சினிமா சூட்டிங் ; தியேட்டர் ஓபனிங் எப்போ..? கடம்பூர் ராஜூ பதிலால் கவலையடைந்த திரையுலகினர்

kadambur rajuகோவில்பட்டி‌ அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

“சினிமா சூட்டிங்க்கு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

டிவி சீரியல் சூட்டிங் நடைபெற உள்அரங்கு போதுமானது. அங்கு 60 பேர் இருந்தால் கூட போதுமானது.

ஆனால் அவுட்டோரில் சினிமா சூட்டிங் நடைபெறும். எனவே அங்கே பார்வையாளர்கள் திரளுவார்கள்

மேலும் சூட்டிங் நடத்த பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது.

இப்போதுள்ள கொரோனா கட்டுப்பாடு சூழ்நிலையில் அதற்கெல்லாம் அனுமதிக்க வழங்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

மேலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.“ என்றார்.

அமைச்சரின் இந்த பதிலால் கவலையடைந்த திரையுலகினர் தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என காத்திருக்கின்றனர்.

Overall Rating : Not available

Latest Post