பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

baba ramdevகொரோனா என்ற கொடிய வைரசால் எந்த வயதினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பூசிக்கும் அது தொடர்பான மருந்துக்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல யோகா குரு ராம்தேவ் என்பவர், நவீன மருத்துவத்துவத்தையும், (அலோபதி) மருத்துவர்களையும் அவமதிக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்.. “நவீன மருத்துவமான அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்

அலோபதி முட்டாள்தனமானது. ரெம்டெசிவிர், பிளாஸ்மா தெரபி் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்த இருந்து தவறிவில்லை. ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

இதற்கு முன்பே அவர் சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் நவீன மருத்துவர்களை கொலைகாரர்கள் என பாபா பேசினார்.

பாபா ராம்தேவும், அவரது கூட்டாளி பாலகிருஷ்ணாவும் உடல்நிலை சரியில்லாத போது அலோபதி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Indian medical council against Baba Ramdev

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

swagatha krishnanஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன் தான் திரைக்கு வரும் அந்தக் குயில்.

திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால், அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள்.

ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவான காயல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவிடைந்துவிட்டது.

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்வாகதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது காயல்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

பாடகி நடிகையான பின்னணி:

தான் நடிகையாக முழுமுதற் காரணம் தனது சகோதரி நடிகை மாயா என்கிறார் ஸ்வாகதா.

நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக் கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

நடிப்பு ரீதியாக தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்வாகதா அங்கு பயிற்சி பெற்றார்.

பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினார்.

கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஸ்வாகதா தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமானார்.

அந்தவேளையில் தான், பிப்ரவரி இறுதியில் அவருக்குப் தமயந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தமயந்தி, ஸ்வாகதாவிடம் நடிக்க விருப்பமுள்ளதா எனக் கேட்டுள்ளார். வாய்ப்பைத் தவறவிடாத ஸ்வாகதா தமயந்தியிடம் கதை கேட்டிருக்கிறார்.
ஒரு கவிஞரின் கதையில் இசைக்குயில் நடிகையாக ஒப்பந்தமான கதை இதுதான்.

பின்னர், நேரடியாக படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். குறுகிய காலத்தில் கடலோரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்தது. திரைக்குப் புதிது என்பதால் ஆரம்ப நாட்களில் சிறு பதற்றம் இருந்தாலும் தனது இயக்குநர் பக்கபலமாக இருந்தால் காயல் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்வாகதா கிருஷ்ணன்.

ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் முடிந்துவிட்டது.

மற்ற இரண்டு படங்களில் படப்பிடிப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

Singer Swagatha turns heroine

கொரோனா தொற்றால் இத்தனை மருத்துவர்கள் & வங்கி ஊழியர்கள் மரணமா..? அதிர்ச்சி தகவல்

கொரோனா தொற்றால் இத்தனை மருத்துவர்கள் & வங்கி ஊழியர்கள் மரணமா..? அதிர்ச்சி தகவல்

Corona 2nd waveஇந்தியாவில் கொரோனா ஊரடங்கில் பல துறைகள் முடங்கி கிடந்தாலும் வங்கி துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதே சமயம் கொரோனா தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் 1,250-க்கும் மேற்பட்ட வங்கியில் பணிபுரிபவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்துள்ளனர்.

1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் வங்கி பணியாளர்கள் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 முதல் 15 லட்சம் வரை வழங்க தயாராக இருப்பதாக பெரும்பாலான வங்கிகள் அறிவித்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

வங்கித் துறையை தொடர்ந்து மருத்துவ துறையிலும் மருத்துவர்கள் மரணம் அடைந்து வருவது இன்னும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்திய மருத்துவ கழகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்ட 422 மருத்துவர்கள் கொரோனா 2வது அலையில் இறந்துள்ளனர்.

இந்த மருத்துவர்களில் 100 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும் 96 மருத்துவர்கள் பீகாரிலும் 41 மருத்துவர்கள் உத்தர பிரதேசத்தில் என இந்திய மருத்துவ கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Over 400 doctors died due to Covid during second wave

JUST IN மே 22-23 தேதிகளில் அரசு சார்பில் 4500 ஸ்பெஷல் பஸ்..; ஆம்னி பஸ்களும் ரெடி

JUST IN மே 22-23 தேதிகளில் அரசு சார்பில் 4500 ஸ்பெஷல் பஸ்..; ஆம்னி பஸ்களும் ரெடி

special bus tnமே 24ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் எந்தவித தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதனால் இன்றும் நாளையும் மே 22-23 தேதிகளில் பேருந்துகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 1500, மற்ற மாவட்டங்களில் இருந்து 3000 பேருந்துகள் இயக்கப்படும்

இரவு நேரத்திலும் 2 நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tamil Nadu to operate over 4500 special buses

அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ‘மெலோடி குயின்’ ஸ்ரேயா கோஷல்

Shreya Ghoshalகடந்த 2000 ஆம் ஆண்டில் ஜி டிவியில் வெளியான ‘சரிகம’ பாட்டு போட்டியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல்.

2002 ஆம் ஆண்டு ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் நடித்த ‘தேவதாஸ்’ பட மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் இவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், நேபாளம், பாகிஸ்தானி, பெங்காலி, போஜ்பூரி என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

நான்கு முறை தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்…

“கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி` எனக் குறிப்பிட்டுள்ளார்.

God has blessed us with a precious baby boy this afternoon. It’s an emotion never felt before. @shiladitya and I along with our families are absolutely overjoyed. Thank you for your countless blessings for our little bundle of joy.

Singer Shreya Ghoshal blessed with baby boy today

BIG NEWS : மே 22-23ல் அனைத்து கடை & பேருந்து அனுமதி.; அடுத்த ஒரு வாரம் தளர்வே இல்லாத முழு ஊரடங்கு – தமிழக அரசு

BIG NEWS : மே 22-23ல் அனைத்து கடை & பேருந்து அனுமதி.; அடுத்த ஒரு வாரம் தளர்வே இல்லாத முழு ஊரடங்கு – தமிழக அரசு

TN Lock Downகொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர்.

இந்த குழுவானது நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது கூடி விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் அதிமுக ஆட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்று மே 22 காலையில் முதல்வரின் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும்,
கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 13 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் மே 24 முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

அதன் விவரம்…

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு.

இன்றும் மே 22-23 நாளையும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி.

பொதுமக்கள் நலன் கருதி இன்று (22.5.21) இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி.

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.

பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.

காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும். அடுத்த ஒரு வாரம் மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது.

#TNLockdown

#BREAKING: Total #Lockdown without any relaxation to be enforced in #TamilNadu for a week from Monday. All Shops likely to be kept open from 6am to 9pm tomorrow (May 23 SUNDAY) for people to replenish their supplies for the week.

More Articles
Follows