ஒரே ஒரு இந்திய நடிகருடன் இணைய ஆசைப்படும் Guardians of the Galaxy பட டைரக்டர்

ஒரே ஒரு இந்திய நடிகருடன் இணைய ஆசைப்படும் Guardians of the Galaxy பட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது.

படம் மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இது MCU உடன் இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் கடைசி பயணம். ஆனால், இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் மறக்கமுடியாத பயணத்தை உருவாக்கியுள்ளார்.

இந்திய ஊடகங்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜேம்ஸ் கன் நம் இந்திய நடிகர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.

கார்டியன்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு இந்திய நடிகரை அறிமுகப்படுத்த முடிந்தால் அது யாராக இருக்கும் என்று இயக்குநரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த இயக்குநர், ‘RRR’ படத்தில் இருந்து, ஜூனியர் என்டிஆர் உடன் வேலை செய்ய தனது விருப்பத்தை தெரிவித்தார்.

மேலும், அவரைப் பற்றி கூறும்போது, ‘அந்தப் படத்தில் அவர் அற்புதமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் இருந்தார்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் கன்னின் இந்த அறிக்கை, உலக அளவில் இந்திய சினிமா பிரபலமடைந்து வருவதற்கும், சர்வதேச பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்கும் சான்றாகும்.

Guardians of the galaxy director wants to join with junior NTR

BREAKING NEWS : ‘கேப்டன் மில்லர்’ சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்கியது

BREAKING NEWS : ‘கேப்டன் மில்லர்’ சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பபை அப்பகுதியில் நடத்த தடை விதித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்

dhanush’s captain miller shoot resumes with proper permission

தனுஷ் படத்தில் இணையும் பிரபல அமெரிக்க நடிகர்

தனுஷ் படத்தில் இணையும் பிரபல அமெரிக்க நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் (Edward Sonnenblick) இணைந்துள்ளார்.

இவர் பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் இராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edward Sonnenblick joins dhanush’s captain miller film

திருமண நாளை கொண்டாடும் விஜய்யின் பெற்றோர்.; ஆனால் எஸ்ஏசி மிஸ்ஸிங்

திருமண நாளை கொண்டாடும் விஜய்யின் பெற்றோர்.; ஆனால் எஸ்ஏசி மிஸ்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.

இதுவரை 70 க்கு மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

1980-களில் ரஜினிகாந்த் விஜயகாந்த் ஆகிய முன்னணி நட்சத்திரங்களை இவர் இயக்கி இருந்தார்.

1990-களில் இவரது மகன் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். விஜய்யின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியவர் எஸ் ஏ சந்திரசேகர்.

தற்போது விஜய் சினிமா உலகில் 30 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் மகன் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்கள் இருவரும் சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் நடிகர் விஜய்யும் நீலாங்கரையில் புதிய வீடு கட்டி அங்கே குடியேறிவிட்டார்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் 80 வயதை பூர்த்தி செய்த நிலையில் அவரின் சதாபிஷேக விழா திருக்கடையூரில் நடைபெற்றது. அப்போது கூட நடிகர் விஜய் தன்னுடைய பெற்றோரின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை என பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 25ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அவரது மனைவி ஷோபா இருவரும் தங்களது 50வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் அவரது அம்மா சோஷாவும் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

திருமண நாளை கொண்டாடும் எஸ் ஏ சந்திரசேகர் இந்த போட்டோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பெற்றோரை மதிக்க வேண்டும் தந்தை சொல்லை மதிக்க வேண்டும் என பன்ச் டயலாக் பேசும் விஜய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தையுடன் மோதிக் கொண்டிருப்பது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Vijay at his Parents 50th wedding Anniversary

நெல்லை சிவா & தீப்பெட்டி கணேசன் நடித்த கடைசி பட ரிலீஸ் அப்டேட்

நெல்லை சிவா & தீப்பெட்டி கணேசன் நடித்த கடைசி பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VDS சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’.

அறிமுக இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனிக்கிறார்.

சண்டைக் காட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.

எங்கேயும் நடந்திருக்க முடியாத கேள்விப்பட்டிராத கதையம்சத்துடன் குடும்பப்பாங்கான அதேசமயம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை கில்ட் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அவர்கள் வெளியிட்டார்.

வரும் மே 5 முதல் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜாகுவார் தங்கம் வெளியிட்ட #உருச்சிதை டிரைலர்

Director #Devaraj
DOP #Magibalan
Music #JAnand
#May5Release https://t.co/0sq9ASehbN

Uruchithai will release from May 5th

.

விஜய்யின் அரசியல் திராவிடமா.? தேசியமா.? பாராளுமன்ற தேர்தலை குறிவைக்கும் தளபதி

விஜய்யின் அரசியல் திராவிடமா.? தேசியமா.? பாராளுமன்ற தேர்தலை குறிவைக்கும் தளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் என்றுமே நெருங்கிய பந்தம் உண்டு.

அண்ணா, கருணாநிதி, எம்ஜி ஆர் ஜெயலலிதா காலம் தொட்டு விஜயகாந்த் கமல்ஹாசன் சரத்குமார் உள்ளிட்ட பல திரையுலக கலைஞர்களும் அரசியலில் பயணித்து வருகின்றனர்.

தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் கொரோனாவை காரணம் காட்டி பின் வாங்கினார்.

இந்த நிலையில் தற்போது அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் விஜய் மெல்ல மெல்லமாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்களை களம் இறக்கி உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றியும் பெற்றார்.

விரைவில் தீவிர அரசியலில் விஜய் இறங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அடுத்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இதனை விஜய் குறி வைப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் உள்ளது. இந்த 40 தொகுதிகளில் விஜய் 3 – 5 தொகுதிகளை குறி வைப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிட்டு தன்னுடைய அரசியல் பலத்தை அவர் பரிசோதனை செய்ய முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது்

விஜய் முன்னெடுக்கும் அரசியல் தேசிய அரசியலா? திராவிட அரசியலா? என்ற விவாதத்தில் தமிழக மக்களுக்கு என்றுமே பழக்கப்பட்டு பழகிப்போன திராவிட அரசியலை தான் விஜய் முன்னெடுக்க உள்ளார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்…

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையானதாக இருக்கும் எனவும் விஜய் என்னை ஆதரிக்க வேண்டும் எனவும் சமீபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vijays’ political entry target MP election

More Articles
Follows