JUST IN ‘பத்து தல’ படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்கும்.. ‘நாட்டுக்கூத்து’ விட சிம்பு குத்து சூப்பர்

JUST IN ‘பத்து தல’ படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்கும்.. ‘நாட்டுக்கூத்து’ விட சிம்பு குத்து சூப்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் கெளதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவினை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அரங்கத்திற்குள் நுழைந்த சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அப்போது ரசிகர்கள் மைக்கில் பேசும்போது..

ஆஸ்கார் அவார்டு RRR பட பாடலுக்கு வழங்கப்பட்டது. இன்னும் 10 நாட்கள் காத்திருந்தால் பத்து தல படத்திற்கு கிடைத்திருக்கும் என்றார்.

மேலும் நாட்டுக் கூத்து பாடலை விட சிம்பு குத்திய குத்து சூப்பர் என்று ம் பேசினார்.

இதனை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

@priya_Bshankar Elegant Entry😍 at #PathuThalaAudioLaunch
#Atman @SilambarasanTR_ & @Gautham_Karthik ⭐er #PathuThala Grand Audio Launch streaming LIVE 👉🏼 https://t.co/NqFlG7vegg

An @arrahman musical🎵
🎬 @nameis_krishna https://t.co/SDEyHkgiuK

Host says simbu would have been bagged oscar

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர்.; இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினி

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர்.; இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை நேரில் காண வருமாறு நடிகர் ரஜினிகாந்த்தை மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைத்து இருந்தார்.

என்னுடைய அழைப்பை ஏற்று ரஜினி இங்கு வந்தது மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி வான்கடே மைதானத்திற்கு வந்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்” எனவும் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து அமோல் கலேவுடன் இணைந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இன்று இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார் ரஜினி.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Star Rainikanth met indian cricketers

பாரதிராஜாவை சந்தித்த மணி ரத்னம்! ஓ இதுதான் விஷயமா?

பாரதிராஜாவை சந்தித்த மணி ரத்னம்! ஓ இதுதான் விஷயமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிஎஸ்-2 இசை விழாவிலும் ரஜினி, கமல் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜாவை மணிரத்னம் இன்று சந்தித்து பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mani Ratnam meets Bharathiraja for this reason!

JUST IN ரஜினி என்ன சிறந்த நடிகரா.? நான் தாடி வளர்க்க அதான் காரணம்.. – அமீர்

JUST IN ரஜினி என்ன சிறந்த நடிகரா.? நான் தாடி வளர்க்க அதான் காரணம்.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், டேனியல், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோ நடித்துள்ள இணைய தொடர் ‘செங்களம்’.

ZEE5 தயாரித்துள்ள இந்த இணைய தொடருக்கு தரன் இசையமைத்துள்ளார்.

வருகிற மார்ச் 24ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்தப் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் அமீர் கலந்து கொண்டார். கலையரசன் நடித்துள்ள கேரக்டரில் முன்பு அமீர் நடிப்பதாக இருந்தது எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார் எஸ் ஆர் பிரபாகரன்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமீர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

“தற்போது திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகள் வியாபாரம் ஆகிவிட்டது.

இந்தியாவில் சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் ஒருவர் இருக்கிறாரா.? ஆனால் அவருக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை.

‘தேவர் மகன்’ படத்திற்கு கூட ஒரு சிறப்பு விருது கூட நம் தமிழர்களின் வற்புறுத்தலால் மட்டுமே வழங்கப்பட்டது.

2007இல் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் வெளியானது. அப்போது தமிழக அரசால் அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர் சிறந்த நடிகரா.? அந்த ஆண்டில் வேறு சிறந்த நடிகர் இல்லையா.?

‘சிவாஜி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாரா.? என கேள்வி கேட்டார். அவர் சிறந்த என்டர்டெயினர்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த்.”
என்றார்.

அதன் பின்னர் அரசியல் குறித்து கேட்கப்பட்ட போது நான் சாகும் வரை அரசியல் பற்றி பேசுவேன்” என்றார்.

வடசென்னை 2 படம் பற்றி வெற்றிமாறன் தான் தெரிவிக்க வேண்டும்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்கிறேன்.. ஆனால் அந்த படம் பேசப்பட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

வெற்றிமாறன் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் அதை தொடர முடியவில்லை.

அந்த படத்திற்கு தான் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பேசினார் அமீர்.

செங்களம்

Rajinikanth is not best actor says Director Ameer

சிவகார்த்திகேயன் – அதிதி இணைந்த ‘மாவீரன்’ அப்டேட்

சிவகார்த்திகேயன் – அதிதி இணைந்த ‘மாவீரன்’ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

எண்ணூரில் தொடர்ந்து 20 நாட்களாக நடைபெற படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

‘மாவீரன்’ படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தற்போது பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இன்று மதியம் தொடங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மாவீரன்

Sivakarthikeyan shoots started for ‘Maaveran’ final schedule

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவினுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட நடிகை

நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கவினுக்கு ஜோடியாகும் சூர்யா – சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாடா’ படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நாயகன் கவின்.

இளம் வயதிலேயே ஒரு சிறுவனுக்கு தந்தையாக நடித்து ஹீரோயிசத்தை உடைத்தெறிந்தார்.

எனவே தற்போது பல வாய்ப்புகள் கவின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறாராம் கவின்.

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.

கவினுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் & எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் பிரியங்கா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா மோகன்

Priyanka mohan is paired with Kavin’s next film

More Articles
Follows