நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும்.; ‘மாஸ்டர்’ மகேந்திரனின் அர்த்தமுள்ள பேச்சு

நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும்.; ‘மாஸ்டர்’ மகேந்திரனின் அர்த்தமுள்ள பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார்.

இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது…

நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார்.

இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசியதாவது…

நம்மை நம்பி ஹைதராபாத்திலிருந்து இங்கு வந்து தயாரித்திருக்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.

நல்ல கண்டெண்ட் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் உழைத்துள்ளோம். இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன்.

என்னை நம்பி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் மணிகாந்துக்கும் எனக்கும் சண்டை வந்ததே இல்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது.

என்னை நம்பி தமிழுக்கு வந்ததாக சொன்னார், நான் எங்கள் டெக்னீஷியன்களை நம்பலாம் என்றேன். படத்தை அழகாக எடுத்துள்ளார். ரோபோ, வினோத் எனக்காக நடித்து கொடுத்தார்கள்.

நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். ஷ்ரத்தா தாஸ் இந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகை. மிகச்சிறந்த நடிகை கடின உழைப்பாளி தமிழில் பெரிய வெற்றி பெறுவார்.

நீங்கள் தரும் ஆதரவில் தான் என் திரைப்பயணம் இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி.

இயக்குநர் மணிகாந்த் தல்லகுடி பேசியதாவது…

இந்தப்படம் எனது முதல் தமிழ் படம். இரண்டு மொழிகளிலும் எடுத்துள்ளோம். சென்னையில் தான் 70 சதவீதம் ஷீட் செய்தோம். ரோபோ சங்கர், வினோத் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார்கள். மகேந்திரன் மிகப்பெரிய ஒத்துழைப்பை தந்தார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா தாஸ் அழகான நடிப்பை தந்துள்ளார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்.

நடிகை ஷ்ரத்தா தாஸ் பேசியதாவது…

நான் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி என 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். நான் தமிழில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சி.

இப்படத்தில் சைக்காலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன். நான் சைக்காலஜி டிகிரி முடித்துள்ளேன். அதனால் நடிப்பு எளிதாக இருந்தது. கிளாமர் குறைவாக கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. மகேந்திரன் போன்ற அனுபவமிக்க நடிகருடன் நடித்தது மகிழ்ச்சி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

இந்த திரைப்படத்தில் நான் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். தம்பி மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தில் அற்புதமான நடிப்பை தந்தார். இந்தபடத்திலும் நன்றாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் மிக விரைவில் இயக்குநராக பரிணாமம் எடுக்க போகிறேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் வினோத் பேசியதாவது…

இந்தப்படம் நண்பர் மூலம் ஷூட்டிங் பார்க்க போனேன் அங்கு அவர்கள் வேலை பார்த்தது பிடித்திருந்தது. மணி சாரிடம் நானே வாய்ப்பு கேட்டு இந்தப்படத்தில் நடித்தேன். ஒரு தெலுங்கு படத்தில் வேலை செய்தது மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னை மிக நன்றாக பார்த்து கொண்டார்கள். ரோபோ சங்கர் அண்ணாவுடன் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.

அர்த்தம்

Good Content will win says Master Mahendran at Artham meet

Cast : Master Mahendran, Shraddha Das, Sahithi Avancha, Nandha Durairaj, Ajay, Amani, Sahithi Avancha Sai Dheena, Robo Shankar, Rowdy Rohini, ETV Prabhakar, Lobo
Presented By:- Rithvik Vetsha
Director:- Manikanth Thallaguti
Producer:- Radhika Srinivas (Minerva Piktures)
Co.Producer :- Saideep Chatla
Music:- Harshavardhan Rameshwar
DOP:- Pavan Chenna
Colorist: Shiva Kumar BVR
Editor:- Shadow
Art:- C.S. Saimani
Lyrics:- Vivek, Muthamil, Rakendu Mouli
Choreographer:- Suchitra Chandrabose
Stunt:- Anji, Nandu Venkat Daimond
Associate Producers: Pavan, Venkata Ramesh Dadi
Tamil PRO:- Sathish (AIM)

Teaser – https://youtu.be/PXqiozAAELg

ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷன் – தமன்னா.; ஓ இதான் மேட்டரா?

ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷன் – தமன்னா.; ஓ இதான் மேட்டரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது.

இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த தொடரின் வெளியீட்டிற்கு முன்னர் பிரைம் வீடியோ, மும்பையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் எனப்படும் பிரத்யேக காட்சியை திரையிட்டது.

இந்த நிகழ்வில் தொடரி நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென்,மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த்,தைரோ முஹாப்ஃதீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர், தயாரிப்பாளர் ஜே டி பெய்ன் உடன் கலந்து கொண்டனர்.

இந்த பிரத்யேக பிரீமியர் திரையிடல், திரை உலகினரை கவர்ந்தது. ஏனெனில் நடிகர்கள் மற்றும் பட குழுவினர், சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன் மும்பை திரையுலக பாணியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, அரங்கத்தினுள் நுழைந்தனர்.

இதில் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி, பாணி ஜே, ரசிகா துக்கல், சயானி குப்தா, மான்வி சுக்ரூ, ஜிம் ஸர்ப் என திரை உலகில் பிரபலமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

அரங்கம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களின் விண்ணை முட்டும் கரவொலியுடன், இந்த தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெய்னின் முன்னுரையுடன் பிரீமியர் திரையிடல் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்சிகோ சிட்டி மற்றும் லண்டனில் நடைபெற்ற இந்த தொடருககான பிரத்யேக பிரீமியர்களை தொடர்ந்து உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் மும்பையில் நடைபெற்றது.

அமேசான் ஒரிஜினல் தொடரான ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ செப்டம்பர் இரண்டாம் தேதியன்று இரண்டு அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

அன்று முதல் வாரந்தோறும் புதிய அத்தியாயங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரு நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இரவு ‘கோப்ரா’ படக்குழுவினருடன் விக்ரமும் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விக்ரம் பேசும்போது, ”3 வருடங்களுக்குப் பிறகு என் படம் தியேட்டரில் வெளியாகிறது.

நானும் துருவ்வும் முதல் முறையாக இணைந்த ‘மஹான்’ படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் ரிலீசானது வருத்தம் தான்.

தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து என் படங்கள் தியேட்டரில் வெளியாக இருப்பதில் மகிழ்ச்சி.

‘கோப்ரா’ படத்தின் கதை வித்தியாசமானது. கதைக்குத் தேவைப்பட்டதால் நிறைய கெட்டப் போடப்பட்டது. எத்தனை கெட்அப் போட்டேன் என்று எனக்கே நினைவில்லை.

என்னுடைய, 62-வது படத்தில் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து பணிபுரிய உள்ளேன்” என பேசினார் விக்ரம்.

Actor Vikram talks about Cobra and Mahaan

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

49 வயதானவர் நடிகை நுபுர் அலங்கர். இவர் கடந்த 27 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்த வருகிறார். எனவே பாலிவுட் சினிமாவில் இவர் பிரபலம்.

ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சக்திமான் உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய கணவர் ஸ்ரீவத்சவாவும் நடிகர் தான்.

இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்த நடிகை.

“எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்து வந்தது. இப்போதுதான் முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

தேவையானவர்களுக்கு உதவுகிறேன். நடித்துக் கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றி எல்லாம் கவலைப்பட்டேன். இன்று அந்த பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.

இது என் விருப்பம் இதுதான். இனி என் வாழ்க்கையில் சினிமாவில் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

Nupur Alankar lefts Cinema industry and she took sanyas

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில்.. தனக்குத் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டால் தன் தந்தை தனிமையில் இருப்பார். எனவே அவரை கவனித்துக் கொள்ள தன் தந்தைக்குத் துணையாக ஒரு பெண் வேண்டும் என எண்ணி “தந்தைக்கு மணம் முடிக்க பெண் தேடுவார்.

அப்போதுதான் நயன்தாராவை ரஜினிக்கு மணம் முடிக்க யோகி பாபு உடன் இணைந்து திட்டம் போடுவார்.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் ஒரு விபத்தில் இறந்துவிடுவார் நிவேதா தாமஸ்.

இது போன்ற ஒரு சம்பவம் தற்போது ஒருவரின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.

கணவரை இழந்த தன் தாய்க்கு (59) மறுமணம் செய்து வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த 2 மகள்கள்.

கேரளா திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த ஆண்டு உயிர் இழந்தார்.

இவர்களுக்கு ப்ரீத்தி, பிரசீதா என இருமகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தன் தாய்.. அவரின் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்து உணர்ந்துள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப்பின் தன் தாய் ரதிமேனனை மறுமணத்திற்கு சம்மதிக்கவும் வைத்துள்ளனர்.

மனைவியை இழந்து வாழ்ந்து வரும் 63 வயதான திவாகரன் என்பவரை பார்த்து தங்கள் தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவரும் சம்மதிக்கவே இவர்களின் திருமணத்தை இரண்டு மகள்களும் நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே கடந்த 2019ல் விவாகரத்து ஆன தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார் 23 வயதான கோகுல் ஸ்ரீதர் என்ற ஒரு மகன்.

Darbar movie scene happened in real life at Kerala

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் கூறிய அட்வைஸ் ஒன்று இன்று வைரலாகி வருகிறது.

அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில்…, ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும்.

காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.

அதீத சத்தம் கேட்பது.. தலையில் காயங்கள் ஏற்படுவது.. காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை. என சில காரணங்களை குறிப்பிட்டு, ‘உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – நிபந்தனையற்ற அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் இந்த சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Advises Fans to Take Care of Ears

More Articles
Follows