உனக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை; கண்ணா இது காலா ட்ரைலர் விமர்சனம்

உனக்கு அதிகாரம்; எங்களுக்கு வாழ்க்கை; கண்ணா இது காலா ட்ரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth in kaalaபெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது.

இந்த ட்ரைலர் குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் 1 நிமிடம் 30 நொடிகள் மட்டுமே இருந்தது.

தொடங்கிய சில நிமிடங்களில் படத்தின் வில்லன் நானா படேகர் வசனம் பேசுகிறார்.

ஒரு வட இந்திய அரசியல்வாதி தமிழ் பேசுவது போல் பேசுகிறார்.

அதில்.. இந்த குடிசை பகுதிகளை இருக்கும் அழுக்கு, வறுமை, இந்த இருளை பிரகாசமா மாத்த போறேன் என மேடையில் பேசுகிறார்.

அதன்பின்னர் வழக்கம் போல ரஜினி பெயர் கொண்ட் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு வருகிறது.

பின்னர் ரஜினியின் ரொமான்ஸ் காட்சிகள் வருகிறது.

அதில் ஒரு இடம் விடாம அவ பின்னாடி சுத்தினேன் என தன் காதலை சமுத்திரக்கனியிடம் சொல்கிறார் ரஜினி.

அதன்பின்னர் 2வது நாயகி ஹீமா குரேஷி என்னை அவ்வளவு பிடிக்குமா? என்று ரஜினியிடம் கேட்கிறார்.

அதற்கு ரஜினி ரொம்ப என்கிறார். இதில் வழக்கம்போல காலா கருப்பு உடையில் இல்லாமல் கிரே கலர் கோட் சூட் போட்டு இருக்கிறார்.

இதனையடுத்து ரஜினி மகன், அப்போ அப்பாவுக்கு உன் மேல லவ்வே இல்லையா? என்று அம்மா ஈஸ்வரி ராவிடம் கேட்கிறார்.

போடா போ.. காலா கிட்ட போய் கேளு என ஈஸ்வரி சொல்கிறார்.

அதன்பின்னர் ரஜினி ஐ லவ் யூ டீ என்று ஈஸ்வரி (மனைவி)யிடம் சொல்ல, அவரோ காதை பொத்துகிறார். (முதிர்ந்த வயது மற்றும் நாணம் காரணமாக இருக்குமோ..?)

பின்னர் ஒரு சிறுமி நானா படேகரிடம் அவரது பேத்தி யாரூ காலா தாதா (டான்) என கேட்கிறார்.

அவர் ஒரு ராவண் என் அவர் சொல்ல…. ஒத்த தல ராவணா என்ற பாடல் ஒலிக்கிறது.

அடுத்து ஒரு பைட் சீன். ரஜினி மாஸாக வருகிறார்.

அடுத்து யாராவாது என்னை எதிர்க்கனும் நினைச்சா மரணம்தான் என்று நானா படேகர் சொல்ல, சமுத்திரக்கனி அடிக்கிறார்கள்.

பின்னர் ஒரு கலவரம். அதில் போலீஸ்காரர்கள் மக்களை தாக்குகிறார்கள்.

ரஜினியை தாக்க யாரோ வரும்போது ஹீமா குரேஷி கரிகாலா பின்னாடி திரும்பிப்பார் என்ற வகையில் கத்துகிறார்.

இவைகளை அடுத்து பெரும் திரளான மக்கள் கூட்டத்தில் ரஜினி வேகத்துடன் பன்ச் பேசுகிறார்.

இந்த உடம்புதான் நமக்கு இருக்கிற ஒரே ஆயுதம். இந்த உலகத்துக்கே தெரியப்படுத்துவோம். கூட்டுங்கடா மக்கள என்கிறார்.

ஏனா உனக்கு அதிகாரம். எங்களுக்கு வாழ்க்கை என ஒரு சேரில் அமர்ந்து மக்களின் உரிமைக்காக பன்ச் பேசுகிறார்.

அதன் பின்னணியில் எங்கள் வறுமையை ஒழிக்க போராடுவோம் என பாடல் ஒலிக்க காலா டிரைலர் நிறைவடைகிறது.

ஆக மொத்தம் இன்றைய அரசியலை சாடும் படமாக காலா இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

First on Net Rajinikanth Kaala trailer review

இன்று காலா ட்ரைலர் ரிலீசுக்கும் ரஜினி உடல்நிலைக்கும் உள்ள கனெக்ஷன்

இன்று காலா ட்ரைலர் ரிலீசுக்கும் ரஜினி உடல்நிலைக்கும் உள்ள கனெக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth in kaalaஇன்று மே 28ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இதனை தனுஷ் காலையில் அறிவித்திருந்தார்.

ரஜினி படங்கள் என்றாலே எல்லா தரப்பிலும் பெரும் எதிர்பார்க்கும் இருக்கும்.

ஆனால் இன்று காலையில் அறிவித்து மாலையில் வெளியிட என்ன காரணம்? என பொதுவான ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.

அந்த குழப்பத்தை நீக்கும் வகையில் ரஜினியின் 2வது மகள் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

7 வருடங்களுக்கு முன், அதாவது 2011 ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இதே நாளில்தான் சிங்கப்பூருக்கு எங்கள் அப்பா கொண்டு செல்லப்பட்டார்.

உங்கள் பிரார்த்தனையால் அவர் மீண்டும் புதுப்பொலிவுடன் குணமாகி வந்தார்.

அந்த அன்பிற்குத்தான் இந்த ட்ரைலரை இன்று வெளியிடுகிறோம் என அறிவித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

Big Breaking: காலா டிரைலர் ரிலீஸ் நேரத்தில் மாற்றம்; கடுப்பில் ரசிகர்கள்

Big Breaking: காலா டிரைலர் ரிலீஸ் நேரத்தில் மாற்றம்; கடுப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaalaரஜினி நடித்துள்ள காலா பட டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்தார்.

ஆனால் இப்போது தொழில்நுட்ப
காரணத்தால் நேரம் மாற்றம் என தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் கடுப்பாவார்கள் எனத் தெரிகிறது.

ஆனால் தனுஷ் தாமத தகவலை தெரிவித்து விட்டார் என்பது ஆறுதல்.

Due to technical reasons there will be a slight delay in the launch of kaala new trailer. It will be out before 7 30 pm. Thank you.

Breaking: காலா ரிலீஸ்; லீவ் லெட்டரை ரெடி செய்ய தனுஷ் வலியுறுத்தல்

Breaking: காலா ரிலீஸ்; லீவ் லெட்டரை ரெடி செய்ய தனுஷ் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush request fans to keep the leave letters ready for Kaala releaseரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’.

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படம் ஜீன் 7ல் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 28ஆம் தேதி மாலை 7 மணிக்கு இதன் ட்ரைலர் வெளியிட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

கூடவே, காலா வருகிறார். அந்த படத்தை பார்க்க உங்கள் பள்ளிகளில், வேலை செய்யும் நிறுவனங்களில் லீவு எடுக்க லெட்டரை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Dhanush request fans to keep the leave letters ready for Kaala release

Dhanush‏Verified account @dhanushkraja 7m7 minutes ago
Wunderbar films #kaala new trailer will be released today evening at 7 pm .. #thekingarrives #manofmasses #thalaivar #superstar WORLD WIDE RELEASE FROM JUNE 7Th. Mark the date. Keep the leave letters ready.

kaala june 7 release

Breaking : இன்று காலா ட்ரைலர் ரிலீஸ்; தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Breaking : இன்று காலா ட்ரைலர் ரிலீஸ்; தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush announces Kaala movie trailer release dateரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜீன் 7ல் வெளியாகவுள்ள நிலையில் இன்று மே 28ஆம் தேதி மாலை 7 மணிக்கு இதன் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

இத்தகவலை சற்றுமுன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

Dhanush announces Kaala movie trailer release date

Dhanush‏Verified account @dhanushkraja 7m7 minutes ago
Wunderbar films #kaala new trailer will be released today evening at 7 pm .. #thekingarrives #manofmasses #thalaivar #superstar WORLD WIDE RELEASE FROM JUNE 7Th. Mark the date. Keep the leave letters ready.

மெர்சலுக்கு பிறகு கிடைத்தாலும் காலா-வுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா பெருமை

மெர்சலுக்கு பிறகு கிடைத்தாலும் காலா-வுக்கு கிடைத்த எக்ஸ்ட்ரா பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush announces Kaala movie trailer release dateசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்துக்கான பிரத்யேக எமோஜியை அதிராகப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.

வட இந்தியாவில் பல படங்களுக்கு எமோஜி ட்விட்டரில் கிடைத்துள்ளது.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் இதற்கு முன் விஜய் நடித்த மெர்சல் படத்திற்குதான் முதன்முறையாக இந்த பெருமை கிடைத்திருந்தது.

ஆனால் ஒரே நேரத்தில் 4 மொழிகளில் காலா படத்திற்கு கிடைத்திருப்பது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

( #Kaala, #காலா, #కాలా or #कालाकरिकालन )

அதாவது.. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் ‘காலா’ என டைப் செய்யும் போது ரஜினிகாந்தின் ‘காலா’ போஸ்டர் ஒன்று எமோஜியாக தானாகவே பதிவாகும்.

இது சில குறிப்பிட்ட நாட்களுக்கு டுவிட்டரில் நடைமுறையில் இருக்கும்.

Superstars Rajinis Kaala got Emoji in twitter in 4 languages

More Articles
Follows