தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை, நடன இயக்குனர் என்ற வலம் வந்த காயத்ரி ரகுராம் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கினார்.
இப்படம் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு படு பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார் என்பது வேறுகதை.
இவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்தாலும் அதனை விமர்சித்து ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
இதனால் கடுப்பான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில்… சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இன்றே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இல்லைஎன்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். என்னையோ, ஜுலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.
Gayathri Raguramm @gayathriraguram
Cyber bullying and bad words have to end on social media today or I will give complaints to cyber crime and will find u. Will punish the person and I swear I will do it wether it is hired company or a individual. Wether it’s me or Julie or any one.