Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா

Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Untitled-2தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.

“இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், இந்த பெயரிடப்படாத படம் ‘டார்க் காமெடி த்ரில்லர்’ வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் (அ) ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.

ஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.

சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanthதன் வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்கள் என 3 பேரை குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யா ரஜினி.

அவரது ட்விட்டர் பதிவில்…

”வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 3 ஆண்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினி திருமணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

துப்பாக்கி முனையில் நிஜ ஆக்‌ஷன்; அலட்டிக்காத ஹீரோ தினேஷ்!

துப்பாக்கி முனையில் நிஜ ஆக்‌ஷன்; அலட்டிக்காத ஹீரோ தினேஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dineshநடிகர் தினேஷ் நடிக்கும் “இரண்டாம் உலக்ப்போரின் கடைசி குண்டு “படத்தின் படப்பிடிப்பு சென்னை,மற்றும் புற நகர் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிங்கேஷ், ஜான்விஜய், ஜானிஹரி, வினோத் உள்ளிட்டவர்கள் நடித்துவருகிறார்கள்.

நீலம் புரொடக்சன் பா.இரஞ்சித் தயாரிக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை சண்டைப்பயிற்சியாளர் சாம் , மற்றும் இயக்குனர் அதியன் ஆதிரை சென்னை புற நகர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் எடுத்துகொண்டிருந்தன்ர்.

நாயகன் தினேஷ் வேகமாக செல்லும் லாரியில் தொங்கிக்கொண்டு சண்டைபோடும் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தனர் குழுவினர்.

கேமரா லாரிக்குள் இருந்ததால் ரோட்டில் செல்வோருக்கு நிஜமாக ஏதோ லாரியில் நடக்கிறது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கிறது.

அந்த நேரத்தில் அந்த வழியே வந்த ஸ்பெஷல் கமாண்டோ படை வீரர்கள் நிஜமாகவே ஹேவேஸில் லாரியில் இரவு நேரத்தில் ஏதோ நடக்கிறது என்று லாரியை சுத்தி வளைத்துப் பிடித்தனர்.

இதை அறிந்திராத நாயகன் ‘ நமக்குத்தெரியாமல் இது என்ன புதுசா கமாண்டோ வீரர்கள் எல்லாம் சீன்ல வராங்களே’ இது சீன்லயே இல்லியே என்று அதிர்ச்சியடையாமல் சுற்றி வளைத்த போலீசார் வைத்திருந்த துப்பாக்கிகளை பார்த்து இது என்ன ஒரிஜினல் மாதிரியே இருக்கு ? என்று கேட்க …. நிஜ போலீசார் துப்பாக்கியை தினேஷ் மீது குறிவைக்க, இயக்குனர் சூட்டிங், சூட்டிங், என்று சத்தம்போட அதற்க்குபிறகே தினேஷ் அதிர்சியடைந்திருக்கிறார்.

நெருங்கி வந்த வீரர்கள் தினேஷ் முகத்தை கவனித்தபிறகே நிஜமான சூட்டிங் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

இதனால் சாலையில் லேசாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிளம்பும்போது நிஜமாக இருக்கிறது படப்பிடிப்பு வாழ்த்துக்கள் தினேஷ் என்று பாராட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள் கமாண்டோ படைவீரர்கள்.

கடைசிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படப்பிடிப்பு காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கதிர் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் இது தான்

கதிர் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் இது தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kathirஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “

இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி

இசை – அம்ரிஷ்

பாடல்கள் – கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ

எடிட்டிங் – பிரசன்னா.ஜி.கே

கலை – ராஜா மோகன்

ஸ்டன்ட் – விக்கி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நஞ்சுண்டான்

இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்

தான் இந்த படம். விறு விறுப்பான திரைக்கதை கொண்ட படம்…ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த படம். இந்த படத்தைப் பார்த்த மைல்ஸ்டோன் மூவிஸ் G.டில்லிபாபு சார் படத்தை ரிலீஸ் செய்கிறார். தரமான படங்களான வெற்றி படங்களான மரகத நாணயம் ராட்சசன் என பார்த்து பார்த்து தயாரிக்கும் டில்லிபாபு சத்ரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். குற்றவாளிகளாக. யார் கண்ணுக்கும் தெறியாமல் வாழும் வில்லன்கள் ஐந்து பேரையும் துணிச்சல் மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முந் நிறுத்துகிறார் என்பது தான் சத்ரு. 24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம். படம் மார்ச் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

Breaking படைப்பு சுதந்திரம் கருதி வர்மா-விலிருந்து விலகல்; பாலா அறிக்கை

Breaking படைப்பு சுதந்திரம் கருதி வர்மா-விலிருந்து விலகல்; பாலா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala statement regarding Varmaa movie dropped issueவர்மா படம் குறித்து சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் டைரக்டர் பாலா. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது….

பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் கவனத்திற்கு:

வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…

துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.” என தெரிவித்துள்ளார் பாலா.

Director Bala statement regarding Varmaa movie dropped issue

bala varma statement

பைரசியை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மோடிக்கு விஷால் நன்றி

பைரசியை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மோடிக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal thanks Modi Govt for Section 6A of the cinematograph actபைரஸியால் அழிந்துக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவையும், பிராந்திய மொழிகளில் வர்த்தக ரீதியிலும், தரமான கலை படைப்பிலும் முதன்மையாக திகழும் தமிழ் திரைப்பட துறையையும் காப்பாற்ற ஆளும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள Section 6A of the cinemotograph act சட்டத்தை ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட துறை சார்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாகவும் பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக விஷால் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்

மேலும் single winow systemமாக திரைத்துறைக்கு சாதகமான ஒரு பிரிவை ஏற்படுத்தி திரைத் துறை பலன் அடைவதற்கான வழி அமைத்ததற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

28% ஆக இருந்த திரைத்துறையினருக்கான ஜிஎஸ்டி வரியை 18% சதவிகிதமாக குறைக்க உதவி செய்த, மத்திய நிதித்துறை இணையமைச்சர் மாண்புமிகு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்களது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Vishal thanks Modi Govt for Section 6A of the cinematograph act

More Articles
Follows