என் 43 வருட சினிமா கேரியரில் காலாவுக்கு புரோமோ தேவையில்லை… -ரஜினி

I dont want promote my movies since i am at 43 years in Cinema says Rajiniநாளை மறுநாள் ஜீன் 7ல் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா ரிலீஸ் ஆகவுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்கள் வெளியாகும்போது அவர் அரசியல் குறித்து ஏதாவது பேசுவார். பின்பு ஆஃப் ஆகிவிடுவார். அடுத்த படம் வரும்போது எதாவது சர்ச்சையாக பேசி தன் படத்திற்கு புரோமோ செய்வார் என்ற குற்றச்சாட்டு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் காலா பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பிய போது ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை ரஜினி சந்திக்க சென்றது காலா படத்தின் புரோமோசனுக்கா..? என்றும் சிலர் கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு சிரித்துக் கொண்டே ரஜினி பேசியதாவது…

கடவுள் அருளால், மக்கள் அன்பால் என் ரசிகர்கள் ஆதரவால் இந்த வயசுல என் 43 வருட சினிமா கேரியர்ல என் படங்களுக்கு புரோமோசன் செய்ய வேண்டிய தேவையில்லை.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது நல்லதுதான். பேச்சுவார்த்தையால் எதையும் முடிவுக்கு கொண்டு வரலாம். நிறைய சான்றோர்கள் அதை தான் செய்துள்ளார்கள்.” என்றார்.

I dont want to promote my movies since i am 43 years in Cinema says Rajini

Overall Rating : Not available

Latest Post