மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசிய நபர்..; வைராகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Late Sushant Singh Rajput Spirit video goes viralதோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்டில் தலை விரித்தாதும சினிமா வாரிசு அரசியல் தான் அவரது தற்கொலைக்குக் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பான வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டீவ் ஹப் என்ற நபர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியதாக இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவை யு-டியுபில் வெளியிட்டுள்ளார்.

அதில் இடம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த குரல் சுஷாந்த் சிங் குரல் போலவே உள்ளதாக அவரது ரசிகர்கள் வீடியோவின் கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளனர்.

அப்படியிருக்கிறதா? என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து சொல்லுங்கள்…

Late Sushant Singh Rajput Spirit video goes viral

தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.; பெரியார் சிலை விவகாரம் பற்றி கமல்

தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.; பெரியார் சிலை விவகாரம் பற்றி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal tweet about Orange paint on Periyar statue controversy கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ராமசாமி (பெரியார்) சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ஈ.வெ.ரா சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த காவி சாயம் பூசிய சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Kamal tweet about Orange paint on Periyar statue controversy

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்க 25 தேசிய விருது கலைஞர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathirajaஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஜீலை 17ஆம் தேதி தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில்… “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர்.

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்”

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

National award winners appeal to Centre to confer Dadasaheb Phalke Award on Bharathiraja

பிளான் பண்ணிப் பண்ணனும்… ரம்யா நம்பீசனின் ‘SUNSET DIARY’

பிளான் பண்ணிப் பண்ணனும்… ரம்யா நம்பீசனின் ‘SUNSET DIARY’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.

தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார்.

எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை நமக்கு வழங்கும் மனிதர்கள்பால் நமது கவனத்தை திருப்புவது பற்றிய நிகழ்ச்சி இது.

இந்த சிறிய தொடர் நிகழ்ச்சியை எழுதியிருக்கும் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…

“நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. சுற்றுச் சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை,

இந்த சிறிய தொடர் பதிவு செய்கிறது. என்னால் எழுதப்பட்டு ரம்யா நம்பீசனால் வழங்கப்படும் இந்த எளிய நிகழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்”

மேலும் நிகழ்ச்சி குறித்து விவரித்து வழங்கும் ரம்யா நம்பீசன்
தெரிவித்ததாவது…

“நம்மைச் சுற்றியுள்ள அற்புதமான மனிதர்களால் உருவாக்கப்பட்ட அழகான தருணங்களை, நாம் பல்வேறு அன்றாடப் பணிகளுக்கிடையே கவனிக்காமல் இருந்து வருகிறோம்.

இணைய உலகின் பக்கம் திரும்பி நமது பெரும்பாலான நேரத்தை அதில் செலவிடுகிறோம். இதை நாம் வருங்காலத்தில்தான் உணர்வோம். இணையங்களின் நம்பகத் தன்மையையும் முன்பு இருந்ததைப்போல் இல்லை.

இந்த அடிப்படையில் உருவாக்கப்படுவதுதான் இந்த சிறிய தொடர். இந்தத் தொடரைப் பார்ப்பவர்கள் இதில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

என்னுடைய யூ ட்யூப் சேனலில் அழகியலுடன் கூடிய இதுபோன்ற சுவையான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தருவேன்” என்றார் ரம்யா நம்பீசன்.

ரியோ ராஜ் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பிளான் பண்ணிப் பண்ணனும்’ படத்தில் தற்போது ரம்யா நம்பீசனும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு எபிசோடுக்கு ரூ 50 லட்சம்.; வெப்சீரிஸ் தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்கிய வடிவேலு.!

ஒரு எபிசோடுக்கு ரூ 50 லட்சம்.; வெப்சீரிஸ் தயாரிப்பாளரின் வயித்தெரிச்சலை வாங்கிய வடிவேலு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vadivelu salary updates for Web seriesவடிவேலு இல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடி கடல் வற்றி விட்டது என்றே சொல்லலாம்.

அவரை தொடர்ந்து பலர் வந்தாலும் வடிவேலு இடம் இன்னும் காலியாகவே உள்ளது.

மெர்சல், கத்தி சண்டை படங்களில் நடித்திருந்தாலும் பழைய காமெடி இன்னும் வடிவேலுவிடம் வரவில்லை.

இந்நிலையில் காமெடியான வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் வடிவேலுவை அணுகியதாம்.

ஒரு எபிசோடுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் வடிவேலு. மொத்தம் 8 எபிசோட். அதாவது 4 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.

சான்ஸ் இல்லாத வடிவேலுக்கு வாய்ப்பு கொடுக்க போனால் இப்படியா கேட்பார்.? என கிறுகிறுத்து போய்விட்டாராம் புரொடியூசர்.

Actor Vadivelu salary updates for Web series

ஹீரோயின் சான்ஸுக்காக காத்திருந்த அஜித்தின் ரீல் மகள்.; கை கொடுத்தது கேரளா.!

ஹீரோயின் சான்ஸுக்காக காத்திருந்த அஜித்தின் ரீல் மகள்.; கை கொடுத்தது கேரளா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anikha Surendran recent photos goes viral She got heroine chanceமூன்று வயதிலேயே தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் பேபி அனிகா.

சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

சில வருடங்களில் தமிழில் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்தார்.

தற்போது இவருக்கு 15 வயதாகிறது.

எனவே ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்டார் அனிகா.

தமிழில் வாய்ப்பு தேடி கிடைக்காத பட்சத்தில் மலையாள படம் ஒன்றில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்தப் படம் பள்ளிக் காதலை மையமாக கொண்ட கதையாம்.

Anikha Surendran recent photos goes viral She got heroine chance

More Articles
Follows