BREAKING வீட்டில் இருப்பது தீர்வா.? மீண்டும் அரசை கண்டிக்கும் கமல்

BREAKING வீட்டில் இருப்பது தீர்வா.? மீண்டும் அரசை கண்டிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams TN Govt and Stay home for 21 days orderஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் ஆக கொரோனா உருவெடுத்துள்ளது.

இதனை தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தன் கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

21 நாட்கள் (ஏப்ரல் 14 வரை) இந்தியா முழுவதும் ஊரடங்கு போட்டால் தினக்கூலிகள் மற்றும் நடைபாதை வாசிகள் என்ன செய்வார்கள்? என மோடி அரசை சாடியிருந்தார்.

அதன்பின்னர் கொரானா சிகிச்சை பெறுபவர்களுக்கு தன் இல்லத்தை தற்காலிக மருத்துவனையாக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் மற்றொரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.

அதில்..

வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது. @Vijayabaskarofl @CMOTamilNadu என தமிழக அரசை சாடியுள்ளார்.

Kamal slams TN Govt and Stay home for 21 days order

இதன் பின்னர் மற்றொரு பதிவில்…

Dear @nsitharamanoffc & @PMOIndia
Thank you for reaching out to the poorest of the poor. My fear of the Underprivileged losing their livelihood led to my out burst and the open letter to the Prime Minister. This act of supporting them during this crisis is much appreciated.

https://www.ndtv.com/world-news/lockdown-not-enough-use-this-time-to-attack-coronavirus-who-chief-tedros-adhanom-ghebreyesus-2200827

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 70 லட்சம் கொடுத்த ராம்சரண்

கொரோனா நிவாரண நிதியாக ரூ. 70 லட்சம் கொடுத்த ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram charan donates Rs 70 lakhs for Corona relief கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.

பிரதமர் நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஜன சேனா கட்சியின் நிறுவனரும், நடிகருமான பவன் கல்யான் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ. 2 கோடி அளிப்பதாக அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், பிரதமரின் நிவாரண தொகைக்கு ஒரு கோடியும் கொடுக்கிறார்.

இந்த நிலையில் இவரின் அண்ணன் சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான ராம் சரண் அவர்களும் தன் பங்கு நிவாரண நிதியை அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிரதமரின் நிவாரணத்தொகைக்கு ரூ.70 லட்சம் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ராம் சரண்.

Ram charan donates Rs 70 lakhs for Corona relief

புதிய சேனல் தொடங்கும் ‘பிக்பாஸ்’ நடிகை வனிதா

புதிய சேனல் தொடங்கும் ‘பிக்பாஸ்’ நடிகை வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Vanitha launches logo for her Channel பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள், அருண்விஜய்யின் சகோதரி என பல அடையாளங்கள் இருந்தாலும் நடிகை வனிதாவுக்கு பிக்பாஸ் 3 தனி அடையாளத்தை கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

இவரால் அந்த நிகழ்ச்சியில் டிஆர்பியில் உச்சம் தொட்டது என்று கூட சொல்லலாம்.

பிக்பாஸ் ராசியால் தற்போது பல டிவி நிகழ்ச்சிகளில் விருந்தினராக பங்கேற்று வருகிறார்.

பல யூடியூப் சேனல்களும் இவரின் பேட்டிக்காக அடிக்கடி காத்திருப்பது உண்டு.

இனி ஏன் அடுத்த யூடிப் சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ..? தற்போது வனிதாவே புதிய யூடியுப் சேனல் ஒன்றை தொடங்குகிறாராம்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடங்கவுள்ள சேனலுக்கான் லோகோவை வெளியிட்டுள்ளார். லோகோ நன்றாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குக்கிங் சேனலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

காரணம்.. பிக்பாஸ் வீட்டிலேயே நன்றாக சமைக்கத் தெரிந்தவர் வனிதாதான் என்கின்றனர்.

Bigg Boss fame Vanitha launches logo for her Channel

இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் லோகோவை பார்க்கலாம்…

https://www.instagram.com/p/B-KP-DEDtTf/

யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

யோகாவும் செஞ்சாச்சு; க்ளீனும் பண்ணியாச்சு… அடா சர்மாவின் செம வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Adah Sharmas Yoga and cleaning video goes viralபிரபு மற்றும் பிரபு தேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் 2வது ஹீரோயினாக நடித்தவர் அடா சர்மா.

இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் யோகா செய்துகொண்டே வீட்டை சுத்தப்படுத்துவது எப்படி என செய்து காட்டுகிறார்.

“வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். அதான்ப்பா உடற்பயிற்சி செய்யல. நேரம் பத்தல என பலரும் சொல்கிறீர்கள்.

என்னிடம் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என கூறி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Adah Sharmas Yoga and cleaning video goes viral

https://www.instagram.com/p/B-HZw0YnSR_/

 

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Action King Arjuns next risk for his daughter Aishwarya தென்னிந்திய சினிமாவின் ஆக்சன் கிங் என்றால் அது அர்ஜுன் தான்.

படத்தில் நடிப்பதோடு இல்லாமல் படங்களை தயாரிப்பதில் இயக்குவதிலும் ஆர்வம் இவருக்கு உண்டு.
தற்போது சில படங்கள் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் இவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

இப்படம் வெற்றி பெறவில்லை.

இதன் பின்னர் சொல்லி விடவா எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் தன் மகளை நடிக்க வைத்தார். தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படம் வெளியானது.

இந்த படமும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இயக்குநராகிறார் அர்ஜுன். இந்த முறை தெலுங்கு சினிமா செல்கிறார். அங்கு தான் இந்த அறிமுகம்.

இந்த முறையாவது இவரின் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துவோம்.

Action King Arjuns next risk for his daughter Aishwarya

BREAKING கொரோனா பாதிப்பு.: கோடிகளை கொட்டி கொடுத்த பவன் கல்யாண்

BREAKING கொரோனா பாதிப்பு.: கோடிகளை கொட்டி கொடுத்த பவன் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts உலகத்திற்கே எமனாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ்.

இந்த கொடிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது.

இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றன.

பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.

ஆக.. மொத்தம் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Corona Pandemic Pawan Kalyan donates Crores to Central and State Govts

More Articles
Follows