தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இமான் & பிரபுதேவா இணைந்த ‘பேட்ட ராப்’ பட வெளியீட்டு உரிமையை வாங்கிய நிறுவனம்
பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது.
தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Imman and Prabudeva combo Petta rap updates
———-