ரஜினிக்காக விஸ்வாச கூட்டணி அமைக்கும் சிவா-இமான்

ரஜினிக்காக விஸ்வாச கூட்டணி அமைக்கும் சிவா-இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imman compose music for Rajini movie in Siva directionலைகா தயாரிப்பில் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை முடித்துவிட்டு தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு படத்தை சிவா இயக்கவுள்ளதாக தெரிகிறது.

அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி அதே சிவா தான்.

இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Imman compose music for Rajini movie in Siva direction

சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

சூர்யா தனுஷ் & சிவகார்த்திகேயன் வழியில் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formulaஅர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் ஆகியவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் அதன் வெற்றியால் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

எனவே இவரது சமீபத்திய படங்கள் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இவரும் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு உள்ளர்.

கிங் ஆப் தி ஹில் என்ற நிறுவனத்தை தொடங்கி மீக்கு மாத்திரமே சொப்தா என்ற படத்தை தயாரிக்கிறார்.

இவரது பெல்லி சூப்புலு என்ற படத்தை இயக்கிய தருண் என்பவரை தனது முதல் தயாரிப்பில் நாயகனாக்கி அழகு பார்க்கிறார்.

ஷாமிர் சுல்தான் என்பவர் படத்தை இயக்கவுள்ளார்.

தமிழில் சினிமாவின் இளம் நாயகர்களான சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Deverakonda follows Suriya Dhanush Sivakarthikeyan formula

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. ரஜினி டிவி.; கமல் டிவி

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. ரஜினி டிவி.; கமல் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal going to launch TV channels for their political parties ஒரு கட்சி தொடங்கினால் கூடவே ஒரு டிவி சேனலையும் தொடங்குவது தான் தற்போதைய டிரெண்ட்.

திமுக கட்சிக்கு சொந்தமாக கலைஞர் டிவி, இசையருவி, கலைஞர் செய்திகள் முதல் ஏகப்பட்ட சேனல்கள் உள்ளன. இவையில்லாமல் சன் டிவியின் பல சேனல்களும் இவர்களது குடும்ப சேனல்கள்தான்.

அதிமுக.வுக்கு ஜெ.நியூஸ் சேனல் உள்ளது. பா.ம. கட்சிக்கு மக்கள் தொலைக்காட்சி உள்ளது. ஐஏகே. கட்சிக்கு வேந்தர் டிவி உள்ளது.

விஜயகாந்துக்கு கேப்டன் டிவி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மெகா டிவி, பிஜேபி.க்கு லோட்டஸ் டிவி உள்ளது.

இந்த நிலையில் விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார் ரஜினி. இவரது பெயரில் இப்போதே ஒரு டிவி சேனல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கமலும் அவரது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளாராம்.

Rajini and Kamal going to launch TV channels for their political parties

ராஜமௌலி படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாதாம்.; இதை படிங்க

ராஜமௌலி படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாதாம்.; இதை படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli movie heroes and their flop movies listபாகுபலி நாயகன் என இந்திய முழுக்க அறியப்பட்டவர் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு இவரது நடிப்பில் ரூ. 350 கோடியில் உருவான சாஹோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை. இருந்தபோதிலும் 2 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த பின் அந்த நாயகனின் அடுத்த படம் (வேறு இயக்குனர்கள் இயக்கிய படங்கள்) ஓடாது என பெரிய சென்டிமெண்ட் லிஸ்ட்டை தருகிறார்கள் தெலுங்கு சினிமா உலகினர்.

அவைதான் இது…

ராஜமௌலி இயக்கத்தில்…

ஜுனியர் என்டிஆர் நடித்த ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ பெரிய வெற்றி. அடுத்து ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சுபு’ தோல்வி.

மீண்டும் ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சிம்மாத்ரி’ வெற்றி, ஆந்திரவாலா தோல்வி,

நிதின் நடித்த ‘சை’ வெற்றி. பின்னர் ‘அல்லரி புல்லொடு’ தோல்வி.

பிரபாஸ் நடித்த ‘சத்ரபதி’ வெற்றி. பின்னர் ‘பௌர்ணமி’ தோல்வி,

ரவி தேஜா – ‘விக்ரமார்குடு’ வெற்றி. பின்னர் ‘காதர்நாக்’ தோல்வி,

ஜுனியர் என்டிஆர் – ‘எமதொங்கா’ வெற்றி. பின்னர் ‘கன்த்ரி’ தோல்வி,

ராம்சரண் – ‘மகதீரா’ வெற்றி. பின்னர் ‘ஆரஞ்ச்’ தோல்வி,

சுனில் – ‘மரியாதை ராமண்ணா’ வெற்றி. பின்னர் ‘கேஎஸ்டி அப்பளராஜு’ தோல்வி.

நானி – ‘ஈகா’ வெற்றி. பின்னர் ‘ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு’ தோல்வி,

பிரபாஸ் – ‘பாகுபலி 1, 2’ வெற்றி பின்னர் இப்போது வந்துள்ள ‘சாஹோ’ தோல்வி.

SS Rajamouli movie heroes and their flop movies list

தீபாவளி ரேஸ்: விஜய்யை முந்தும் விஜய்சேதுபதி; கார்த்தி கன்பார்ம்

தீபாவளி ரேஸ்: விஜய்யை முந்தும் விஜய்சேதுபதி; கார்த்தி கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanga Thamizhan may preponed from Diwali releaseஇந்தாண்டு தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே தீபாவளிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதிலிருந்து சங்கத்தமிழன் படம் விலகும் எனத் தெரிகிறது.

அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பகிறது.

சிட்டியில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை இப்போதே பிகில் படமும் கைதி படமும் கைப்பற்றிவிட்டதால் சங்கத்தமிழனுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.

Sanga Thamizhan may preponed from Diwali release

‘வெறித்தனம்’ பாடல்: மீண்டும் ARR மீது வெறுப்பான விஜய் ரசிகர்கள்

‘வெறித்தனம்’ பாடல்: மீண்டும் ARR மீது வெறுப்பான விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans were totally upset with Verithanam song in Bigilவிஜய் நடிப்பில் இதுவரை 62படங்களில் நடித்து விட்டார். அவரது உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தற்போது உருவாகி வரும் பிகில் படத்திற்கும் இவரே இசையமைப்பாளர்.

இந்த நிலையில் சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை ஏஆர். ரஹ்மான் பாடியிருந்தார்.

பெண்களை போற்றும் வகையில் இருந்த இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெறித்தனம் என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லையாம். ஆனால் வெளியில் சொல்ல முடியாமல் சூப்பர்… வெறித்தனம் என வெளியில் சொல்லி வருகின்றனர்.

இதற்கு முன் வெளியான விஜய்யின் சர்கார் படத்திற்கும் ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதில் இடம்பெற்ற சிம்டாக்காரன் என்ற பாடலும் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

மோசமான நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றது. தற்போது இதே நிலைதான் வெறித்தனம் பாடலுக்கும் ஏற்பட்டுள்ளது. நிறைய மீம்ஸ்களை உருவாக்கி கலாய்த்து வருகின்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் நொந்து போய் இருக்கிறார்களாம்.

ஏஜிஎஸ் தயாரித்து வரும் பிகில் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

Vijay fans were totally upset with Verithanam song in Bigil

More Articles
Follows