தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாசி வீதி இட்லியும் மட்டன் சுக்காவுமாக ‘உயிர் தமிழுக்கு’.; பாராட்டு மழையில் படக்குழு
ஆதம்பாவா இயக்கி தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இதில் அமீர்,சாந்தினி ஸ்ரீதரன் இமான் அண்ணாச்சி குட்டி புலி சரவணசக்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.. இந்த படம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்துள்ளதாவது..
அமீர் நடித்த
“உயிர் தமிழுக்கு“ ப்ரிவீவ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
நான் யோகி, வடசென்னை ராஜன் மனநிலையில் உள்ளே அமர்ந்திருந்தேன்.
ஆனால் அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே அந்த இமேஜை உடைத்து சிரிக்க வைத்து காதல்,காமெடி, ஆக்ஷன், அரசியல் பகடியென
படம் முழுக்க மாஸ் எண்டர்டைனராக ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் அமீர்
சமீபத்தில் நடிகரான இயக்குநர்கள் கதை நாயகனாகவே திரையில் தோன்றினார்கள் அமீர் தொழில்முறை கதாநாயகனாகவே அதகளப்படுத்தியிருக்கிறார்.
படம் முழுவதும் அவருடைய நடிப்பில் பருத்திவீரன் கார்த்தியின் உடல் மொழியும் குறும்பும் அச்சு அசலாக தெரிகிறதென நினைத்தேன் சற்று தாமதமாகத்தான் உணர்ந்தேன் அந்த பருத்திவீரனே இவர்தானென்று எதார்த்தமான,
கலகலப்பான, நேர்த்தியான திரைப்படமாக இருந்தது ‘உயிர் தமிழுக்கு “ இப்படத்தின்
மூலம் திறமையான இயக்குநர் அமீர் தன்னை தவிர்க்கமுடியாத கமர்சியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தியிருக்கிறார்.
இத்திரைப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் சிரிப்பும், கும்மாளமாகவும் கொண்டாடுவதைக்கான ஆவலோடு இருக்கிறேன்.
அறிமுக இயக்குநர் ஆதம் பாவாவிற்கும்,அமீர் சாருக்கும் வாழ்த்துக்கள் 💐
நாராயணன்
உதவி இயக்குநர்
———-
உயிர் தமிழுக்கு
முதல் பிரதி பார்த்தேன்
அருமையான மாஸ்
கமர்சியல் படம்.
படம் பக்கா theatre mood ல்உள்ளது அமீரின் உடல் மொழி மற்றும் வாய் மொழி இரண்டும் ஒரு பக்கா கம்ப்ளீட் கமர்சியல் ஹீரோவாக முன்னிருத்துகிறது காதல், சண்டை காட்சிகளிலும் அவர் நடிப்பில் ஒரு மாஸ் இருந்தது அமீர் அண்னனுக்கு இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வை நானறிவேன் அது படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
என்னை அறியாமல் பல காட்சிகளில் சிரித்து ரசிக்க முடிந்தது ஒவ்வொரு காட்சியிலும் அண்ணனின் நடிப்பு அசால்ட் மதுரை ரகம் வடசென்னை ராஜனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான எம் ஜி ஆர் பாண்டியனை நிச்சயம் ரசிப்பார்கள் படம் பிரம்மாண்டமாக ரிச்னஸ்ஸாக இருந்தது.
இமான் அண்ணாச்சி + அமீர் . சத்யராஜ்+ கவுண்டமணி கூட்டனியை பல இடங்களில் நினைவுபடுத்துவது.. ஆரோக்ய காமெடி கமர்ஷியல் கலாட்டா இவை அனைத்தும் ஒரு கமர்சியல் படஆடியன்ஸுக்கு புல் மீல்ஸ் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.
அமீர் அண்ணனுக்கும், இயக்கி தயாரித்த ஆதம் பாவாவுக்கும், வெளியிடும்
நண்பர் சுரேஷ் காமாட்சிக்கும்
உயிர் தமிழுக்கு முக்கியமான படம் வாழ்துக்கள் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..
அன்புடன் அஸ்லம்
——-
ஒரு மதிய வேளை, திடீரென அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் முன்னோட்ட காட்சி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
மதுரை, தேனி பின்னணியில் வரும் படங்கள் என்றாலே ஒரு தனி குஷி தான். அதுவும் அரிவாள்களைத் தவிர்த்து.. மதுரை வட்டாரத்தின் இன்னொரு பரிமாணமான நட்பு, லந்து, அலப்பரை, காதல்,அரசியல் என மாசி வீதி இட்லியும், மட்டன் சுக்காவுமாக ஒரு ட்ரீட் கிடைத்தால்.. டபுள் குஷி தானே.!!
சமீபத்தில் திரையரங்குகளுக்குள் நுழைந்தாலே.. இடைவிடாது சுடும் எந்திரத் துப்பாக்கிகள், திடீரென துண்டிக்கப்பட்டு உருளும் தலைகள், திரையெங்கும் நிறையும் ரத்த சகதிகள், வெடித்து சிதறும் கார்கள்.. இவைதான் நம் கண்களிலும், காதுகளிலும் ரீங்காரமிடுகின்றன. கண்ணையும் காதையும் மூடினாலும் இந்த ரீங்காரங்கள் நிற்பதில்லை.
‘உயிர் தமிழுக்கும்’ அப்படியான ரத்தம் தெறிக்கும் அரசியல், கேங்கஸ்ட்டர் படமாகத் தான் இருக்குமென்ற எதிர்பார்ப்போடு அரங்கில் உட்கார்ந்தேன்.
ஆனால், ரத்த படலத்தை முற்றிலுமாகத் தவிர்த்து.. ஒரு அழகான காதல் கதையை அரசியல் பின்னணியில் நகைச்சுவையும், கொண்டாட்டமும் நிறைத்து சொல்லியிருக்கிறார்கள்.
மதுரை பகுதிகளின் ஆளுமைகளுக்கு ஒரு அலட்சியமும், திமிரும், லந்தும் கலந்த வசீகரமான மேனரிசம் இருக்கும். அமீரிடம் இந்த மேனரிசம் ஒரு மாஸ் கதாநாயகனுக்கான கரிஷ்மாவாக அழகாக விளையாடுகிறது.
சில காட்சிகள் பார்த்து பழகிய காட்சிகள் என்றாலும் அதை அமீர் மதுரை அலப்பரையோடு நிகழ்த்தும் போது.. நமக்கு ஒரு புது சுவாரஸ்யம் கிடைக்கவே செய்கிறது.
சமகால வாழ்க்கைச் சூழலில்.. சிரித்து கொண்டாடி மனதை லேசாக்கும் ஒரு படம் கொடுத்ததற்கு ‘உயிர் தமிழுக்கு’ குழுவினருக்கு மனநிறைந்த பாராட்டுக்கள்.
எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ஆதம் பாவா தமிழ் திரையுலகிற்கு ஒரு நல்வரவு. வித்யாசாகரின் மறுவரவு.. படம் நமக்கு கொடுக்கும் இன்னொரு ட்ரீட்.
படத்தை தன் தோளில் சுமக்க வல்ல ஒரு கரிஸ்மேட்டிக் ஹீரோ இந்தப் படத்தின் மூலம் அவதரித்துள்ளார் என்றால் அது மிகையல்ல.!
தமிழ் வெல்லும் 💐💐
அருண்
உதவி இயக்குநர்
Good response for Uyir Tamizhuku from all