தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று மே 2ஆம் தேதி தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசினார் கமல்.
இவரை நடிகர் விஜய்சேதுபதி கேள்வி கேட்டார்.
அப்போது… உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாமே, இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என கேட்டார் விஜய்சேதுபதி.
இதற்கு எவருமே எதிர்பாராத வகையில் கமல் அதிரடியாக ஒரு பதிலை தந்தார்.
ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் மக்களுக்கு புரியனும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள்.
பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம்.
நான் இப்படித்தான். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் – பெயர்க் காரணம் என்ன என்று கேட்டார் விஜய்சேதுபதி.
மய்யம் எனும் சொல் என்னை மையம் கொண்ட சொல். புயலின் மையம் அமைதியான இடம் அது. புயலின் கண் என கூறுவார்கள் அங்கு புயலே இருக்காது.
எனக்கு அந்த வார்த்தை பிடித்த ஒன்று. ஆங்கிலத்தில் பார்த்தால் சென்டர் என கூறுவர். மக்கள் என்பது பரந்த சொல் உலகமே அது தான். கம்யூனிசம் என கூறும் போது கம்யூன் எனில் யாராக வேண்டுமானால் இருக்கலாம்.
மக்கள் கேட்டு வருவது நீதி ஒன்று தான் அதற்கு போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும். என கமல் தெரிவித்தார்.
Kamal clarifies Maiam Party name and his tweets