இணையங்களில் உருவாகும் பொய் காதலில் சிக்கும் பெண்கள்

இணையங்களில் உருவாகும் பொய் காதலில் சிக்கும் பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuthukkalai Pathivu Sei movie deals with Internet LoveSSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது.

சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம்.

இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.

தயாரிப்பு – RPM சினிமாஸ்
கதை, திரைக்கதை, வசனம் – ராஜசேகர்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் – சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஒளிப்பதிவாளர்: மனோகரன்

இவர்களின் கூட்டணியில் உருவான “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.

Karuthukkalai Pathivu Sei movie deals with Internet Love

ராம்கோபால் வர்மா & SJ சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்’

ராம்கோபால் வர்மா & SJ சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Gopal Varma and SJ Surya launched Cinderella teaserஉலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் மல்டிமீடியா படித்த பெங்களூர்க்காரர். சில ஆண்டுகள் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் பேசும் போது,

“இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது.

ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரை ஒரு கவர்ச்சிப் பதுமையாகப் பார்த்த ரசிகர்களுக்கு இப்படப் பாத்திரம் எதிர்பாராத தோற்ற மாற்றம் தரும். நடிப்பிலும் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும் படமாக ‘சிண்ட்ரெல்லா’ இருக்கும் .

சாக்ஷி அகர்வால் ஒரு எதிர்பாராத எதிர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.

இவர்கள் தவிர ரோபோ சங்கர், ‘கல்லூரி’ வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘காஞ்சனா 2’ படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் ‘லட்சுமி என்டிஆர் ‘ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .இது ஒரு பேய்ப் படம் தான் .ஆனால் வழக்கமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிற சூத்திரங்களில் இருந்து விலகி புதுப் பாணியில் புதுவித பாதையில் பயணிக்கிற கதையில் உருவாகியிருக்கிற படமாக ‘சிண்ட்ரெல்லா ‘இருக்கும். சிண்ட்ரெல்லா என்கிற பெயரில் ஆங்கிலத்தில் நிறைய படங்கள் வந்துள்ளன .

சிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது இந்த ‘சிண்ட்ரெல்லா’வை ரசித்து அனைவரும் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் “என்கிறார் இயக்குநர் வினோ வெங்கடேஷ்.

படம் பார்க்கும் ரசிகர்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை கதையையும் கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று கூறலாம்.

இதன் டீசரை இந்திய அளவில் புகழ்பெற்றவரும் பரபரப்புக்குப் பெயர் பெற்றவருமான இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் இன்று மாலை 7.30 க்கு வெளியிட்டார்கள்.

இருவருமே இளமையும் திறமையும் கொண்ட இந்தப் படக் குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்கள். மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது படக் குழு .

டீசர் வெளியான சில நொடிகளிலேயே ஹிட்களை அள்ளிக் கொண்டிருக்கிறது.

Ram Gopal Varma and SJ Surya launched Cinderella teaser

இதோ டீசர் லிங்க்

ஃபேஷன் ஷோ மூலம் விவசாயிகளுக்கு நீர் கொடுக்கும் நடிகர் பிரபாகரன்

ஃபேஷன் ஷோ மூலம் விவசாயிகளுக்கு நீர் கொடுக்கும் நடிகர் பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhakaran plans to donate fund for farmers from Fashion Showஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது.

ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பன்முக திறமையாளர், நடிகர் பிரபாகரன் PC பேசியது…

ஃபேஷன் உலகை பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகையை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது என்றார்.

ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் கருன் ராமன் கூறியதாவது…

இது எங்களுக்கு ஒரு குடும்ப விழா போன்றது. இந்நேரத்தில் எங்களுடன் இணைந்த Naturals குமரவேலன் அவர்களுக்கு மிகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ஃபேஷன் உலகின் மிகப்பெரும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இவ்விழா வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்கள் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

தீபிகா பிள்ளை, பந்தனா நெருலா ஆகிய இருவரும் முதல் நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் ஃபேஷன் உலகின் மிக முக்கிய விழாவாக இது இருக்கும்.

குமரவேலன் கூறியதாவது…

இவ்விழாவை சென்னையில் ஒருங்கினைக்கும் பிரபாகரனுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். கருன் ராமனுடன் மிக நீண்ட காலமாக பழகி வருகிறேன் இந்தத்துறையில் வெளியில் இருந்து மிக எளிதாக குறை கூறி விடலாம் ஆனால் இதில் உள்ள சிக்கல்களும் உழைப்பும் மிக மிக கடினமானது. அதை நேரில் கண்ட பிறகு நானும் இதில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் விவசாயிகளுக்கு உதவுவது பெருமையான ஒன்று. தீபிகா மற்றும் பந்தனா போன்றவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. ஃபேஷன் உலகில் சென்னை தற்போது வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இவ்விழா அதில் முன்மாதிரியாக இருக்கும்.

ஃபேஷன் டிசைனர் பந்தனா நெருலா கூறியது…

தற்போது தான் இவ்விழாவின் நோக்கம் பற்றி அறிந்தேன் இப்படியான விழாவில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறேன். சென்னை ஃபேஷன் உலகில் பின்னே இருப்பதாக கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட விழாக்கள் நடப்பது அந்தப் பெயரை மாற்றுவதாக இருக்கும்.

டிசைனர் தீபிகா பிள்ளை கூறியதாவது…

சிறு இடைவேளைக்கு பிறகு ஃபேஷன் உலகிற்கு வருகிறேன். இந்த விழா என் திறமைக்கு தீனி தருமென நம்புகிறேன். பல புதிய டிசைன்கள் இவ்விழாவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்விழா திறமையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்

PRAAWOLION EVENTZ Fashion Show Press Meet

Prabhakaran plans to donate fund for farmers from Fashion Show

PRAAWOLION EVENTZ Fashion Show Press Meet

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் ஏழை பணக்காரன் நட்பை சொல்லும் தங்கர் பச்சான்

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் ஏழை பணக்காரன் நட்பை சொல்லும் தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thangar Bachan talks about his son Vijith debut in Takku Mukku Tikku Thalamமிக நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் மகனை ஹீரோவாக்கி காமெடி படம் இயக்கியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான் அவருடன் உரையாடியதிலிருந்து.

இப்படி ஒரு படத்தில பையன ஹிரோவா அறிமுகப்படுத்தனும்னு எந்த ஒரு திட்டமும் கிடையாது. இது தானா அமைஞ்சது. பையனோட அனுபவத்த அவர் சொல்வாரு. என்னைப் பொறுத்தவரைக்கும் இத நான் என்னோட முதல் படம் மாதிரி தான் செஞ்சிருக்கேன்.

இது வரை எடுத்த படங்கள்ல தங்கர்பச்சான் படத்தில என்னென்ன இருக்குமோ அது எதுவுமே இதுல இருக்காது. இது என்னோட படம் மாதிரி இருக்காது. சொல்லக்கூச்சமா தான் இருக்கு 13 நாள் வெறும் சண்டைக்காட்சிய மட்டும் எடுத்துருக்கேன்.

போலீஸே என் படங்கள்ல வந்ததில்ல ஆனா இந்தப்படத்துல போலீஸ், கொலை,போதைப்பொருள் கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து எல்லாம் இருக்கு ஆனா அதில ஒரு தனித்துவம் இருக்கு. எடுக்கப்படும் முறைனு ஒன்ணு இருக்கு அதில தங்கர்பாச்சான் முத்திரை இருக்கும்.

உங்க பாணில இருந்து மாறி எடுக்க என்ன காரணம் ?

ரொம்ப நாளா எல்லோரும் சொல்லிட்டு இருப்பது தான். சார் கொஞ்சம் மாத்தி எடுங்கனு சொல்லுவாங்க. ஆனா இப்ப உங்கள மாதிரி படம் எடுக்கத்தான் ஆள் இல்ல சார், நீங்க ஏன் காமெடி படம் எடுக்குறீங்கனு கேக்கறாங்க. சமீப காலமா ரிலீஸாகுற எல்லாப்படங்களையும் பாக்க முடியாட்டாலும் முக்கியமான படங்கள பார்த்துட்டு தான் இருக்கேன்.

மக்கள் எப்படி படங்கள அணுகுறாங்க, ஊடகங்கள் எப்படி பாக்குறாங்கனு பார்துட்டு தான் இருக்கேன். இதுக்கு முன்னாடி காலக்கட்டட்த்துல பார்த்தீங்கன்னா வாழ்வியல் தொடர்பான, அதுக்கான சம்பவங்கள், அதில் நடந்த ஒரு பாதி சம்பவங்களாவது கதைகளாக மாற்றப்பட்டது. இப்ப இருக்க காலக்கட்டத்துல அதெல்லாம் இல்லவே இல்ல, முற்றிலும் வேற மாதிரி இருக்கு.

இப்ப இருக்க சினிமா வேற மாதிரி இருக்கு, மக்களுடைய வாழ்க்கை முறை வேற மாதிரி இருக்கு. இப்ப இந்த படம் நான் அப்படிதான் எடுத்திருக்கேன். நம்ப மட்டும் ஏன் நடந்ததையே எடுக்கனும்னு ஆரம்பிச்சதுதான் இந்த படம்.

ஒரே ஒரு நல்லவர் இருந்தாரு. இப்ப அவரும் இப்படி மாறிட்டாரே?

அதுக்காகவே “டக்கு முக்கு டிக்கு தாளம்”னு பேர் வச்சேன். எனக்கென்ன வேற தலைப்பா வைக்க தெரியாது. இனி நம்பள வேற யாரும் கேள்வியே கேட்கக் கூடாதுன்னு தான் இந்த தலைப்பையே வச்சேன். இது வேற மாதிரி படம்ங்கறத மக்கள் கிட்ட பதிவு பண்றேன். மக்களை ஏமாத்திடக் கூடாதுன்னு இத முன்கூட்டியே தெரியப் படுத்திக்கறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர பத்தி சொல்லுங்க?

இந்தப் படத்த PSN entertainments PVT LTD நிறுவனம் தயாரிச்சிருக்காங்க. PSN அப்டீன்னா “பொன்னியின் செல்வன்”. இவங்க வந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக கிராபிக்ஸ் தொழில் நுட்பத்த கற்றுக் கொடுக்கும் “அரேனா” என்ற கல்லூரிய நடத்திக்கிட்டு வர்றாங்க. அனிமேஷன், CG பண்ற பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் அந்த கல்லூரியில படிச்சிட்டு வந்தவங்கதான்.

நான்கு வருடங்களுக்கு முன்னாடியே பொன்னியின் செல்வன் என்ற 2D அனிமேஷன் படத்த எடுத்து தயாரா வச்சிருக்காங்க. PSN நிறுவனம் சார்பா ஜார்ஜ் டயஸ் “டக்கு முக்கு டிக்கு தாளம்” படத்தின் மூலமா தயாரிப்பாளரா காலடி எடுத்து வைக்கறாங்க. சரவண ராஜா என்ற நண்பருடன் இனைந்து இந்த படத்த தயாரிச்சிருக்காங்க.

இந்தப் படத்துல நடித்திருக்கும் நடிகர்கள்?

விஜித் பச்சான் இந்தப் படத்துல கதாநாயகனா நடிச்சிருக்கார். மிலனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர், முனீஸ் காந்த. மற்றும் இந்தப் படத்துல மூன்று வில்லன்கள் நடிச்சிருக்காங்க ஒருத்தர் ஸ்டன்ட் சில்வா, மற்றொருவர் மன்சூர் அலி கான். அடுத்து முக்கியமா சொல்லனும்னா யோகி ராமநாதன். ஸ்டன்ட் சில்வா இந்த படத்துல 13 நாட்கள் நடிச்சிருக்கார். ஸ்டன்ட் மாஸ்டரா மட்டுமில்லாம ஒரு முக்கிய கதாப்பாதிரத்துலயும் நடிச்சிருக்கார்.

அப்படியே தொழில் நுட்ப கலைஞர்களைப் பற்றியும் சொல்லிடுங்க?

இன்றைய தலைமுறையோடு ஒன்றியிருக்கிற இசையமைப்பாளர் தரன் குமார் இப்படத்துக்கு இசையமைச்சிருக்கார். படத்தொகுப்பு வந்து சாபு ஜோசப். என்னுடைய உதவியாளரா பணியாற்றிய பிரபு தயாளன், பிரபு ராஜ் மற்றும் சிவ பாஸ்கர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செஞ்சிருக்காங்க. அப்பறம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நானே இந்த படத்த இயக்கியிருக்கேன்.

விஜித் இந்தப் படத்துல என்ன ரோல் பண்ணிருக்கார்?

இந்தப் படத்தோட கதை பார்த்தீங்கன்னா முழுக்க முழுக்க சென்னைல நடக்கக் கூடிய கதை. ஒரு சில காட்சிகளை தவிர நான் அதிகமா சென்னைல படம் எடுத்தது இல்ல. முதல் முறையா முழு நகரத்து சினிமா எடுத்திருக்கேன்.

களவாடிய பொழுதுகள் சிட்டி படமா இருந்தாலும் சில காட்சிகள் கோயம்பத்தூர் போன்ற இடங்கள்ல எடுத்திருக்கேன்.

இந்தப் படத்தோட கதை பார்த்தீங்கன்னா, இது ஒரு ரெண்டு பேருடைய கதை. இதுல விஜீத் பார்த்தீங்கன்னா கீழ் நிலையில இருக்குற ஒரு குப்பத்து ஏழைப் பையன். எந்த எதிர்கால திட்டமும் இல்லாத அடுத்த வேலை சாப்பாட்டிற்கு உத்தரவாதம் இல்லாத ஒரு பையன். அவனுக்கும் ஏகப்பட்டக் கோடி சொத்து இருக்கிற பணக்காரன், இவங்க இரண்டு பேருக்கும் இடையில நடப்பதுதான் கதை. இதுல பணக்காரனா முனீஸ் காந்த் நடிச்சிருக்கார்.

நிறைய பணத்த வச்சிக்கிட்டு வாழ பிடிக்காத முனீஸ் காந்த், பணத்தை தேடிக்கிட்டிருக்க விஜித். இவங்க இரண்டு பேருக்கும் இந்த பணம் எதை கற்றுத்தருது. அதான் இந்த படத்தோட கதை.

இதுவே தங்கர் பச்சான் கதை மாதிரிதானே இருக்கு? இதுக்கும் தங்கர் பச்சான் கதைக்கும் எப்படி வேறு படுது?

வழக்கமாக என் படத்தில் வரும் ஒரு வசனம் கூட இந்த படத்தில் இருக்காது. இந்தக் காலத்திற்கு தேவையான எதார்த்த வசனங்கள் எழுதியிருக்கேன். மக்கள் பேசும் வார்த்தைகளைத்தான் வசனங்களாக எழுதியிருக்கேன். அதேதான் பாடலாவும் வந்திருக்கு. இப்ப இந்த பாட்ட நீங்க விமர்சனம் பண்ணா… மக்களை தான் விமர்சனம் பண்ணனும். நான் இதுக்காக எதுவும் மெனக்கெட்டு எழுதலை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்ப பொழுது போக்கு சித்திரம். 100 % family entertainment.

இந்த கதை உருவான விதம்?

இதுவரைக்கும் நான் இதப் பத்தி சொல்லலை. American cinematographer என்ற magazine ல ஒரு event ஒன்னு படிச்சேன். அதை பேஸ் பண்ணி இலக்கியங்கள்லாம் வந்திருக்கு. அதப் படிக்கும் போது என்னடா இப்படியெல்லாம் கூட நாட்டுல நடக்குமான்னு நினைச்சேன். சரீன்னு இத வச்சு கதை எழுதி படம் எடுத்தேன்.

அப்பறம் பார்த்தா உண்மையாவே அப்படி ஒன்னு நடந்துச்சு. அதுவும் இந்த படத்துல வரும். இந்த படம் முடிஞ்சதும் எல்லாரும் வாயை பிளந்து பார்ப்பாங்க!. அப்படியே நடந்திருக்கு, அதுவும் நம்ப ஊருல இந்தியாவுல நடந்திருக்கு. இது எல்லா பத்திரிக்கைளையும் வந்திருக்கு. எல்லாரும் ஆச்சரியமா இப்படியெல்லாம் நடக்குமா அப்படீங்கற ஒரு மாதிரியான விஷயம். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக இருக்குற ஒரு கதை.நான் பண்ண கதை உண்மையா நடந்திருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு துணிச்சல் அதிகமாகிடுச்சு. அதனால தைரியம்மா எடுத்து பண்ணிட்டேன்.

இது தமிழ் நாட்டுல நடந்ததா இல்ல வட இந்தியால நடந்ததா?

வட இந்தியால தான் நடந்தது அத இங்க நடக்கற மாதிரி கதை பண்ணியிருக்கேன்.

இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்?

கண்ணதாசன் தயாரிச்ச ரம்பையின் காதல் படத்துல ஒரு பாடலின் தலைப்பு “டக்கு முக்கு டிக்கு தாளம்”னு இருக்கு. அப்பறம் எங்க ஊருல “டக்கு முக்கு டிக்கு”காரன்னு ஒரு ஆளே இருக்காரு. “டக்கு முக்கு டிக்கு”ன்னா ஆள் மாறிக்கிட்டே இருப்பான்.

ஆங்கிலத்துல சொல்லனும்னா “characterless”னு சொல்லுவாங்க.
எடத்துக்கு தகுந்த மாதிரி ஆள் மாறிக்கிட்டே இருப்பான். “டக்கு முக்கு டிக்கு”னு ராகம் மாறுது இல்லையா, ஒரு முறை டக்குனு போடுற ராகம் அடுத்தமுறை முக்கு, அடுத்து டிக்குனு மாருது இல்லையா, அதுதான் “டக்கு முக்கு டிக்கு தாளம்” ஒவ்வொரு எடத்துக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு மாதிரி பொய் சொல்றதுதான் அதுக்க அர்த்தம்.

ஏன் காமெடி படம் ?

காமெடி பண்றது தான் ரொம்ப கஷ்டம். ஒரு ஹீரோவ கூட்டி வந்து டான்ஸ் ஆட வெச்சிடலாம், சண்ட போட வச்சிலடலாம். சீரியஸ காட்டி ஏத்துக்க வச்சிடலாம் ஆனா காமெடி பண்ண வைக்க முடியாது. காமெடி பண்ண சென்ஸ் வேணும். காமெடி சென்ஸ் இருக்கிற ஹீரோ தமிழ்ல ரொமப கம்மி. எனக்கு ரொம்ப பிடிச்சது காமெடி படங்கள் தான்.

பெரிய இயக்குநர்களே காமெடி படங்கள் எடுத்திருக்காங்க. ஶ்ரீதர் எவ்வளவு பெரிய இயக்குநர் அவர் காதலிக்க நேரமில்லை எடுத்தாரு. பாலச்சந்தர் தில்லு முல்லு எடுத்தார். பாலுமகேந்திரா காமெடி படம் எடுத்திருக்காரு. மகேந்திரன் எடுத்திருக்கார். எல்லாப் படைப்பாளிகளும் ஒரு கட்டத்தில மாத்தி பண்ணனும். நம்ம தொழில் நேர்த்தி நம்ம கையில் வட்டுகிட்டு நாம் பண்ணலாம். இதுல பையனுக்காக அவர மனசுல வச்சு திரைக்கதை பண்ணியிருக்கேன்

பையன ஹிரோவா அறிமுகப்படுத்துற திட்டம் சின்ன வயசுல இருந்தே இருந்ததா ?

இதற்கு அவரே பதில் சொல்வாரு என கேள்வியை தன் மகன் விஜித் பக்கம் திருப்பி விட அவர் அதற்கு…

இல்ல எனக்கு ஹீரோவாகுற திட்டமெல்லாம் கிடையாது. சினிமால ஆர்வம் இருந்தது. அப்பா கேமராங்குறதால கேமரா மேனா ஆகுறதா தான் இருந்தேன். விஸ்காம் முடிச்சப்புறம் நிறைய மனசு மாறிகிட்டே இருந்தது. டைரக்டர் ஆகலாம் நடிக்கலாம் அப்படின்னு.

அப்புறம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கிட்ட நடிப்பு கத்துகிட்டேன் மூணு மாசத்துல நடிப்பு கத்துக்க முடியாதுனு அப்பதான் தெரிஞ்சது. அதற்கு சீரியஸா உழைக்க ஆரம்பிச்சேன் 3 வருஷம் கத்துகிட்டேன். அப்புறம் அப்பா நிறைய உதவி பண்ணார். நிறைய கதைகள் கேட்டேன் எதுவும் ஒர்க் அவுட் ஆகல. அப்புறம் அப்பா நம்ம பண்ணலாம்னு சொன்னது தான் இந்தப்படம்.

காமெடி சீரியஸ் பிஸினஸ்னு சொல்லுவாங்க ஏன் காமெடி தேர்ந்தெடுத்தீங்க ?

அப்பா எனக்கு முதல்ல பண்ணினது சீரியஸ் படம் தான். திடீர்னு இல்ல லைட் ஹார்ட்டட பண்ணலாம் உனக்கும் நல்லாருக்கும் எனக்கும் புதுசா இருக்கும்னு சொன்னார். அப்புறம் பொதுவா அப்பாங்களுக்கு தெரியும்ல நமக்கு எது சரியா வரும்னு, அவங்களுக்குதான் தெரியும். அவர் எப்பவும் என்ன குறை சொல்லிகிட்டே தான் இருப்பாரு ஆனா இப்ப படம் போட்டு பார்க்கும் போது நல்லாருக்கு. அவர் சரியாதான் சொல்லியிருக்கார்

அப்பாகிட்ட நடிப்பது கஷ்டம் உங்களுக்கு எப்படி இருந்தது ?

அப்பாகூட எனக்கு நெருக்கமான உறவு இருந்ததே கிடையாது. அவர் எப்பவும் ஷீட்டிங்லேயே தான் இருப்பார். அவர் கூட இந்தப்படத்தில தான் அதிக நேரம் செலவு பண்ணிருக்கேன். இந்தப் படத்தோட கதை கேக்கத்தான் அவர் கூட முதல் முறையா ரொம்ப நேரம் சேர்ந்து உட்கார்ந்தேன். இப்ப தான் அப்பாகூட நெருக்கமாயிருக்கேன்.

அப்பா தமிழ் காதலர் ஏன் விஜித்னு பேர் வச்சாங்க ?

அம்மா வயித்துல இருக்கும்போது அப்பா கனவுல எனக்கு பையன் பொறக்குறான் அப்படின்னு சொன்னார் அத வச்சு என் அம்மா வச்ச பேரு தான் விஜித். தாத்தா பேரு பச்சான் அதனால விஜித் பச்சான். நான் பேர் மாத்த முயற்சி பண்ணேன். வெற்றினு மாத்தி பார்த்தேன் கடைசில இந்தப்பேரே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.

இடையில் மறித்த தங்கர் பச்சான் …

எனக்கு இந்த மாறி பேர் இருக்கறதே தெரியாது. ஆனா பதிவு பண்ணி வச்சிருக்காங்க. நான் நிறைய தடவ மாற்ற முயற்சி பண்ணேன். நான் ஒரு பேர் சொன்னேன் திருமா பையன் வாழ்க்கைய கெடுத்துறாதீங்கனு சொல்லிட்டாரு. அதோட விட்டுட்டேன்.

ஹீரோயின் பத்தி சொல்லுங்க ?

விஜித் பச்சான் ..

ஹிரோயின் பெங்களூர் அவங்க நிறைய படங்கள் பண்ணிருக்காங்க. அவங்க நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. வேலை செஞ்சுகிட்டு இருக்குற பொண்ணா வர்றாங்க. இந்தப்படத்தில எல்லாரும் தெரிந்த முகங்கள் தான் அவஙகளோட நடிச்சது நிறைய கத்துக்க முடிஞ்சது.

முனீஸ்காந்த் டைமிங் சூப்பரா இருக்கும் அவரோட நடிச்சது எப்படி இருந்தது ?

அவர் இந்தப்படத்தில மெயின் ரோல். அவர பார்த்து தான் நிறைய கத்துக்கிட்டேன். நிறைய சொல்லிக்கொடுத்தாரு. நான் தியேட்டர்ல இருந்து வந்ததால கேமரா பார்க்க மாட்டேன் நான் பாட்டுக்கு பண்ணிட்டு இருப்பேன் அவர் தான் இப்படிலாம் பண்ணக்கூடாது. எப்படி நிகக்னும், கேமரா முன்னாடி எப்படி நடிக்கனும்னு சொன்னார்.

பாடல்கள் வெளிநாடல எடுத்தீங்களா ?

இல்ல இங்கயேதான் ஆனா ஒவ்வொரு ஷாங்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உங்க எல்லாருக்கும் பிடிக்கும்.

ஹீரொயின் பற்றி இயக்குநரா உங்க பார்வை எப்படி பண்ணிருக்காங்க ?

மிலனா நாகராஜ் அருமையான பொண்ணு. இப்படி பண்ணுங்கனு நான் சொல்லாத ஒரு நடிகை.

ஒரு ஷாட்டுக்கு கூட நான் சொல்லல அருமையா நடிச்சு கொடுத்துட்டு போயிட்டாங்க. வெளி மாநிலம்னு சொல்றோம் ஆனா ஷாயாஜி ஷிண்டே பாரதியாரா நடிக்க வந்தப்ப எங்கூட ரூம்ல தரையில படுத்திருந்தார். ஷூட்டிங் எவ்வளவு தூரம்னாலும் செருப்பு போடாம நடந்தே போவார். கேரக்டரா வாழ்ந்தார். இங்க இருக்கிற கதாநாயகர்களுக்கு கேரவன் வேணும் அப்புறம் எப்படி பாரதியார நடிக்க முடியும்.

நிறைய சமரசங்கள் பண்ணி இந்தப்படம் பண்ணிருக்கீங்க ஏன் ?

அப்படி இல்ல தாக்கத்தை உருவாக்குற படங்கள் பார்க்க யாரும் விரும்பல. அத விட்டு ஒதுங்கி இருக்கேன். இன்னக்கி கணவன் மனைவியே பேசிக்கிறதில்ல அண்ணன் தம்பி உறவே இல்ல. சினிமா மட்டும் என்ன செய்துடும். இயந்திரத்தோடதான் பேசிகிட்டு இருக்காங்க.

தியேட்டர் போனா திரையில தெரியிற வெளிச்சத்த விட மொபைல் வெளிச்சம் அதிகமா இருக்கு. சீரியஸ் படங்கள் பார்க்க ஆள் இல்லை. நாம் சொல்றத மதிக்காத போக்கு இருக்கு. அதான் இப்படியும் படம் பண்ணுவோமேனு தான். உலகின் மிகச்சிறந்த ஃபிரான்ஸ் இயக்குநர் ஃபிரான்ஸிஸ் ஃத்ரூபா அவரே காமெடி படங்கள் நிறைய பண்ணிருக்கார். நாம ஏன் பண்ணக்கூடாது. மீண்டும் அழுத்தமான படங்கள் பண்ணுவோம். அத முழுசா விட மாட்டோம்.

அழகி மாதிரி படங்கள் இனி வராதா ?

படம் வரும் ஆனா பாக்க மக்கள் இல்ல. இப்ப காதல்னா என்னன்னே தெரியாத தலைமுறை உருவாகிடுச்சு. நேரா காமத்துக்கு போயிட்டாங்க காதலே கிடையாது. காதல் உணர்வே இல்லாம இருக்காங்க. நான்கிறது மட்டும் தான் இங்க இப்ப இருக்கு.

அழகி 2 ரெடியா இருக்குறதா ஒரு செய்தி வந்ததே ?

உண்மைதான் கல்வெட்டு சிறுகதைய படமா எடுக்கும்போது அழகி 2 தான் முதல்ல எடுக்க வேண்டியது. அழகி கதை 1983 ல எழுதினது. இளையராஜா இத ஒரு தொடரா எடுக்க சொன்னார்.

முன்கதையா தான் அழகி எடுத்தோம். அழகி 2 ரெடியா இருக்கு அந்தப்படத்தில பார்த்திபன் பையனா வர்றவருக்கு 27 வயசுல கதை ஆரம்பிக்கும். இப்பவும் அழகி 2 எடுக்க தயாரிப்பாளர் தயாரா இருக்கார். நந்திதா கிட்ட இப்பவும் பேசிட்டு இருக்கேன். எல்லோரும் அவஙக வேலையை ஒதுக்கி வச்சுட்டு வரணும். ஆனா இப்ப இருக்குற தலைமுறை அழகி 2 புரிஞ்சுப்பாங்களாங்கிறது தான் பிரச்சனை. உறவுகளே இப்ப இல்லையே!

இந்தப்படத்தோட பாடல்கள் எப்படி வந்திருக்கு ?

என் படங்கள்ல நடனமே இருக்காது. ஆனா இந்தப்படத்துல இருக்கு. தரண்னு ஒரு இசையமைப்பாளர் இருப்பதே எனக்கு தெரியாது. என் பசங்க பாட்டு கேட்கும்போது ஒரு பாடல் நல்லாருக்கே யாருனு கேட்டேன் அப்படி தான் அவர தெரிய வந்தது.
ஒரு பாடலுக்குள்ள ஒரு கட்டமைப்ப உருவாக்குற திறமை அவர்கிட்ட இருக்கு இந்தப்படத்தில பாடல்கள் எல்லாம் அருமையா இசையமைச்சிருக்கார். தினேஷ் மாஸ்டர் நடனம் அமைச்சிருக்கார். இந்தப்படத்தில் எல்லோருமே அவங்க சம்பளத்த குறைச்சு எனக்காக வேலை பார்த்திருக்காங்க. படமும் சூப்பரா வந்திருக்கு என்றார்.

டக்கு முக்கு டிக்கு தாளம் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்பு வரும்.

டக்கு முக்கு திக்கு தாளம் : தொழில்நுட்ப கலைஞர்கள்:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான்
இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சக்தி செல்வராஜ்,
நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் – பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

Director Thangar Bachan talks about his son Vijith debut in Takku Mukku Tikku Thalam

ஈழத்தமிழ் பின்னணியில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ’பயணங்கள் தொடர்கிறது’

ஈழத்தமிழ் பின்னணியில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் ’பயணங்கள் தொடர்கிறது’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection storyநேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;

டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.

தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.

இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை.

ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக் கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள் பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும்.

இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது மகளின் சந்தோஷத்திற்காக என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை இந்தப்படம் அழகாக சொல்லியிருக்கிறது என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.

படத்தில் அமர் ராமச்சந்திரன் மற்றும் அவரது பத்து வயது மகள் நேஹா இருவருமே தந்தை மகளாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர் பாலாசிங் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

மேலும் திரைக்கு புதுமுகங்கள் என்றாலும் நாடக மற்றும் சின்னத்திரை அனுபவம் கொண்ட நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.

கேரளாவில் வசிப்பவர்தான் என்றாலும் அபிலாஷ் வளர்ந்தது படித்தது எல்லாம் செங்கோட்டையில் தான்..

2008 முதல் சென்னையில் இருந்த காலகட்டத்தில் இவர் சினிமாவிற்கு முயற்சி செய்துகொண்டே அனிமேஷன் தொழில்நுட்ப பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

அந்த சமயத்தில் தன்னிடம் படித்த இலங்கை மாணவர்கள் பலரும் சொன்ன அவர்களுடைய துயரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கேட்டு ரொம்பவே மனம் வருந்தினார் அபிலாஷ்.

அவர்களது துயர அனுபவங்களை உலகத்தினர் முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஒரு படம் இயக்க எண்ணினார்..

இவரது கதையில் நடிப்பதற்கு பசுபதி, பார்த்திபன் ஆகியோர் பச்சைக்கொடி காட்டினாலும், வியாபார காரணங்களால் இப்படத்தைத் தயாரிக்க இங்கே தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை.

அப்படியே கால ஓட்டத்தில் வேறு படங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான், இந்த படத்தின் கதையைக் கேட்டு பிரபல மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் இந்தப் படத்தில் நடிப்பதுடன் தானே தயாரிக்கவும் முன்வந்தார்..

மிக அழகாக, தரமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முழுவதும் நடத்தி முடித்துவிட்டார்கள்.. சில காரணங்களால் இலங்கையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கத்தால் கோவில்பட்டி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.

இரண்டு பாடல்களை தாமரை மற்றும் பழனிபாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். இது தவிர கவிஞர் பாரதிதாசனின் தலைவாரிப் பூச்சூடி என்கிற பாடலையும் இந்த படத்தில் சூழலுக்குத் தகுந்தவாறு இணைத்துள்ளனர்.

மலையாளத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அவுசப்பச்சன் இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்…

விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரசாந்த் பிரணவ் என்பவர் இப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தை இங்கே தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இயக்குநர் அபிலாஷும் தயாரிப்பாளர் ராமச்சந்திரனும்.

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection story

Payanangal Thodarkiradhu movie based on Father daughter affection story

 

கார்த்தி ரொம்ப தெளிவு; லோகேஷ் செம கில்லாடி.. ‘கைதி’ பற்றி நரேன்

கார்த்தி ரொம்ப தெளிவு; லோகேஷ் செம கில்லாடி.. ‘கைதி’ பற்றி நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam actor Narain talks about Karthi and Kaithi teamகார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவருடன் ஒரு சிறு நேர் காணல்…

தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ?

தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன்.

ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம் கைதி தான் பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இந்தப்படம் இருக்கும்னு தோணுது.

கார்த்தி இந்தப்படத்தில கைதி நீங்க யாரு ?

போலீஸ். ஸ்பெஷல் ஸ்டாஸ்க் ஃபோர்ஸ். முதல்ல கார்த்தி தான் எனக்கு போன் பண்ணினார். கார்த்தியும் நானும் நெருக்கமான நண்பர்கள். பர்ஸனலா எல்லாமே பேசிப்போம். இயக்குநர் இந்தக் கேரக்டருக்கு என் பேர சொன்னவுடனே கார்த்தி நான் போன் பண்றேன்ன்னு சொல்லி கூப்பிட்டிருக்கார்.

அஞ்சாதே படத்துக்கப்புறம் நிறைய போலீஸ் கேரக்டர் அது மாதிரியே இருக்கும்னு நான் பண்ணல. இதுல எப்படினு கேட்டேன். நல்ல கேரக்டர்னு சொன்னார். நீங்க பண்றீங்களானு கேட்டேன் ஆமானு சொன்னார். உடனே நான் ஒத்துக்கிட்டேன். கார்த்தி ஒரு படத்த அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் அவர் இருக்கார்.

அப்புறம் டைரக்டர் லோகேஷோட மாநாகரம் நான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சது இப்படி ஒரு டீம்ல வாய்ப்பு கிடைக்கும்போது ஏன் பண்ணக்கூடாது. ஆனா லோகேஷ் கதை சொன்ன பத்து நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு கண்டிப்பா சூப்பாரா இருக்கப்போகுதுனு. படம் நல்லா வந்திருக்கு.

அஞ்சாதே மாதிரி போலீஸ் இன்னும் தமிழ்ல வரல. இந்தப்படத்தில அது மாதிரி மேனரிசம் எதும் இருக்கா ?

மேனரிசம் பண்றதுக்கு படத்தில நேரமே இல்ல. படமே ஒரு ஆபரேஷன்ல தான் ஆரம்பிக்கும். பரபரனு ஓடிட்டே இருக்கும். ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிற நல்ல போலிஸ் எப்படி இருப்பான் அவ்வளவுதான்.

ரெண்டாவது அவனுக்கு அடி பட்டிருக்கும் நீங்க டிரெய்லர்ல பாத்திருப்பீங்க. அந்தக்கையோட அவன் என்ன பண்றான் அது தான். படம் பாருங்க .

காட்டுக்குள்ல நிறைய ஷீட் பண்ணிருக்கீங்க எப்படி இருந்தது ?

முழுக்க நைட் ஷீட் தான். சென்னை தாண்டி செஙகல்பட்டு பக்கத்தில, அப்புறம் கேரளா பார்டர் வரைக்கும் ஷீட் பண்ணினோம். குளிர் தான் ரொம்ப புதுசா இருந்தது அதுவும் தமிழ்நாட்ல.

12 மணி வரைக்கும் ஓகே ஆனா அதுக்கப்புறம் 2,3 மணிக்கு குளிர் பின்னும் நாங்க கூட பரவாயில்லை ஏன்னா எங்களுக்கு 1மணி நேரம், 2மணி நேரம் ரெஸ்ட் கிடைக்கும் ஆனா டெக்னிக்கல் டீமுக்கு அது எதுவும் இல்ல அவங்க தான் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க.

எல்லாப் படத்திலயும் ஒரு கேப் இருக்கும் நாம எஞ்சாய் பண்ணலாம் ஷுட்டே கலகலப்பா இருக்கும். இதுல அப்படி கிடையாது. படமே ராவா இருக்கும். பரபரனு இருப்பாங்க ஆனா சினிமாவ காதலிக்கிற ஒரு டீம்.

அவ்வளவு காதலோட எல்லோரும் வேலை பார்த்திருக்காங்க. நாங்களும் சந்தோஷமா வேலை பார்த்தோம் படம் எடுக்கும்போதே படம் சூப்பரா இருக்கும்னு நம்பிக்கை இருந்தது. அது சில படங்கள்ல மட்டும்தான் இருக்கும்

ஃபர்ஸ்ட் டைம் உங்களுக்கு ஹீரோயின் இல்லாம நடிக்கறீங்க ?

கார்த்திக்கே கிடையாது. எனக்குத் தெரிஞ்சு ஒரு பெரிய கமர்ஷியல் படத்தில ஹிரோயினே இல்லாத படம் இது தான். கார்த்திக்கு நிறைய தைரியம் வேணும் இப்படி படம் பண்ண.

கார்த்தியோட பயணம் எப்படி இருந்தது ?

கார்த்திகூட நிறைய பேசினேன் ஒன்னா இவ்வளவு நாள் கூட இருந்தது இந்தபடத்தால தான் நடந்தது. கார்த்தி ரொம்ப தெளிவா இருக்கார். என்ன பண்றோம்கிறது அவருக்கு தெரிஞ்சுருக்கு.

அவரோட படங்கள பார்த்தாலே தெரியும். இந்தப்படத்தில அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கு. அவருக்கு எனக்கும் நெருக்கமான நட்பு இருக்கறதால பண்ணும்போது ரொம்ப ஈஸியா இருந்தது. அதே மாதிரி அவருக்கு ஒரு எமோஷனல் பக்கம் இருக்கும் அதில சூப்பரா ஃபெர்ஃபார்ம் பண்ணிருக்காரு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

டைரக்டர் லோகேஷ் எப்படி ?

சினிமா மட்டுமே வாழ்க்கையா நேசிக்கிற ஒரு ஆள் அதத் தவிர எதுவும் பேச மாட்டார். எப்பவும் வேலைதான். நான் ஒரு கமல் ஃபேன் அவர் என்னவிட பெரிய ஃபேன். நிறைய ஹாலிவுட் படம் பார்ப்பார் அதப்பத்தி பேசுவோம்.

என்ன புதுசுன்னா எல்லாரும் ஹாலிவுட் படம் பார்ப்பாங்க. இங்க அது மாதிரி பண்ண ஆசைப்பட்டு வித்தியாசமா பண்ணுவாங்க. படம் நல்லாருக்கும். ஆனா படம் பெரிசா போகாது.

டீவியில பார்த்த நல்லாருக்கேனு சொல்லுவோம். இங்க படம் ஓட இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு அதில இன்னும் சில விஷயங்கள் சேர்க்கனும் அதில் கில்லாடி லோகேஷ். அவர் வித்தியாசமா பண்ற அதே நேரத்தில இங்க இருக்க ஆடியன்ஸ்க்கு என்ன பண்ணனும்னு தெளிவு இருக்கார். அவர் பெரிய இடத்துக்கு போவாரு.

ஷீட்டிங்கல நடந்த சுவாரஸ்யங்கள் ?

ஷீட்டிங்கே ரொம்ப கஷ்டம் முழுக்க நைட்தான் ஒரு நாள் தூங்கலைனாலும் நமக்கு சோர்வா இருக்கும் தொடர்ந்து 40, 50 நாள்னா பார்த்துகங்க. ஆனா படத்திலேயும் அந்த கேரக்டர் சோர்வா இருக்கும் அதனால அத மெயிண்டைன் பண்ணிட்டேன். கார்த்தி கூட இருந்ததால ரொம்ப ஈஸியா இருந்துச்சு.

படம் பார்த்திட்டீங்களா எப்படி வந்திருக்கு ?

படம் எடுக்கும் போதே தெரியும் சூப்பரா வந்திருக்கு. முக்கியமான காரணம் கேமராமேன் சத்யன். முகமூடில அவர் கூட வேலை பார்த்திருக்க்கேன். இந்தப்படத்தில விஷிவலா மிரட்டிருக்கார். லோகேஷ் கார்த்தி எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி ஒவ்வொரு ஷாட்டையும் புதுசா முயற்சி பண்ணி எடுத்திருக்காங்க. இப்படிபட்ட டீம்ல இருந்ததே சந்தோஷம்தான்.

அஞ்சாதே இப்பவும் பேசப்படும் படம் மிஷ்கின் கூட திரும்ப எப்ப படம் பண்ணுவீங்க ?

தெரியல. எனக்கு அஞ்சாதே 2 பண்ண ஆசை. மிஷ்கின் சார் கூட பேசிருக்கேன் அவரும் பண்ணலாம்னு சொல்லிருக்கார். அது அஞ்சாதே 2 வா இருக்கலாம் இல்ல புதுபடமா இருக்கலாம் பார்ப்போம்.

நீங்க ரொம்ப அழுத்தமான பாத்திரங்கள்லேயே நடிக்கறீங்க ஏன் ?

எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு அந்த மாதிரி ரோல் வர்றதே இல்ல. அஞ்சாதேக்கப்புறம் எல்லோரும் அதே மாதிரி ரோலோட தான் வர்றாங்க. மலையாளத்துல அத உடச்சி ரெண்டாவது படமே ஹியூமரா பண்ணிட்டேன். தமிழ்ல பத்து வருஷம் ஆகியும் அத உடைக்க முடியல. டைரகடர்ஸ் கொடுத்தா எந்த மாதிரி ரோலும் ஓகே பண்ணலாம்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?

தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். கைதி கமர்ஷியல் படம் தான் ஆனா வித்தியாசமா இருக்கும் புதுசா இருக்கும். பிகில், கைதி ரெண்டும் பாருங்க பிடிக்கும். நன்றி .

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார்.

பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.

Malayalam actor Narain talks about Karthi and Kaithi team

More Articles
Follows