தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி; டாஸ்மாக் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு பற்றி கமல்

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி; டாஸ்மாக் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு பற்றி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal statement about High Court order in Tasmac issueகொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகளவில் இருக்கும் நிலையில் நேற்று மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி மது பிரியர்களுக்கு உற்சாகம் அளித்தாலும் தாய்மார்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

எனவே மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இருந்த போதிலும் ஆன்லைனில் மதுவை விற்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன் ட்விட்டரில் இரு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

கோர்ட் தீர்ப்புக்கு முன்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.

தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக் காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்

கோர்ட் தீர்ப்புக்கு பின்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்

Kamal statement about High Court order in Tasmac issue

டாஸ்மாக் திறக்கக் கூடாது.; மது பிரியர்களுக்கு கோர்ட்டின் மரண அடி!

டாஸ்மாக் திறக்கக் கூடாது.; மது பிரியர்களுக்கு கோர்ட்டின் மரண அடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court ordered to shut Tasmac only online sales allowedதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மே 4ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று முதல் மே 7ல் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

நேற்று முதல் நாளே ரூ. 170 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மது வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற வேண்டும்.

மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கோர்ட்டின் இந்த உத்தரவு மது பிரியர்களுக்கு மரண அடியாக இருக்கும் என தெரிகிறது.

இந்த ஆன்லைன் சரக்கு விநியோகத்தை ஸோமோட்டோ நிறுவனம் கையில் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, உள்நாட்டு உணவு விநியோக நிறுவனமான ஸோமோட்டோ, மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

High Court ordered to shut Tasmac only online sales allowed

கங்கை நதி நீரில் கொரோனா சிகிச்சையா.? மறுப்பு தெரிவித்தது ICMR

கங்கை நதி நீரில் கொரோனா சிகிச்சையா.? மறுப்பு தெரிவித்தது ICMR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Can Ganga river treat Covid 19 ICMR says noநான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டிபிடிக்கப்பட வில்லை.

தினம் தினம் கொரோனாவினால் பலியானர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மருத்துவ நிபுணர்களும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நலையில் கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்று அதுல்யகங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியன இது குறித்து முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டது.

பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கி உள்ளதால், இது பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது என்று ஐசிஎம்ஆர் Indian Council of Medical Research தெரிவித்து விட்டதாம்.

Indian Council of Medical Research

Can Ganga river water treat Covid 19 ICMR says no

கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய்சேதுபதி.?

கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi to play lead role in Kamals Thalaivan Irukkindraanஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளார் உலகநாயகன்.

இந்தப் படம் தேவர் மகன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையில் சில தினங்களுக்கு துன் இன்ஸ்டாகிராமில் உலக நாயகனுடன் உரையாடினார் மக்கள் செல்வன்.

இன்ஸ்டாகிராம் உரையாடலுக்கு தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பும் வைக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி – கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பதையே இந்த உரையாடல் மறைமுகமாக தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

அண்மைக்காலமாக ரஜினி, சிரஞ்சீவி, விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Vijay Sethupathi to play lead role in Kamals Thalaivan Irukkindraan

சூரியனுக்கு பயப்படுபவரா? மஞ்ச கரு சாப்பிடாதவரா? அப்படின்னா உங்க வில்லனே ’கொரோனா’-தான்

சூரியனுக்கு பயப்படுபவரா? மஞ்ச கரு சாப்பிடாதவரா? அப்படின்னா உங்க வில்லனே ’கொரோனா’-தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The role of Vitamin D in the prevention of Coronaஉலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரபல மருத்துவமனை ஒன்று சென்னையில் 1500 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் 55 சதவீத பேரின் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக சென்னை பெண்கள் தங்கள் மீது சூரிய ஒளி பட்டுவிடக்கூடாது என்று உடல் முழுவதும் துணியால் மூடி கொண்டே செல்வர்.

அதுபோல் சென்னையில் பலரும் கோடையில் ஏசி ரூம்களிலேயே இருப்பார்கள். இவர்களுக்கும வைட்டமின் டி குறைபாடு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 12 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை தங்கள் உடலில் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி நின்றாலே போதும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்.

அப்போது நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் டி கிடைத்துவிடும் என்கின்றனர்.

அதுபோல் உடல் எடை அதிகரித்துவிடும் என ஒதுக்கும் முட்டையின் மஞ்சள் கருவிலும் வைட்டமின் டி அதிகம் உள்ளதாம்.

சீஸ் பாலாடைகட்டி, கிழங்கா மீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் அதுவும் நல்லது எனவும் தெரிவிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

The role of Vitamin D in the prevention of Corona

மருந்து கடையில் மது.?; நெட்டிசனுக்கு சூர்யா-கார்த்தி பட நடிகை பதிலடி

மருந்து கடையில் மது.?; நெட்டிசனுக்கு சூர்யா-கார்த்தி பட நடிகை பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet Singh clarifies her recent viral video சூர்யாவுடன் என்ஜிகே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ரகுல் பிரத்தி சிங்.

இவரைப் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

அதாவது… இவர் முகத்தில் மாஸ்க் அணிந்த படி கையில் சில பாட்டில்களுடன் ரோட்டில் நடந்து செல்வது போல ஒரு காட்சியை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அதில் ரகுல் பிரித்தி சிங் மது வாங்கி செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரகுல் பிரித்தி சிங்.

அதாவது.. மருந்து கடையில் சரக்கு கிடைக்குமா? அது எனக்கு தெரியாதே என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

எந்த உண்மையும் தெரியாமல் அடுத்தவர்களை கிண்டலடிக்கும் நபர்களுக்கு இது போன்ற பதிலடி தேவையான ஒன்றுதான்.

Rakul Preet Singh clarifies her recent viral video

More Articles
Follows