வாதாபிராஜனாக ‘ருத்ரதாண்டவம்’ ஆடும் கௌதம் மேனன்..; ‘திரௌபதி’ இயக்குனருடன் கூட்டணி

Gautham Menonஜி மோகன் இயக்கிய திரௌபதி திரைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே தனது அடுத்த படத்தின் வேலையை உடனே துவக்கினார் மோகன்.

அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘ருத்ரதாண்டவம்’ என அறிவித்தார்.

திரௌபதி பட ஹீரோ ரிச்சர்ட் இதிலும் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஜி.எம். பிலிம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் ஜிபின் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாதாபிராஜன் என்ற முக்கிய கேரக்டரில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Gautham Menon joins with Mohan for Ruthra Thandavam movie

Overall Rating : Not available

Latest Post