தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்த படத்தை ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார்.
இதில் கவின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் ஜோடியாகிறார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
‘முதல் நீ முடிவும் நீ’ படபுகழ் ஹரிஷ், ‘வாழ்’ படபுகழ் பிரதீப் ஆண்டனி ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
இந்த படம் 2கே கிட்ஸின் காதலை மையப்படுத்தி உருவாகி உள்ளதாம்.
சென்னை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.
Kavin and Abarnadoss starring new movie updates