தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மே 12ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
அதில்…
“தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்”. எனப் பதிவிட்டுள்ளார்.
Kamals Birth day wishes to Edappadi K Palanisamy