ஆன்லைன் முன்பதிவில் புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனரின் புதிய முயற்சி

ஆன்லைன் முன்பதிவில் புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனரின் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

goko makoகோகோ மாக்கோ, இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப்படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக Crazy Musical Romantic Road Trip Comedy இருக்கும் என்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கவில்லை என்கிற போதிலும், எழுத்து -இயக்கத்துடன் இசை, இசை சேர்ப்பு, தயாரிப்பு ஒருங்கிணைப்பு, நிறச்சேர்ப்பு ஆகிய பணிகளையும் செய்திருக்கிறார்.

நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார்.

இவர் துப்பறிவாளன், இரும்புத்திரை ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக புதுமுகம் தனுஷாவுடன் தரமணி படத்தில் ஆண்ட் ரியாவுடன் நடித்த சாரா ஜார்ஜும் நடிக்க இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்ய, வினோத் ஸ்ரீதர் எடிட்டிங்கைக் கையாண்டிருக்கிறார்.

இன்ஃபோ புளுட்டோ மீடியா வொர்க்ஸ் InfoPluto Media Works தயாரிக்க, ரூஃப் ஸ்டுடியோஸில் Roof Studios படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நடந்திருக்கின்றன.

சென்னை, நுங்கம்பாக்கம் பிரிவியூ திரையரங்கில் இந்தப்படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், அருகிலேயே தனது அலுவலகத்தில் இருந்த கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தியாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு, எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்…” என்கிற இயக்குநர் அருண்காந்த் உள்ளிட்ட படத்தில் பங்குபெற்ற அனைவரும் கோயமுத்தூர்க்காரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.,

கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் கோகோ மாக்கோ என்று புதுபெயரிட்டிருக்கிறார்கள் போலும்.

கோக்கோ மாக்கோ படத்திற்கான வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சிக்கும் அது நடக்கும் இடத்திற்கும் அந்தக் காட்சியில் பங்குபெறும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் எழுதியிருக்கிறார் இயக்குநர் அருண்காந்த்.

12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும், பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் இருக்கிறது என்கிறார் இயக்குநர்.

“புளூட்டோ என்கிற ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் சாம்ஸின் பார்வையில் இந்தக்கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறோம் என்றார் கோகோ மாக்கோ ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர்.

இந்தப்படத்தின் எடிட்டராக மட்டுமல்ல, இணைதயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணிபுரிந்திருக்கும் வினோத், ” படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறோம். எடிட்டிங்கில் அதிகம் தூக்கியெறியப்படாத படம் அதாவது zero wastage film இதுவாகத் தான் இருக்கும்..” என்கிறார்

“எனது படங்களில் முதன்முறையாக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசி நடித்திருக்கிறேன். ரசிகர்களுக்கு நிச்சயமாக புது அனுபவமாக இருக்கும்… செய்யிற வேலையைத் திருப்தியாகச் செய்யவேண்டும் என்று துடிக்கும் இளைஞர் பட்டாளத்தில் நானும் இருப்பதே பெருமையாக நினைக்கிறேன்..” என்றார் நகைச்சுவை நடிகர் சாம்ஸ்

முற்றிலும் புதியவர்களை வைத்து, புதியவர்களால் உருவாக்கப்பட்ட கோகோ மாக்கோவை விநியோகஸ்தர்களோ திரையரங்கு உரிமையாளர்களோ முன்வராத நிலையில், படத்தின் இயக்குநர் டிக்கெட் முன்பதிவுக்கான பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திருக்கிறார். www.arunkanth.in என்கிற இணையத்தில் சென்று, உங்களது அருகாமையிலுள்ள திரையரங்கில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

பிப்ரவரி 14, 2019 படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும்.

அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100ரூ திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு. நேற்று அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவினரைப் பாராட்டிப் பேசிய கே.பாக்யராஜ், ” ஒவ்வொருவரும் படத்தை மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். எனது படங்களிலும் படப்பிடிப்புத்தளத்தில் தான் வசனம் எழுதுவேன் என்றாலும், கதை உருவான போதே வசனங்களை மனதில் ஓட்டிப்பார்த்துவிடுவேன்.

நானும் யாரையுமே தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன். நீங்களாவது திரை ஆக்கம் தொடர்பாக நிறையக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்..

இன்று யூடியூபிலேயே சினிமா கற்றுக் கொள்ளலாம். இன்றைய பெரிய நாயகர்கள் சம்பளம் வாங்காமல், பங்குதாரர்களாக இணைந்தால் சுலபமாகப் படம் எடுத்துவிடலாம். வணிகரீதியில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், டிக்கெட் முன்பதிவு சம்பந்தமான இளைஞர்களின் இந்தப் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.

பெயர் கூட தெரியாத காதலனை தேடி அலையும் கர்ப்பிணி பெண்

பெயர் கூட தெரியாத காதலனை தேடி அலையும் கர்ப்பிணி பெண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amaiya movie stillsபெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’..

நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு S.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குனர் நிகில் வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

முகவரி, பெயர் என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு. அமையா தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்து பார்க்கும் விதமாக படம் துவங்குகிறது.

“தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப்பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும்.

அழகான லொக்கேஷன்களும் பழங்குடியினரின் கலாச்சராம் எல்லாமுமாக சேர்ந்து இந்த ‘அமையா ’ மிகப்பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும்” என்கிறார் இயக்குனர் நிகில் வி.கமல்.

சீதக்காதி படம் 25வது படமாக அமைந்தது எப்படி..? விஜய்சேதுபதி விளக்கம்

சீதக்காதி படம் 25வது படமாக அமைந்தது எப்படி..? விஜய்சேதுபதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seethakaathiபேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி.

இதில் 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இது விஜய் சேதுபதியின் 25வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சீதக்காதி படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐஓபி ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சீதக்காதி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம்.

இந்த படம் வாழ்க்கையை பற்றியும், கலையை பற்றியும் பேசும். மனதை வருடும் ஒரு அனுபவமாக இருக்கும், படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதை உணர்வீர்கள் என்றார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.

நானும் பாலாஜியும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். இந்த படம் எனக்கு முதல் படமாக கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். கதைக்கேற்ற வகையில் செயற்கைத்தனம் இல்லாமல், யதார்த்தமாக வண்ணங்களில் நிறைய உழைத்திருக்கிறோம் என்றார் ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த்.

தனியாக படம் செய்யும் தன்னம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை, ஆனால் என்னை ஊக்குவித்து எனக்கு ஒரு பக்க கதை படம் கொடுத்தவர் பாலாஜி அண்ணா. அதை தொடர்ந்து இந்த படத்தையும் என்னை நம்பி கொடுத்திருக்கிறார்.

அவர் இயக்கும் ஒவ்வொரு படமுமே தனித்துவமாக இருக்கும். தயாரிப்பாளர்களும் மிகவும் தெளிவானவர்கள், மிகவும் சுதந்திரம் கொடுத்தனர். சேது அண்ணாவுடன் 3 படம் வேலை செய்திருக்கிறேன். அவரை இந்த படம் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்றார் கலை இயக்குனர் வினோத் ராஜ்குமார்.

இந்த படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது விஜய் சேதுபதி கதாபாத்திரம் தான். ஒவ்வொரு காட்சியும் எடிட் செய்யும் போது என்னை அப்படியே கட்டிப் போட்டது.

லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருக்கிறது, ரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் படத்தில் முழுக்க இருக்கிறது என்றார் எடிட்டர் ஆர்.கோவிந்தராஜ்.

சிங்க் சவுண்ட் முறையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. லைவ் சவுண்டில் படம் பிடித்தால் மொத்த குழுவின் ஆதரவும் தேவை. இந்த படத்தில் ஒரு வசனம் கூட டப்பிங் செய்யப்படவில்லை. (அதாவது அனைவருமே சொந்த குரலில் பேசியிருக்கிறார்கள்)

நடிகர்கள் அனைவரின் உழைப்பும் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்றார் அழகிய கூத்தன்.

என்னை நடிக்க வைத்தது, சினிமாவுக்குள் நடிகனாக கூட்டி வந்தது பாலாஜி தான். நாடக கலைஞர்களுடன் இணைந்து நடிக்கும்போது பயமாக இருந்தது. பாலாஜி தான் என்னை ஊக்கப்படுத்தினார்.

விஜய் சேதுபதியின் 25வது படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்றார் நடிகர் ராஜ்குமார்.

நடிகனாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை எனக்கு புரிய வைத்தவர் பாலாஜி. பாலாஜி மிகவும் நிதானமானவர், எல்லா நடிகர்களையும் அழைத்து ரிகர்சல் செய்கிறார். அது படப்பிடிப்பை மிகவும் எளிமையாக்குகிறது என்றார் நடிகர் & இயக்குனர் டிகே.

இந்த படத்தில் நடிக்க நான் தான் பாலாஜியிடம் வாய்ப்பு கேட்டு சென்றேன், அவர் நடுத்தர குடும்ப அழகியலை மிக அழகாக திரையில் கொண்டு வருபவர். அது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் எனக்கு காட்சிகளே கிடையாது என்றார் நடிகர் ஜிஎம் சுந்தர்.

இந்த படத்தை ஒரு ரசிகனாக இருந்து பார்க்கும்போது, ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இதை செய்திருக்கிறார் பாலாஜி என்பது தெரிகிறது என்றார் நடிகர் சாக்ரடீஸ் நீதிதேவன்.

இந்த கதையை அவர் சொன்னபோதே இதை எப்படி அவர் யோசித்தார் என்பது தான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக எந்த ஒரு ஹீரோவும் தங்களது லேண்ட்மார்க் படத்தை ஒரு பெரிய பேனரில், மிகப்பெரிய படமாக தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் விஜய் சேதுபதி 25வது படத்தை எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார்.

அவரின் 50, 75 மற்றும் 100வது படங்களயும் நாங்களே தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்றார் தயாரிப்பாளர் ஜெயராம்.

இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார்.

சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது.

இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் விஜய் சேதுபதி.

இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ், நிர்வாக தயாரிப்பாளர் ஏ குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ்

சிவகார்த்திகேயனுக்கு நிறைய கடன்பட்டிருக்கும் *கனா* ஹீரோ தர்ஷன்

சிவகார்த்திகேயனுக்கு நிறைய கடன்பட்டிருக்கும் *கனா* ஹீரோ தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dharshanநடிகர் தர்ஷனின் கனவு கனா படம் மூலம் நனவாகியிருக்கிறது. தனது முதல் படமான கனா வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் தர்ஷன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் பேனரில் கனா படத்தில் பணிபுரியும்போது கிடைத்த அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

தனது கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது…

“அருண்ராஜா காமராஜ் எனக்கு கிராமத்து பின்னணியில் உள்ள ஒரு பையனை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழங்கினார். இது நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கொண்டது.

எனது கதாபாத்திரம் மற்றும் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆகியவற்றிற்கும் இடையிலான உறவை அவர் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பற்றி தர்ஷன் பேசும்போது…

மிகவும் எமோஷனலாக, “ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையானவற்றை சிறப்பாக செய்யும் சிவகார்த்திகேயன், நான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று உணர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையில், நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி, இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு உண்டாகியிருக்கிறது. பார்வையாளர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், “கனா (கனவு) ஒரு பொதுவான உணர்வு, அல்லவா? எனக்கு மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் படத்துடன் ஒரு வகையான பிணைப்பு இருந்தது. ரசிகர்கள் அவர்களுடைய சொந்த கனவு திரையில் பிரதிபலித்திருப்பதாக உணர்வார்கள்” என்றார்.

சக நடிகர்கள் பற்றி பேசும்போது…

“விருதுகள் மற்றும் பாராட்டுக்களை தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கௌசல்யா’வாக எல்லோர் மனதிலும் நிற்பார். சத்யராஜ் சார் போன்ற ஒரு லெஜண்டுடன் நடித்ததை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.

அவரது சிறிய அமைதியான நடிப்பு கூட பேச முடியாத வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தும்” என்றார் தர்ஷன்.

சீதக்காதி பட டைட்டிலை மாற்ற இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை

சீதக்காதி பட டைட்டிலை மாற்ற இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seethakaathi postersவிஜய்சேதுபதி நடிப்பில் 25வது படமாக வளர்ந்துள்ள படம் சீதக்காதி.

இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ர்.

இப்படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்பட டைட்டில்லை மாற்றக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த கட்சியின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது…

“சீதக்காதி தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்தவர். இஸ்லாமியராக இருந்தாலும், அனைத்து மக்களுக்காகவும், மனித நேயத்திற்காகவும் வாழ்ந்தவர், அப்துல் காதர் என்ற சீதக்காதி.

இவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில், 1698 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சீதக்காதியின் கண்ணியத்தை சீரழிக்கும், எவ்வித நடவடிக்கையையும், இந்திய தேசிய லீக் கட்சி அனுமதிக்காது.

விஜய் சேதுபதி, நல்ல நடிகர். சீதக்காதி என்ற, படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

*ஜாம்பி* சூட்டிங்கை க்ளாப் அடித்து துவக்கி வைத்த பொன்ராம்

*ஜாம்பி* சூட்டிங்கை க்ளாப் அடித்து துவக்கி வைத்த பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano bala‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான் R. இவரின் அடுத்த படமும் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான்.

உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் V.முத்துக்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.

இசை – பிரேம்ஜி, ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், கலை – கண்ணன், படத்தொகுப்பு – தினேஷ், சண்டை பயிற்சி – ஓம் பிரகாஷ், இணை தயாரிப்பு – பாலா அன்பு.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பட பூஜையுடன் ஆரம்பமானது. பிரபல இயக்குநர் பொன்ராம் ‘க்ளாப்’ அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

மனோபாலா நடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது.

More Articles
Follows