தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, அமரகாவியம், காதல், மைனா, 96, உள்ளிட்ட காதல் பட வரிசை காவியம் படைக்க போகும் படம் ‘மாயபிம்பம்’. (நாங்களும் பாத்துட்டோம்ல..)
கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்’ சார்பில் தயாரித்திருக்கிறார்.
ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
புகைப்படம் – எட்வின் சகாய், இசை – நந்தா, படத்தொகுப்பு – வினோத் சிவகுமார், கலை – மார்ட்டின் தீட்ஸ், நடனம் – ஸ்ரீக்ரிஷ், ஒலி – ஷான்சவன், டிசைன் – சந்துரு.
இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி 2 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்னும் ரிலீசாகவில்லை.
இதன் இயக்குநர் சுரேந்தரும் புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.
எனவே தங்கள் மகனின் கஷ்டத்தை உணர்ந்த பெற்றோர் தங்களின் வாழ்நாள் சேமிப்பையே கொடுத்துள்ளனர்.
படத்தை பார்த்த பெற்றோர், குடும்பத்தார் நண்பர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
பிரபல டைரக்டர்கள் பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ், வெற்றிமாறன் போன்றவர்கள் இந்த படத்தை பார்த்து பிரமித்து “காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்,” என வாழ்த்தியுள்ளனர்.
தற்போது இப்பட உரிமையை மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. உலகளவில் இவர்கள் படத்தை வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஜீன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஜய்யின் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாயபிம்பம் படத்தின் நியூ லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Maayabimbum New look will be released by Master Director Lokesh