தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தன் திறமைகளை நிரூபித்து தற்போது சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
இவரது காமெடிக்கு சிரிக்காதவர்களே இல்லை என்னும் அளவுக்கு காமெடியனாகவும் உயர்ந்து வருகிறார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 17 ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பகுதி மக்களுக்கு நடமாடும் ஐ சி யு ஆம்புலன்ஸ் ஒன்றை தனது சொந்தப் பணத்தின் மூலம் வழங்கியுள்ளார்.
இது குறித்து பாலா பேசியதாவது..
“எனது தகுதிக்கு மீறிய செயலாக இந்த ஆம்புலன்ஸ் வழங்கியதை கருதுகிறேன். நிறைய பிரபலங்கள் நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்களும் செய்து வருகிறார்கள். அதை ஒப்பிடும்போது இது பெரிய விஷயம் இல்லை.
ஆனால் என்னுடைய சக்திக்கு மீறி என்னுடைய தகுதிக்கு மீறி நான் இந்த ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளேன்.
இந்த ஈரோடு மாவட்ட மலை பகுதிகளில் கிட்டத்தட்ட 12 கிராமங்களில் சுமார் 8,000 மக்கள் வசிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இரவில் புழு பூச்சி பாம்பு மற்றும் மிருகங்களால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் செல்ல வேண்டி உள்ளதாகவும் தங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை எனவும் தெரிவித்திருந்தனர்.
எனவே அவர்களின் கருத்தை மனதில் கொண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் பெற்ற வருமானத்தை கொண்டு இந்த ஆம்புலன்ஸை வழங்கியுள்ளேன்.
இந்த 2023 வருடத்திற்குள் இது போன்ற 10 ஆம்புலன்ஸ் வழங்க நினைக்கிறேன். அதற்கு மக்களுடைய ஆதரவு வேண்டும். மக்கள் ஆதரவினால் தான் நான் இன்று நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறேன்.
எனவே மக்களுக்காக அவர்கள் கொடுத்ததை நான் திருப்பி கொடுத்து வருகிறேன். மேலும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறேன்.
நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். எனது தாயார் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.
எட்டு படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என கலாய்த்து விட்டு 8 படங்களை டவுன்லோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
தற்போது சின்ன திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.”
என்றார் KPY பாலா.
KPY Bala donated ICU Mobile Ambulance to Erode Peoples