நான் கஷ்டப்பட்டு செய்றேன்.. திரையில் தோன்றினாலே ரஜினியை ரசிக்கிறார்கள்..; கன்ப்யூசனான ரசிகர்களுக்கு கமல் விளக்கம்

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

மநீம தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசனும் தன் வாழ்த்தை தெரிவித்து இருந்தார்.

அதில்…

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

இவ்வாறு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இது சில ரஜினி ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அது என்ன? திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும்…. என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த ட்வீட் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார் கமல்.

அவர் கூறியதாவது:

“அதில் என்ன விமர்சனம்? திரையில் தோன்றினாலே ரசிகர்களை வென்றெடுப்பது என்பது எத்தனை பேரால் முடியும்.

பலரும் பல்வேறு வழிகளில் புரிந்து கொண்டால் நான் என்ன பண்ண முடியும்? நான் அப்படியொரு ஆளே இல்லை என்கிறேன்.

ஒருவேளை அப்படியும் புரிந்து கொள்ளுங்கள். நான் சினிமாவில் அவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்வதை, ரஜினி ஜஸ்ட் வந்தாலே நடக்கிறது. திரையில் தோன்றினாலே ரஜினியை ரசிக்கிறார்கள்.

பால்கே விருது எனக்கு கொடுக்கவில்லையே என்ற எண்ணம் இல்லை.

ரஜினிக்கு ஒருவேளை இந்த ஆண்டு கொடுக்கவில்லை என்றால், அவருடைய பெருமை எந்த விதத்தில் குறைந்துவிடும்?.

எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டபோது, என்னை விட தகுதியானவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அந்த வருடம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை அவ்வளவே.

ரஜினி – கமல் எங்களை விட்டுவிடுங்கள். இன்னும் எத்தனையோ பேர் விருதுக்குத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள்.

எங்கள் இருவரை வைத்து விளையாடுவது மீடியாவுக்கு எப்போதுமே பிடிக்கும். நான் சமூக வலைத்தளங்களையும் மீடியா என்கிறேன்”.

இவ்வாறு கமல் கூறினார்.

Kamal talks about Rajini and his recent tweets

Overall Rating : Not available

Latest Post