கொரோனா ஊரடங்கை நீடித்த மாநிலங்கள் எத்தனை.? மற்ற மாநிலங்கள் எப்படி.?

கொரோனா ஊரடங்கை நீடித்த மாநிலங்கள் எத்தனை.? மற்ற மாநிலங்கள் எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian States want to extend corona virus lock down What Modi will decideஉலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்து பல உயிர்களை கொன்று வருகிறது.

இதனால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 678 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவம், 33 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார்.

21 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வருகிற ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ளது.

வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

ஓரிரு தினங்களுக்கு முன் நடந்த (ஏப்ரல் 8) அன்று நடந்த இந்தியளவில் அனைத்துக் கட்சிகள் கூட்டட்திலும், ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாளை ஏப்ரல் 11-ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இம்முறை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுவரை ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கை உத்தரவை ஏப்ரல் 31 வரை நீடித்து ஒரு சில மாநில முதலமைச்சர்கள் அமல்படுத்தியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளர்.

ஜார்க்கண்டிலும் நீடிப்பு என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மாவட்ட வாரியாக விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

நாளை பிரதமர் என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Indian States want to extend corona virus lock down What Modi will decide?

இயக்குனர் சங்கத்திற்கு 5; பெப்சிக்கு 5.. அட்லியின் கொரானா நிவாரண நிதி

இயக்குனர் சங்கத்திற்கு 5; பெப்சிக்கு 5.. அட்லியின் கொரானா நிவாரண நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director atleeகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பல உயிரிழப்புகள் தினம் தினம் அரங்கேறி வருகிறது.

கொரோனா தொற்றை தடுக்க மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லீ ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

இதில் ரூ.5 லட்சம் பெப்சிக்கும், ரூ.5 லட்சம் இயக்குனர்கள் சங்கத்திற்கும் வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் ஓய்வெடுக்க தன் ஹோட்டலை வழங்கிய சந்திரமுகி வில்லன்

மருத்துவர்கள் ஓய்வெடுக்க தன் ஹோட்டலை வழங்கிய சந்திரமுகி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonu soodதமிழில் கள்ளழகர், ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பாலிவுட் நடிகர் சோனுசூட்.

இவர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் ஜுஹு பகுதியில் உள்ள தனது ஸ்டார் ஹோட்டலை வழங்க முன்வந்துள்ளார்.

மக்கள் உயிரை காப்பாற்ற இரவும்-பகலும் உழைக்கிறார்கள் மருத்துவ பணியாளர்கள். சிலர் வீட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியாக இதை செய்துள்ளேன்” என சோனு சூட் தெரிவித்துள்ளார்.

இவருக்கு முன்பே நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள 4 மாடி அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு சிலரும் இவர்களைப் போல் தங்கள் திருமண மண்டபம், ஆபிஸ் ஆகியவற்றை கொரோனா சிகிக்சைக்கு உதவிடும் வகையில் தமிழக அரசுக்கு கொடுக்க முன்வந்துள்ளனர்.

சினிமாவுக்கு முழுக்கு போடும் விக்ரம்; வதந்தியை பரப்பும் மீடியாக்கள்

சினிமாவுக்கு முழுக்கு போடும் விக்ரம்; வதந்தியை பரப்பும் மீடியாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikramஇளையராஜா இசையில் பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரீ ஆனவர் விக்ரம்.

சேது வெற்றியால் இவர்களை ரசிகர்கள் சீயான் விக்ரம் என்றே அழைத்தனர்.

அதன்பின்னர் தில், ஜெமினி, சாமி, ஐ என பல அதிரடி ஹிட்டுகளை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் இவரின் மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆதித்ய வர்மா படத்தை மேற்பார்வையிட்டு வந்தார். இதனால் சில படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.

தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென இந்த இரு படங்களை முடித்து விட்டு விக்ரம் நடிப்பதிலிருந்து ஓய்வுப்பெற போகிறார் என்றும் தன் மகனின் எதிர்காலத்தை முன்னேற்ற அவர் இப்படியொரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார் என தகவல் பரவியது.

முற்றிலும் தவறான இந்த செய்தியை எதையும் ஆராயாமல் முன்னணி மீடியாக்களே செய்தியாக வெளியிட்டது. நம் தளத்தில் வெளியாகவில்லை.

தற்போது இதை விக்ரம் தரப்பில் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இது முற்றிலும் வதந்தி, விக்ரம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா மீது தீராத காதல் கொண்டவர் நடிகர் விக்ரம். சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்கையில் அவரை பற்றி எப்படிதான் இதுபோன்ற செய்திகளை உண்மையை அறியாமல் சிலர் வெளியிடுகிறோர்களோ என தெரியவில்லை.

‘சந்திரமுகி 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க மறுக்க என்ன காரணம்?

‘சந்திரமுகி 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க மறுக்க என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chandramukhi rajiniசிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த படம் ‘சந்திரமுகி’.

இந்த படம் பல சாதனைகளை படைத்தது. சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரில் 850 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

தற்போது 15 வருடங்களுக்கு பின் சந்திரமுகி 2வது பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கவில்லையே அது ஏன்? என ரஜினி ரசிகர்களே குழம்பியிருந்தனர்.

அண்மைக்காலமாக ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், முருகதாஸ், சிவா உள்ளிட்ட புது இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார் ரஜினி.

விரைவில் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவிருப்பதால் மீண்டும் தன்னை இயக்கிய இயக்குனர்களுடன் இணைய விரும்பவில்லை என கூறப்படுகிறது.

தல ரசிகர்களை கலாய்த்தாலும் அஜித்தை பாராட்டிய கஸ்தூரி

தல ரசிகர்களை கலாய்த்தாலும் அஜித்தை பாராட்டிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kasthuriநடிகர் அஜித் மீது நன்மதிப்பு வைத்திருந்தாலும் அவரின் ரசிகர்களை அடிக்கடி கலாய்ப்பது கஸ்தூரியின் வேலை.

இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அடிக்கடி ட்விட்டரில் சண்டை வருவது சகஜம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளார்.

மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியிருந்தார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தை பாராட்டியுள்ளார் கஸ்தூரி.

“தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அஜித்துக்கு தாராள மனசு. 1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நிவாரண நிதிக்காக தமிழ் சினிமா துறையில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன்.

பெப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்காக ஸ்பெஷல் நன்றி”, என கஸ்தூரி அஜித் பாராட்டியுள்ளார்.

More Articles
Follows