தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கபாலி.
இப்படத்தின் பாடல்களை நாளை ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.
ஆனால், நேற்றே இப்படத்தின் நெருப்புடா பாடல் மற்றும் ரஜினிகாந்த் பேசும் பன்ச் டயலாக் உள்ளிட்டவை வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில், திடீரென் இப்படத்தின் பாடல்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற எளிமையான விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
இதன் முதல் ஆடியோ சி.டி.யை சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
நாளை முதல் இப்படத்தின் ஆடியோ சி.டி. கடைகளில் கிடைக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.