தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான வசந்தகுமார் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கோவிட் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்…
குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்த குமார். இந்த நிலையில் தனது சித்தப்பாவின் மறைவிற்கு தமிழிசை சௌந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
சித்தப்பா !
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது…
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்.
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது…
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் …
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…
ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்.
என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Governor Tamilisai condolence for MP Vasanthakumar MP demise






