தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.
மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
மேலும் 18ஆம் தேதிக்கு பிறகும் புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் அறிவிப்பை பிரதமர் மோடி சில தினங்களில் அறிவிப்பார்.
இதனிடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வர பணிகளை இந்திய அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில் ரெயில் போக்குவரத்தை துவங்க முடிவு செய்திருந்தது ரெயில் அமைச்சகம்.
வருகிற ஜூன் 12 முதல் படிப்படியாக ரெயில் சேவை துவக்கப்படும் என அறிவித்து, அதன்படி முதற்கட்டமாக 15 ஜோடி ரெயில்கள் டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
ஆனால் நிறைய ரயில்களில் ஏசி வசதி உள்ளதால் இது கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ரெயில் மற்றும் விமான சேவையை தற்போது தொடங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்று தமிழகத்தில் தமிழக வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து சேவை கிடையாது அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரையில் இயங்கும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது ரயில்வே அமைச்சகம்.
அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Indian Railways Cancels all Passenger Train Services till June 30