INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

INDIAN2 கதறவிட்ட அனிருத் & சிம்பு.; ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட கமல் ரசிகர் சித்தார்த் ஆப்சென்ட்

ஏ எம் ரத்னம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் “இந்தியன்”.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதில் விவேக், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனம் மிகப்பிரமாண்டமாக தயாரிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார்.. ங்கர் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜூன் ஒன்றாம் தேதி இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாரா, நீலோற்பலம், காலண்டர், கதறல்ஸ், கம் பேக் இந்தியன், சகசக ஆகிய ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த ஆறு பாடல்களும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சிலம்பரசன் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

கம் பேக் இந்தியன்.. தாத்தா வராரு கதற விடப் போறாரு… என்ற பாடலுக்கு அனிருத் மேடையில் ஆடி ரசிகர்களை கதறவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்புவின் பேச்சும் மேடையில் பரபரப்பை உண்டாக்கியது.

கமல் பேசும்போது தேவர் மகன் படத்திற்கு பிறகு சிவாஜி அவர்களை வைத்து நான் மகனாக அவர் தந்தையாக நடிக்க ஒரு படத்தை இயக்க காத்திருந்தேன்.. அந்த சமயத்தில் தான் ஷங்கர் இந்தியன் படத்தின் கதையை கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு படத்தின் கருவும் ஒன்றே ஆகும் அப்போது சிவாஜி அவர்களிடம் இது பற்றி சொன்னபோது நான் அப்பா நீ மகன் என்று இரு கேரக்டர்களை விட நீயே தந்தை நீயே மகன் என்ற கேரக்டர் உனக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார் அதற்கு பிறகு தான் இந்தியன் உருவானது என்றார் கமல்ஹாசன்.

இயக்குனர் ஷங்கர் பேசும்போது… உலகத்திலேயே கமல் போல ஒரு நடிகரை எங்கும் பார்க்கவே முடியாது.. 360 டிகிரியில் நடிக்கக்கூடிய ஒரே நடிகர் அவர்தான். கேமரா எங்கு வைக்கப்பட்டிருக்கிறது? எந்த ஆங்கிளில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை நடிகர்கள் நடிக்கிறார்கள்? நாம் எப்படி நடிக்க வேண்டும் என்று எல்லா விஷயத்தையும் கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட்டு நடிக்கக்கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

தற்போது 361 நடிகராகவும் அவர் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார். அவரின் அர்ப்பணிப்பு அளப்பறியாது. முதன்முறையாக அவர் இந்தியன் படத்திற்காக தாத்தா வேஷம் போட்டு வந்த போது எனக்கு மெய் சிலிர்த்தது.. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் இந்தியன் தாத்தா வேடத்தில் வந்தது அதே மெய்சிலிர்க்கும் உணர்வு வந்தது.

சின்னக்கலைவாணர் விவேக் இப்போது இல்லை. ஆனால் இந்தியன் 2 வந்த பிறகு விவேக் என்றும் நம்முடன் இருப்பார்.. அவருக்கும் கமலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இல்லை.. ஆனால் இந்தியன் 3 படத்தில் காஜல் அகர்வால் காட்சிகள் இருக்கிறது.” என்று பேசினார் சங்கர்.

நள்ளிரவு ஒரு மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சித்தார்த் என்பதும் பாய்ஸ் படத்தில் இயக்குனர் சங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சித்தார்த் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளாதது ஏன் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,..

“என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கருக்கு தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முந்தைய திட்டங்களினால் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார் சித்தார்த்.

Indian2 Audio launch highlights Kamal Shankar speech

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கி தயாரித்த ‘பயமறியா பிரம்மை’

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!*

*ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலி கலவையை ரஹ்மத்துல்லாவும் கையாண்டிருக்கிறார்கள்.

கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கிரைம் திரில்லர் வகையிலான படைப்பில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ‘பயமறியா பிரம்மை’ தரும்” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ‘பயமறியா பிரம்மை’ எனும் இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bayamariya Brammai First Look launched

Here is the first look of #SixtyNineMMFilm – #ProductionNo1 titled #BayamariyaBrammai – Get ready for an exciting cinematic experience coming to theatres near you soon.

#BayamariyaBrammaiFirstLook

@69mmfilmoffl @jagadishAKAJD @badappleanime @jaiviratra @nandyphotograph @pravsmith @invisibleart94 @baro_n_d @harishuthaman @actorjohnvijay @iDivyaGanesh @actorjackrobin @akhilprakashgpb @svijayrathinam @amrahmathulla @proyuvraaj

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HARAA U/A அலறவிடும் ‘ஹரா’ ட்ரைலர்..; மோகன் ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிறச் செய்த விஜய் ஸ்ரீ

1980-களில் ரஜினி கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களுக்கு நிகராக வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் மோகன்.

இவரது படத்தில் இளையராஜாவும் எஸ் பி பாலசுப்ரமணியம் இணைந்தால் அந்தப் பட பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்..

இப்படியாக திரை உலகை கலக்கி கொண்டிருந்த மோகன் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

மீண்டும் நடித்தால் கதையின் நாயகனாகவே நடிப்பேன் என்று காத்திருந்த மோகனை மீண்டும் திரைக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹரா’. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

ஓரிரு தினங்களுக்கு முன் ‘ஹரா’ படத்தின் டிரைலரும் வெளியாகி இதுவரை 15+ லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது..

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி ஹரா படம் வெளியாக உள்ள நிலையில் இந்த ரிலீஸை கொண்டாட காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள்.

தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரள மற்றும் கர்நாடகாவிலும் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட இருக்கின்றனர்.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

மலையாள நடிகை அனுமோல் மோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் சீனியர் நடிகர் சாருஹாசன், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், வனிதா விஜயகுமார், ஜெயக்குமார், ரயில் ரவி, சுரேஷ் மேனன் தீபா ஷங்கர், சிங்கம்புலி, ஆதவன், அனித்ரா நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரஹத் முனியசாமி மற்றும் மனோதினகரன் இருவரும் கையாண்டுள்ளனர்.

ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ள இந்த பட எடிட்டிங் பணிகளை குணா செய்து இருக்கிறார்..

ஜூன் 7ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் இதன் வெளியீட்டை பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பெற்று வருகின்றன.

தமிழக வெளியீடு உரிமையை எல்மா என்ற நிறுவனமும் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை பிரபல சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் பெற்றுள்ளது.

‘ஹரா’ படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் கோவை மற்றும் கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக கோயம்புத்தூர் மோகன் ராஜ், ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

Haraa movie release and Business updates

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடவுள் ஆசி.. எம்ஜிஆருக்கு டப்பிங்.. சிவாஜி போடாத கெட்டப்.. ரஜினியுடன் கூட்டணி.. விஜயகாந்த் இடத்தில் நான்.. – சத்யராஜ்

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,

“இந்தப் படத்திற்கு வேறு சில டைட்டிலும் யோசித்தோம். ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ என கவித்துவமாக இதுவே தான் வேண்டும் என இயக்குநர் விஜய் மில்டன் பிடிவாதமாக சொன்னார். தமிழில் நல்ல தலைப்பு படங்களுக்கு வருவதில்லை என சிலர் ஆதங்கப்படும்போது, இந்த தலைப்பை எல்லோரும் வரவேற்க வேண்டும் என விரும்புகிறேன்.

இந்தப் படம் கேப்டன் விஜயகாந்துக்கு டிரிபியூட்டாக இருக்கும். இந்தப் படம் 2021ல் தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் சார் நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நலன் காரணமாக அது நடக்காமல் போனது. அவரது மறைவுக்குப் பின் ஏஐ தொழில்நுட்பத்திலாவது அவரைக் கொண்டு வருகிறோம் என அவரது குடும்பத்தினரிடம் அனுமதி கேட்டோம். அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் படத்தில் வரவேண்டும் என்று விரும்பினோம்.

ஆனால், அதில் சில பிரச்சினைகள் இருந்ததால் அவரைப் போன்ற லெஜெண்ட் சத்யராஜ் சாரிடம் அந்த கதாபாத்திரத்திற்காக கேட்டோம். உடனே ஒத்துக் கொண்டார். விஜய் ஆண்டனி சார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மேகா ஆகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். மூன்று வருடங்கள் உழைத்து விஜய் மில்டன் நல்ல படத்தைக் கொடுத்துள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுங்கள்”.

இயக்குநர் விஜய் மில்டன்…

“தனஞ்செயன் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும்தான் இந்தப் படம் தொடங்க முக்கிய காரணம். விஜய் ஆண்டனி சாரை ஹீரோவாக நான் தான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது மிஸ் ஆகிவிட்டது. நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். ’மழை பிடிக்காத மனிதன்’ வெறும் ஆக்‌ஷன் படம் மட்டும் கிடையாது. அது பொயட்டிக் ஆக்‌ஷன் ஜானர்.

இந்த வார்த்தையை தனஞ்செயன் சார்தான் சொன்னார். என்னுடைய எல்லாப் படங்களிலும் கெட்டவன் சாகக் கூடாது. கெட்ட விஷயம்தான் சாக வேண்டும் என்று சொல்வேன். அது இந்தப் படத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். அந்தமான், டையூ என லொகேஷனை போராடி எங்களுக்கு தனஞ்செயன் சார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சார் போன்ற திறமையான நடிகரைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அசத்தினார். சரத்குமார் சாரிடம் நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி இருக்கும். ‘சூர்யவம்சம்’ காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லி விட்டார். விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், என்னுடைய தொழில்நுட்பக் குழு என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்”.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி…

“அருமையான படம் செய்துள்ளோம். இயக்குநர், தயாரிப்பாளர், விஜய் ஆண்டனி சார், சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை மேகா ஆகாஷ்…

“எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.

நடிகர் சத்யராஜ்…

“எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன்.

இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ்.

கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன்.

மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்.”

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நான் நடிக்கிறேன்.. மோடி பயோபிக் படம் தொடர்பாக யாரும் பேசல.. அந்த படத்தை வெற்றிமாறன், ரஞ்சித், மாரி போன்றவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்.. ” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி…

“பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.

அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.

Sathyaraj speech at Mazhai Pidikkatha Manithan event

🎬 @vijaymilton
@vijayantony #Sathyaraj @realsarathkumar @akash_megha #SaranyaPonvannan @murlisharma72 @Dhananjayaka @AmbarPruthvi @FvInfiniti
@SureshChandraa
@AbdulNassarOffl
@trendmusicsouth @DoneChannel1 @digitallynow

தமிழ் படத் தலைப்புகளால் அவமானம்.; ‘பனை’ இசை விழாவில் வைரமுத்து பேச்சு

தமிழ் படத் தலைப்புகளால் அவமானம்.; ‘பனை’ இசை விழாவில் வைரமுத்து பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படத் தலைப்புகளால் அவமானம்.; ‘பனை’ இசை விழாவில் வைரமுத்து பேச்சு

ஆதி பி. ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் மற்றும் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பனை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று.

இதில் கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இப்படத்தில் பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து இசையை வெளியிட அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பெற்றுக்கொண்டார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது..

பனை என்பது படத்தின் பெயர் அல்ல மண்ணின் பெயர், மக்களின் பெயர் மற்றும்
நம்முடைய கலாச்சாரத்தின் குறியீடு என்றுதான் கருதுகிறேன். ஒரு படத்திற்கு
தலைப்பு மிக மிக முக்கியம். இப்போது வருகிற தமிழ்த் திரைப்படங்களின் பெயர்களை பார்த்தால் வெட்கப்படுகிறேன்.

அந்தப் பெயர் எனக்கு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அது வெறும் ஒரு சொல்லாக இருக்கிறது. தமிழில் சொற்களுக்கா பஞ்சம். தமிழில் தலைப்புகளுக்காக பஞ்சம்.

தமிழில் அழகான சொல்லாடலுக்கா பஞ்சம். நல்ல பெயர்களை தனித்துவமான
பெயர்களை ஏன் நீங்கள் சூடக் கூடாது என்று பார்க்கிறேன். இதற்காக பத்திரிகைகளில் அதிகாலை செய்திகளை புரட்டிப் பார்க்கிறேன்.

தலைப்பு என்றால் நெஞ்சில் தைக்க வேண்டாமா என் இருதயத்தில் சென்று பசை போட்டு ஒட்டிக்கொள்ள வேண்டாமா? என்னை திருப்பி உச்சரிக்க வைக்க வேண்டாமா?

தலைப்பு வைக்கிற தமிழ் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கதாசிரியர்கள் தயவு செய்து அழகான தமிழ் பெயர்களை படத்துக்கு சூட்ட வேண்டும் என்று நான் அன்போடு விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு கவிஞனுடைய வேண்டுகோள் அல்லது ஒரு பாடலாசிரியரின் வேண்டுகோள் என்று நினைத்து விடாதீர்கள் இது தமிழ் மக்களின் வேண்டுகோள்.

இந்த படத்திற்கு எனக்கு கதை சொன்ன இயக்குனர் இந்தப் படத்திற்கு விதை என்று பெயர் வைத்திருக்கிறேன் என்று சொன்னார் நான் சொன்னேன் விதை நல்ல பெயர் தான் ஆனால் நீங்கள் சொல்ல விரும்புகிற கதையை விட்டு விதை தள்ளி இருக்கிறது எனவே இந்த படத்தின் ஒட்டுமொத்த இருதய துடிப்பும் தலைப்புக்குள் வரவேண்டும் என்றால்
பனை என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னேன். விதையை விட பனை எனக்கு இன்னும் பக்கத்தில் இருக்கிறது ஐயா என்று சொன்னார்.

டெல்லியில் ஒருவன் தன் சுயசரிதையை எழுதிவிட்டு “மை ஸ்டோரி” என்று
தலைப்பு வைத்தால் 200 பிரதிகள் கூட விற்கவில்லை என்ன என்று யோசித்துப்
பார்த்தார்.. அட்டையை கிழித்து இன்னொரு தலைப்பு வைத்தான்

ஒரே நாளில் 3000 பிரதிகள் விற்று விட்டன. அவர் வைத்த தலைப்பை மாற்றி
”என் மகனின் தந்தையின் கதை” என்று தலைப்பு வைத்தான்… மை ஸ்டோர் என்றால் என் கதை என்று அர்த்தம் என் கதை என்ற தலைப்பில் மாற்றி ‘என் மகனின் தந்தையின் கதை’ என்று வைத்தார்.. அது அவருடைய கதை தான்..”

என கவிஞர் வைரமுத்து கலகலப்பாக பேசினார்..

வைரமுத்துவின் பேச்சை நடிகை வடிவுக்கரசி, வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா மற்றும் பனை பட குழுவினர் ரசித்து கைதட்டி கேட்டுக் கொண்டிருந்தனர்..

Vairamuthu condemns recent tamil movies titles

உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கை..; ‘பிள்ளையார் சுழி’ போடும் தீரஜ் & அபிநயா

உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கை..; ‘பிள்ளையார் சுழி’ போடும் தீரஜ் & அபிநயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கை..; ‘பிள்ளையார் சுழி’ போடும் தீரஜ் அபிநயா:

*தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்

“டபிள் டக்கர்” படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான “பிள்ளையார் சுழி” மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார்.

மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள “பிள்ளையார் சுழி” ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர்.

தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

‘போதை எறி புத்தி மாறி’ மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த “டபுள் டக்கர்” போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீராஜ், “பிள்ளையார் சுழி” யிலும் பார்வையாளர்களை மீண்டும் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “டபிள் டக்கர்” படம் சிறுவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது,

இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற முக்கிய துணை நடிகர்கள் நடிக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரங்கள் உண்ணி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்,

“பிள்ளையார் சுழி” பட குழுவில் பிரசாத் DF Tech ஒளிப்பதிவாளராக, ஹரி S.R இசையமைப்பாளராக, மற்றும் ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், மற்றும் கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

படத்தின் திருத்தத்தை தயாரிப்பாளர் சிலம்பரசி வி. கவனித்துள்ளார். பாடல்களில் சத்திய பிரகாஷ், ராகுல் நம்பியார், மற்றும் சூப்பர் சிங்கர் கௌசிக் ஸ்ரீதரன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.

இந்த ஆண்டு திரையரங்குகளை அலங்கரிக்கும் “பிள்ளையார் சுழி” படத்துடன் மகிழ்ச்சியான சினிமா அனுபவத்தை எதிர்நோக்குங்கள்.

Actor Dheeraj Returns with Pillaiyar Suzhi

Get ready to be enthralled by “Pillaiyar Suzhi” as it hits the screens this year, promising a memorable cinematic experience for all..

More Articles
Follows