யோஹன் விஜய் வேடத்தில் ‘பப்பி’ வருண்; கௌதம் மேனன் முடிவு

யோஹன் விஜய் வேடத்தில் ‘பப்பி’ வருண்; கௌதம் மேனன் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon revives Vijays Yohaan with Puppy hero Varun கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினாலும் இன்னும் ரஜினி அண்ட் விஜய் உடன் கௌதம் மேனன் பணியாற்றவில்லை.

இவர் இயக்கியுள்ள தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் 15ல் வெளியாகும் என அறிவித்தார். மேலும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படமும் தயாராகி வருகிறது.

ஆனால் விஜய்யுடன் இவர் இணையவிருந்த யோஹன்: அத்தியாயம் ஒன்று படம் பல வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு அப்படியே நின்று போனது.

கதையில் விஜய் நிறைய மாறுதல் சொன்னதால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை தொடங்கியுள்ளார் கௌதம் மேனன்.

இந்த படத்தில் பப்பி பட ஹீரோ வருண் நாயகனாக நடிக்கிறார்.

விஜய்க்காக எழுதப்பட்ட யோஹன்: அத்தியாயம் ஒன்று பட கதையை தான் வருண்க்காக கௌதம் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Gautham Menon revives Vijays Yohaan with Puppy hero Varun

இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2 வருதாம்.; ஹீரோ யாரு?

இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2 வருதாம்.; ஹீரோ யாரு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh to direct Iruttu Araiyil Murattu Kuthu sequelசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

இந்த படத்தை முழுக்க முழுக்க பிட்டு படம் போல் டபுள் மீனிங்கில் எடுத்திருந்தார்.

பல நெகட்டிவ் கமெண்டுகளை இந்த படம் பெற்றாலும் இளைஞர்களிடையே வெற்றி பெற்றது.

இதன்பின்னர் ஆர்யா, சாயிஷா இணைந்த கஜினிகாந்த் படத்தை இயக்கினார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் முரட்டு குத்து குத்த இருட்டு அறைக்கு செல்கிறார்.

அட அதாங்க இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

பேண்டசி ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்கவில்லையாம்.
மாறாக புதுமுக நடிகர்களை போட்டு படத்தை எடுக்கவுள்ளாராம்.

இந்த படம் என்ன என்ன சர்ச்சைகளை ஏற்படுத்த போகிறதோ..?

Santhosh to direct Iruttu Araiyil Murattu Kuthu sequel

இந்தியன் 2 படத்தில் 90 வயது கமலுக்கு ரூ 40 கோடியில் சண்டைக் காட்சி

இந்தியன் 2 படத்தில் 90 வயது கமலுக்கு ரூ 40 கோடியில் சண்டைக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 team ready to shoot Rs 40 crore action sequence at Bhopalபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை முடித்து விட்டு தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் முழு கவனத்தை செலுத்0தி வருகிறார். இப்படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமலுடன் காஜல், சித்தார்த், விவேக், டெல்லி கணேஷ், பிரியா பவானி சங்ர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் பொள்ளாச்சி மற்றும் சென்னையில் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டும் ரூ. 40 கோடியை செலவழிக்கின்றனர்.

பீட்டர் ஹெயின் அமைக்கும் இந்த சண்டைக் காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த காட்சியின் படி கமலுக்கு 90 வயது என்பதால் அதற்கேற்ப காட்சிகளை அமைத்து வருகிறாராம்.

ரஜினியின் தர்பார் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை மட்டும் பீட்டர் ஹெயின் தான் அமைத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2 team ready to shoot Rs 40 crore action sequence at Bhopal

‘தடம்’ தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்; அருண்விஜய் யார்.?

‘தடம்’ தெலுங்கு ரீமேக்கில் நிவேதா பெத்துராஜ்; அருண்விஜய் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethuraj plays lead role in Thadam Telugu remakeமகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் சூப்பர் ஹிட் படம் ‘தடம்’.

இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கிஷோர் திருமலா என்பவர் இந்தப்படத்தை இயக்க நடிகர் ராம் பொத்தினேனி அருண்விஜய் கேரக்டரில் நடிக்கிறார்.

வித்யா பிரதீப் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அவரின் வேடத்தில் நிவேதா பெத்துராஜ் நடிக்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nivetha Pethuraj plays lead role in Thadam Telugu remake

மேனேஜர்கள் யூனியன் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கனும்.. – சங்க விழாவில் நாசர் பேச்சு

மேனேஜர்கள் யூனியன் தயாரிப்பாளருக்கு உதவியாக இருக்கனும்.. – சங்க விழாவில் நாசர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association திரைப்படங்களின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை வழங்கி வந்த கேஸ்டிங் டைரக்டர்கள் எனப்படும் நடிப்பு இயக்குனர்கள், தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து ‘தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கத்திணை’ தங்களுக்கென உருவாக்கியுள்ளனர்.

மேலும் இச்சங்கத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றுபவர்கள் இதில் ஒரு அங்கமாக உள்ளனர்.

இச்சங்கமானது வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு ஒரு நல்ல உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

இதனை வழி நடத்த திரைத்துறையின் ஜாம்பவான்களான நடிகர் மற்றும் இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்கள் கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆலோசகர்களாக இயக்குனர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் திரு. டி ஜி தியாகராஜன், நடிகை ‘ஊர்வசி’ அர்ச்சனா மற்றும் மக்கள் தொடர்பாளர் திரு டைமண்ட் பாபு ஆகியோர் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர்.

இச்சங்கத்தின் தலைவராக திரு மனோஜ் கிருஷ்ணா, செயலாளராக ஜெனிஃபர் சுதர்சன், பொருளாளராக வேல் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் துவக்கவிழா சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் நாசர் பேசும்பொழுது

நடிக்க வாய்ப்பு தேடுகிறவர்களுக்கும், நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கும் மேனேஜர்கள் மிக அவசியம், அப்படிப்பட்ட மேனேஜர்கள் யூனியனாக செயல்படுவது தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நடிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவங்களுக்கும் பாலமாக இருப்பவர்கள், அதுபோல கேஸ்ட்டிங் டைரக்டர் பணி தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவமானதாக இல்லை, இனி அந்த வேலையும் முக்கியமானதாக இருக்கும். இந்த சங்கத்தினருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என்றார்.

விழாவில் நடிகர் நாசர், பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்‌ஷி அகர்வால், அர்ச்சனா, உள்ளிட்ட திரைத்துறை நடிகர் நடிகைகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association

Launch of South Indian film Casting Directors and Celebrity Managers Association

விஜய்-அஜித் படங்களை ரிலீஸ் செய்ய பிரபல தியேட்டர் மறுப்பு

விஜய்-அஜித் படங்களை ரிலீஸ் செய்ய பிரபல தியேட்டர் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We wont release Vijay and Ajith movies says Ramba theatreதீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் ரிலீசானால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா? என பலர் ஏமாற்றத்துடன் காத்திருக்க, விஜய் படத்தை திரையிட மாட்டோம் என திருச்சியில் உள்ள ரம்பா தியேட்டர் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தியேட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

திருச்சியில் உள்ள பல தியேட்டர்களில், பிகில் படம்தான் வெளியாகிறது.

எனவே ஒரே படத்தை ரிலீஸ் செய்யாமல் கார்த்தியின் கைதி படத்தை ரிலீஸ் செய்கிறம்.

மேலும் பட ரிலீசின் போது விஜய் அஜித் பெரும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

தியேட்டரிலும் அடாவடித்தனம் தாங்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.

தியேட்டர் சீட்டுக்களை நாசப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே அவர்களின் படங்களை திரையிடுவதை தவிர்க்கிறோம்.” என கூறப்பட்டுள்ளது.

We wont release Vijay and Ajith movies says Ramba theatre

More Articles
Follows