மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை
மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார்.

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோவின் VFX மற்றும் சமீரா சனீஷின் ஆடை
வடிவமைப்பு என மிக அட்டகாசமான தொழில்நுட்ப குழு முழு உழைப்பைத் தந்துள்ளது. இந்த அற்புதமான குழுவின் உழைப்பில் மோலிவுட்டில் புதிய கதை சொல்லலை அறிமுகப்படுத்தும், புதுமையான அனுபவத்தை இப்படம் தரும்.

“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்…

Footage from 2nd August in theatres

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

*தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’*

பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’.

இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

Kalki 2898 AD movie box office collection

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக கடந்த நான்கு ஆண்டுகளில் உருவான படம் ‘இந்தியன் 2’.

ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இதில் கமல்ஹாசன் உடன் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கும்போது இந்த காட்சிகளை படமாக்கிய சங்கர் தற்போது அவர்கள் காட்சிகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் இந்தியன் 2 பாகத்தில் இல்லை இந்தியன் 3 பாகத்தில் அவர் இருப்பதாக ஷங்கர் தெரிவித்து இருந்தார்.

லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து தற்போது ப்ரமோஷன் பணிகளி ஈடுபட்டு வருகிறது.

மேலும் கமல் சங்கர் அனிருத் சித்தார்த் சிம்ஹா உள்ளிட்ட லைக்கா குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

அடுத்த வாரம் ஜூலை 12ஆம் தேதி இந்த படத்தை பிரமாண்டமாக திரையரங்கில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் ‘இந்தியன் 2’ பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு அலங்கரித்தனர்.

இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளனர். இது மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Indian2 promotions in Dubai sky goes viral

HARAA OTT வயசு பொண்ணுக்கு லீவு… எல்லாருக்கும் தெரிஞ்சாகனும் சட்டம்.. மோகன் அட்வைஸ்

HARAA OTT வயசு பொண்ணுக்கு லீவு… எல்லாருக்கும் தெரிஞ்சாகனும் சட்டம்.. மோகன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HARAA OTT வயசு பொண்ணுக்கு லீவு… எல்லாருக்கும் தெரிஞ்சாகனும் சட்டம்.. மோகன் அட்வைஸ்

இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவான படம் ‘ஹரா’.

கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ என்ட்ரி கடந்த ஜூன் மாதம் வெளியானது.. 1980களில் நடிகர் மோகனை ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் இந்த ஹரா படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக பார்த்து ரசித்தனர்.

இதில் மோகன் ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடித்து இருந்தார். யூனிவர்சல் சப்ஜெக்டாக உருவான இப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ புகழ் கௌஷிக் மற்றும் ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை வேண்டும் என கருத்து சொல்லப்பட்டது.. இது வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையானது.. ஆனால் இந்தியா தவிர சில நாடுகளில் மாதவிடாய் நாட்களுக்கு பெண்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரித்துள்ளார்..

இந்த நிலையில் திரையரங்குகளில் மக்கள் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஜூலை 5ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

ஜூலை 5 இன்று ஓடிடி-யில் வெளியான மற்ற படங்களை விவரங்கள் இதோ…

ஆஹா:

மார்க்கெட் மகாலட்சுமி
(market mahalakshmi)

ஹரா (Harra)
நெட்பிளிக்ஸ்:

டெஸ்பரேட் லைஸ் (Desperate Lies)

கோயோ (Goyo)

அமேசான் பிரைம்:

மிர்சாபூர் சீசன் 3 (Mirzapur Season 3)

ஜியோ சினிமா:

ஹி வெண்ட் தட் வே (He Went That Way)

சோனி லிவ்:

மலையாளி பிரம் இந்தியா (Malayali From India)

Haraa and other OTT movie release updates

அஜித்தின் ‘விடாமுயற்சி’ சூட்டிங் – ரீலீஸ் – சாட்டிலைட் அப்டேட் கொடுத்த லைக்கா

அஜித்தின் ‘விடாமுயற்சி’ சூட்டிங் – ரீலீஸ் – சாட்டிலைட் அப்டேட் கொடுத்த லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ சூட்டிங் – ரீலீஸ் – சாட்டிலைட் அப்டேட் கொடுத்த லைக்கா

*லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!*

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர்.

‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது,..

“எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்), சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு), மற்றும் ஜிகேஎம் தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.. மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

Vidaamuyarchi shoot Release and Satellite update

கெட்டவனை விட கெட்டதை அழிக்கணும்..; விஜய் ஆண்டனி & விஜய் மில்டன் சொல்லும் தத்துவம்

கெட்டவனை விட கெட்டதை அழிக்கணும்..; விஜய் ஆண்டனி & விஜய் மில்டன் சொல்லும் தத்துவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கெட்டவனை விட கெட்டதை அழிக்கணும்..; விஜய் ஆண்டனி & விஜய் மில்டன் சொல்லும் தத்துவம்

*’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா…

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..

“இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”.

இயக்குநர் விஜய் மில்டன்..

” இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘கருடன்’, ‘மகாராஜா’ என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்தப் படமும் அந்த வரிசையில் சேரும்”.

தயாரிப்பாளர் டி. சிவா….

“படங்களின் வசூலை பொருத்தவரை தமிழ் சினிமா மோசமான நிலையில் உள்ளது. திரையரங்கிற்கே வராதீர்கள் என்றோ, தரம் தாழ்ந்தோ தயவு செய்து ஊடகங்கள் விமர்சனம் செய்து பார்வையாளர்களை வரவிடாமல் செய்து விடாதீர்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் போலதான். உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. விஜய் மில்டன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி தலைகனம் பிடிக்காத மனிதர். அவருடைய கடின உழைப்பிற்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். உங்கள் ஆதரவு அதற்கு தேவை”.

இயக்குநர் சசி…

, “‘ரோமியோ’ படத்திற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிக்க ஆரம்பித்த படம் இது. கதையின் மீதும் இயக்குநர் மீதும் அதிக நம்பிக்கைக் கொண்டவர் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்’ எனப் படத்தின் டைட்டில் சொன்னபோது பலர் மாற்ற சொல்லி சொன்னார்கள்.

ஆனால், அந்த டைட்டிலை மாற்றாமல் நம்பிக்கை வைத்தவர் விஜய் ஆண்டனி. அதுபோலதான் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவாக இருந்தாலும் கதையின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.

நடிகர் விஜய் ஆண்டனி…

“என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். ‘பிச்சைக்காரன்’ படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான்.

சத்யராஜ், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார்.

இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைதான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Mazhai Pidikadha Manidhan will have social message

More Articles
Follows