர் டி.இமான். தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குறிய இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். பெரிய படமோ, சின்ன படமோ இவரது பாடல்களே அந்த படத்திற்கு தனி அந்தஸ்தை கொடுத்து விடும்.
இருபது ஆண்டுகள் என்ற அசாதாரணமான இமானின் இசைப் பயணத்தில் 100 மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து 150 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.
2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார் டி.இமான். இந்த இருபது ஆண்டுகளில் எந்த ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான இசை பயணம் இவருடையது. மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை தனது தனித்த அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவரது இசையின் வடிவம் “மாஸ்+கிளாஸ்” என சமமாக பயணித்து. அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்து கொண்டு இருக்கிறது.
‘பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக தனது இசை பணியை துவங்கி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்து. பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி, சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்தது. என இமானின் இசை மீதான காதல் மெட்டுக்குள் அடங்காதது.
இந்த இருபது வருட இசை பயணத்தில் தனக்கு என தனி இடத்தை உருவாக்கியது மட்டும் அல்ல இமானின் சாதனை. நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடி சென்று அந்த கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களை எனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து.
அவரை கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே படத்தில் பட வைத்தார் இமான். வைக்கம் விஜயலட்சுமியை என்னமோ எதோ படத்தில் புதிய உலகை ஆள போகிறேன் என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார்.
வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமிய பாடல்கள் பாடி கொண்டு இருந்த நாட்டுபுற பாடகரான மகிழினி தமிழ்மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர்.
வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதன் அறிமுகபடுத்தினார். நாட்டுபுற பாடகரான செந்தில் கணேஷ் சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார்.
இப்படி திறமையானவர்களை அடையாள படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன் இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுக பாரதி வரிகளில் உருவாகி உள்ள ‘அணையா விளக்கு..’ பாடலை தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் பப்ளிக் திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே பப்ளிக் படத்தின் போஸ்டர்கள் sneak peakகள் இணையத்தில் வைரல் ஆகின. தற்போது இந்த படத்தின் இசை குறித்தும் அதில் இடம் பெற்று உள்ள பாடல் மற்றும் சிங்கர் குறித்தும் இமான் ட்விட் செய்து இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
Roped in Rising Singer Swasthika Swaminathan for a soulful song in my upcoming film #Public Can’t wait for you to listen! Lyric by Yugabharathi!
A #DImmanMusical
Praise God! pic.twitter.com/sdt3q8piiQ— D.IMMAN (@immancomposer) June 24, 2022
Introduction of 150 singers .. Imaan’s musical journey that has become the ‘light’ of many people

தமிழக மக்களை மயக்கிய ‘மாயோன்’.; தெலுங்கில் 350 தியேட்டர்களில் வெளியிட முடிவு
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் ‘மாயோன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர்.
தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன்.
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது.
மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maayon team decided to release in 350 theaters in Telugu