அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

இசையமைப்பாளர்- நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவரின் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிரும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் பி.வி. ஷங்கரை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகவும் பார்த்திருக்கிறார்.

‘கள்வன்’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் சொன்னபோது, ​​ஜிவி பிரகாஷால் காடுகளின் சூழலை தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஷங்கர், ஒளிப்பதிவாளராக இருப்பதால், திரைக்கதையுடன் காட்சி நேர்த்தியை திறமையாகக் கலந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளார்.

படத்தைப் பார்த்த ஜிவி பிரகாஷ், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது…

“‘கள்வன்’ படம் அட்வென்ச்சர், ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்,” என்றார்.

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக இணைந்துள்ள படம் இதுவாகும். பல ஆண்டுகளாக பாரதிராஜாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான ஆர்வம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

மேலும், படக்குழுவினர் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர் என்கிறார். கோடை விடுமுறைக்கு ‘கள்வன்’ படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான ட்ரீட் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

தமிழ் திரையுலகிற்கு தனித்துவமான திரைக்கதைகளை ஆதரித்து கொண்டு வருவதற்காக ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபுவுக்கு ஜிவி பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். அவருடைய கரியரில் ‘கள்வன்’ படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

*நடிகர்கள்:* ஜிவி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா

*தொழில்நுட்ப குழு:*

தயாரிப்பு – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
தயாரிப்பாளர் – ஜி. டில்லி பாபு,
ஒளிப்பதிவு & இயக்கம் – பி.வி. சங்கர்,
பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ் குமார்,
பின்னணி இசை – ரேவா,
எடிட்டிங் – சான் லோகேஷ்,
கலை – என்.கே. ராகுல்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்.

Kalvan will be treat for fans says GV Prakash

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்,

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.

தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Dushara Vijayan joins with Vikram in Chiyaan 62

மோகன் நடித்த ‘ஹரா’ படத்தை பான் இந்தியா படமாக மாற்றிய விஜய் ஸ்ரீஜி

மோகன் நடித்த ‘ஹரா’ படத்தை பான் இந்தியா படமாக மாற்றிய விஜய் ஸ்ரீஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் நடித்த ‘ஹரா’ படத்தை பான் இந்தியா படமாக மாற்றிய விஜய் ஸ்ரீஜி

மோகன் ரீ‍-என்ட்ரி கொடுக்கும் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் ‘ஹரா’ திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 14 வெளியீடு

*பரப்பரப்பான பான் இந்தியா ஆக்ஷன் படமான ‘ஹரா’ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது*

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் சமீபத்திய படைப்பான ‘பவுடர்’ ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘ஹரா’-வின் டீசர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது.

14 வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ படத்தில் அவரது ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். டீசரை தொடர்ந்து திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாகவுள்ளது.

அதுவும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.

‘ஹரா’ படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹரா’ குறித்து பேசிய விஜய் ஸ்ரீ ஜி…

“உலகெங்கும் உள்ள மக்கள் பார்க்க வேண்டிய யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘ஹரா’ பான் இந்தியா படமாக நான்கு மொழிகளில் வெளியாகிறது. மோகனின் அதிரடி நடிப்பு மிகவும் பேசப்படும்,” என்றார்.

சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரமும் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார். ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும்,” என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.

Mohan starrer Haraa teaser to be released on April 14

ஹரா டீசர் on #April14

#Haraa Teaser

Silver Jubilee Star #Mohan வெள்ளி விழா நாயகன் #மோகன்

youtu.be/c9fxKirYazo

A @vijaysrig Action

@iYogiBabu #Charuhasan @anumolofficial @catchAnithra
#MottaiRajendran @vanithavijayku1 @rashaanth #SPMohanraja @onlynikil @SonyMusicSouth

‘ஆலகாலம்’ படத்தில் ரஜினி பட நடிகை..; உலகையே அச்சுறுத்த வந்த விஷம்

‘ஆலகாலம்’ படத்தில் ரஜினி பட நடிகை..; உலகையே அச்சுறுத்த வந்த விஷம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆலகாலம்’ படத்தில் ரஜினி பட நடிகை..; உலகையே அச்சுறுத்த வந்த விஷம்

புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் பட ட்ரெய்லர்,

குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் ‘ஆலகாலம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை புரட்சி இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் வெளியிட்டார்.

ட்ரெய்லரைப் பார்த்த அவர் அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார்.

‘ஆலகாலம்’ என்ற படம் உருக வைக்கும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

‘ஆலகாலம்’ என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்,
இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்.

இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ?
தாயின் லட்சியம்,இளைஞனின் முயற்சி, காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ‘ஆலகாலம்’ படம் சொல்லும் கதை.

இப்படத்தை ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார். தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களாகிய லோகேஷ் கனகராஜ், ‘உறியடி’ விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

அவர்களைப் போன்று இப்படத்தை இயக்கி உள்ள ஜெயகிருஷ்ணாவும் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார்.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகனாக ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது.
தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள தணிக்கைத் துறை அதிகாரிகள்,இந்தப் படம் காலத்துக்கு ஏற்ற கதையைச் சொல்கிறது என்றும் கணவன், மனைவி, அம்மா, குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.

தொழில் நுட்பக்குழு..

இயக்கம் -ஜெயகிருஷ்ணா
இசை – என்.ஆர்.ரகுநந்தன்,
ஒளிப்பதிவு -கா. சத்யராஜ்,
எடிட்டர் -மு. காசிவிஸ்வநாதன்,
கலைஇயக்கம் -தேவேந்திரன்
நடனஇயக்குநர் -பாபா பாஸ்கர், அசார்.
ஸ்டண்ட். -ராம்குமார்,
டிசைன்ஸ் -டிசைன்பாய்ண்ட் என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகி உள்ளது.
தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

நிர்வாகத் தயாரிப்பு. மணி தாமோதரன்,
மக்கள் தொடர்பு -சக்திசரவணன்

ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Eswari Rao starring Aalakaalam movie

Trailer Link

——-

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில் கேன் (can) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக், புதுமையான வடிவத்தில் அசத்தும் கேன் (can) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான முறையில் ‘கேன்’ படத்தின் ப்ரோமோஷன் வீடியோக்களை பார்த்து வருகிறோம்.

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து நடிகர் ஆடம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).”

புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான முறையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க, குளிர் பொங்கும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை, திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன் ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும்.

இப்படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்:

எழுத்து இயக்கம் – ஆடம்ஸ்
இசை – அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு – பிரகாஷ் ருத்ரா
எடிட்டர் – மதன் G
கலை இயக்குநர் – N.K.ராகுல்.B.F.A
நடன அமைப்பு – ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பாளர் – சுகிர்தபாலன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
ஸ்டில் போட்டோகிராபர் – லால்
தயாரிப்பு மேலாளர் – P.ஆறுமுகம்
நிர்வாக தயாரிப்பாளர் Pa.சிவா
லைன் புரடியூசர் – M.நடராஜன், லால் தேவசகாயம்.
தயாரிப்பாளர் – கருணாநிதி. D

Adams directed Can Promo video goes viral

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

புஷ்பா: தி ரூல் படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி,

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது.

இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று.

நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

Pushpa The Rule teaser will be released on Allu Arjun Birthday

More Articles
Follows